‘பெண் என்றால் வெறும் உடல் அல்ல’ – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 05 செப்டம்பர் 2019

கல்­லா­னா­லும் கண­வன்... புல்­லா­னா­லும் புரு­ஷன் ‘அல்­லவா’? காத­லும் திரு­ம­ண­மும் இந்த உல­கின் வெகு அழ­கான விஷ­யங்­கள். மனம் கவர்ந்த ஆணின் முதல் தொடு­தல், ஒரு பெண்­ணுக்­குக் கொடுக்­கும் இன்­பங்­களை வார்த்­தை­க­ளில் விவ­ரிக்க முடி­யாது. தடை­கள் நிரம்­பிய, அச்­சு­றுத்­தல் நிரம்­பிய உல­கில் தனக்­கான ஒரே நிம்­ம­தி­யாக அவள் தேடு­வது, தன் மனம் கவ­ரும் ஓர் ஆணையே. அவ­னி­டம் தன்னை முழு­மை­யாக ஒப்­ப­டைப்­ப­வள், அவ­னுக்­கா­கத் தன் வாழ்­வையே மாற்­றிக்­கொள்­வாள். அதனை அறி­யாமை, இய­லாமை, பெண்­க­ளின் கடமை என்று கூறு­வது முட்­டாள்­த­னம். இன்­று­வரை தலை­கோ­த­லுக்­காக ஏங்­கும் எத்­த­னையோ மனை­வி­கள் உண்டு. ஆனால், இரு­ம­னங்­கள் ஒத்து இணை­வ­து­தான் அழ­கான குடும்ப வாழ்­வின் அடிப்­படை என்­ப­து­கூ­டத் தெரி­யாத சமூ­கத்­தில், மனை­வி­யின் ஆசை­கள் குறித்­துப் பேச என்ன இருக்­கி­றது?

இந்த உல­கம் உயிர்ப்­பு­டன் தொடர்ந்து இயங்­கி­வ­ரு­வ­தற்­கான கார­ணங்­கள் காத­லும் காம­மும். காதல் பொங்­கிய கணம் முதல், குழந்தை பிறப்­பது வரை நாம் கொண்­டாட தவ­று­வ­தில்லை. பாடல்­க­ளில், கதை­க­ளில், திரைப்­ப­டங்­க­ளில் கொண்­டா­டு­கி­றோம். ஆனால், இரண்­டா­வது வார்த்­தைக்­கான அர்த்­தத்­தில் என்று மாற்­றங்­கள் உண்­டாக்­கப்­பட்­டதோ அன்று தொடங்­கி­யது, சக உயி­ரின் உடல்­மீ­தான வன்­மு­றை­கள். காதல், திரு­ம­ணம் என்­ப­தற்­கான அர்த்­த­மும் மாற்­றம் பெற்­றது. காதல் என்­றால் எதிர் பாலி­னம் மீதான அன்­பும், ஒரு­வ­னின் (ஒருத்­தி­யின்) உடல் அவன் (அவள்) உரிமை என்ற புரி­த­லும்­தானே? இந்­தப் புரி­தல் இல்­லாத தொடு­தல் மிக மோச­மான வன்­முறை. அது திரு­ம­ணத்­துக்கு முன்­பு­தான் வன்­முறை; திரு­ம­ணத்­துக்­குப் பின்பு கண­வ­னால் என்­றால் வன்­முறை அல்ல என்று சொல்­வது சரி­யான முறை­யல்ல.

இந்த உல­கில் மிகுந்த வலி கொடுக்­கும் தாக்­கு­தல்­க­ளுள் ஒன்று பாலி­யல் வன்­முறை. திரு­ம­ணம் முடிந்து எத்­த­னையோ ஆசை­க­ளோ­டும் கன­வு­க­ளோ­டும் இருக்­கும் ஒரு பெண்­ணுக்கு, கண­வ­னின் உடல் இச்­சை­க­ளைத் தீர்க்­கும் ஓர் உடல் மட்­டுமே நீ எனச் சொல்­வது எவ்­வ­ளவு வலி­யைக் கொடுக்­கும்? அந்த வலிக்கு மருந்து கொடுக்­கா­மல், அவள் கண்­ணீ­ருக்­குப் பதில் சொல்­லா­மல், மறு­ப­டி­யும் மறு­ப­டி­யும் குடும்­பம் என்­கிற பெய­ரில் அதே நர­கக் குழி­யில் தள்­ளு­வது எவ்­வ­ளவு கொடூ­ரம்? அதைக் கொடூ­ரம் என­வும் சட்­டம் கூறா­மல் இருப்­பது எந்த விதத்­தில் நியா­யம்?

2008 முதல் 2018 வரை, திரு­ம­ண­மான பெண்­க­ளில் 60 சத­வி­கி­தம் பேர் பாலி­யல் வல்­லு­ற­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தா­கப் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. திலாசா மையம் என்­பது, ‘பிர­ஹன்’ மும்பை மாந­க­ராட்­சி­யும், ‘சிஹாட்’ என்­னும் அரசு சாரா அமைப்­பும் இணைந்து உரு­வாக்­கிய, வன்­கொ­டு­மை­க­ளால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு உள­வி­யல் ரீதி­யான ஆலோ­சனை வழங்­கும் மையம். இங்கே ஆலோ­சனை பெற்ற பெண்­க­ளில் 79 சத­வீ­தம் பேர், தங்­கள் கண­வர்­க­ளால் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தைத் தெரி­வித்­துள்­ளார்­கள். பல பெண்­க­ளுக்கு மருத்­துவ உத­வி­கள் வழங்­கப்­பட்­ட­போது, அந்­த­ரங்க உறுப்­பு­க­ளில் காயங்­கள் இருப்­பது தெரிந்­தது. சட்­டம் இந்த விஷ­யத்­தில் என்ன சொல்­கி­றது என்­பதை அறிய வழக்­க­றி­ஞர் கவி­ய­நா­த­னி­டம் சில விஷ­யங்­க­ளைப் பேசி­னோம்.

“பாலி­யல் வன்­பு­ணர்வு என்­ப­தற்கு இந்­தி­யச் சட்­டம் கொடுக்­கும் வரை­யறை என்ன?”

“பெண்­ணின் விருப்­பத்­திற்கு மாறா­கவோ, பெண்­ணின் சம்­ம­தத்தை மிரட்­டிப் பெற்றோ, பெண்­ணைப் பொய்­யாக நம்­ப­வைத்து அவள் சம்­ம­தத்­தைப் பெற்று அல்­லது மயக்க மருந்து தந்­தும் தன் உணர்வை இழந்த நிலை­யில் பெண்­ணி­டம் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ய­ப­வர்­கள், மேலும், ஒரு பெண், தான் கொடுக்­கும் சம்­ம­தத்­தின் தன்­மை­யைப் புரிந்­து­கொள்­ளாத நிலை­யில், அந்­தச் சம்­ம­தத்­தின் விளை­வு­களை அறிந்­து­கொள்­ளாத நிலை­யில், பெண் 16 வய­துக்கு உட்­பட்­ட­வ­ளாக இருந்­தால் அவ­ளு­டன் ஒரு ஆண் உட­லு­றவு கொள்­வ­தைத்­தான் சட்­டம் தண்­ட­னைக்­கு­ரிய பாலி­யல் வன்­பு­ணர்வு என்று கூறு­கி­றது. இதற்கு ஒரு விதி­வி­லக்கு இருக்­கி­றது. அதா­வது, ஒரு­வர் தன் மனை­வி­யோடு அந்த மனைவி பதி­னைந்து வய­துக்கு உட்­பட்­ட­வ­ளாக இல்­லாத போது கொள்­ளும் பாலி­யல் உட­லு­றவு வன்­பு­ணர்ச்சி ஆகாது. இந்த ஒரு விதி­வி­லக்கு மட்­டும் உண்டு.”

“அப்­ப­டி­யென்­றால், ஒரு மனைவி ‘கண­வன் என் விருப்­ப­மின்றி என்­னு­டன் உட­லு­றவு கொள்­கின்­றான்’ எனக் குற்­றம் சாட்­டி­னால் எந்த செ­க்ச­னின் கீழ் வழக்­குப் பதிவு செய்ய முடி­யும்?”

“செ­க்ச­ன் 376(டி) படி பிரிந்து வாழ்­வ­தற்­காக வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­ணை­யின் கீழ் தனி­யாக வாழும் தன் மனை­வி­யு­டனோ அல்­லது பிரிந்து வாழும் தன் சொந்த மனை­வி­யு­டனோ அவ­ரின் சம்­ம­த­மின்றி உட­லு­றவு கொள்­ளும் கண­வ­னுக்கு இரண்­டாண்­டு­கள் வரை தண்­டனை கொடுக்க இய­லும். இந்த செ­க்ஷ­னின் கீழ் கூட பிரிந்து வாழும் மனை­வி­க­ளால்­தான் தன் கண­வர்­க­ளுக்கு எதி­ராக இப்­ப­டி­யொரு வழக்­கி­னைப் பதிவு செய்ய இய­லும். சேர்ந்து வாழும் மனை­வி­யாய் 15 வய­துக்கு மேலுள்­ள­வ­ளாக இருந்­தால் பாலி­யல் வல்­லு­றவு என்று சொல்­லவே முடி­யாது. ஆனால், கண­வன் மனை­வி­யைப் பாலி­யல் ரீதி­யாய் துன்­பு­றுத்­தி­னால் இயற்­கைக்கு மாறான குற்­றங்­க­ளைப் பதிவு செய்­யும் செ­க்ச­ன் 377 கீழ் வழக்­குப் பதிவு செய்ய வாய்ப்­பி­ருக்­கி­றது.” என்­கி­றார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிற­கான பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு எதி­ராக ஒரு சட்­டம் இயற்ற நீதித்­துறை மறுக்க முதன்­மை­யான கார­ணம், பெண்­கள் அதனை ஆண்­க­ளுக்கு எதி­ராக உப­யோ­கிக்­க­லாம் என்­ப­து­தான் என்று பர­வ­லா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. கண் முன்பு எத்­த­னையோ பெண்­கள் உடல்­ரீ­தி­யா­க­வும் மன­ரீ­தி­யா­க­வும் சித்­ர­வதை செய்­யப்­ப­டு­கி­றார்­கள். அவர்­களை மீட்­டெ­டுக்க வழி­யைத் தேட உதவ வேண்­டி­யது நீதித்­து­றை­யின் முதன்­மை­யான வேலை. வர­தட்­சணை தடுப்­புச் சட்­டம் போன்ற சட்­டங்­க­ளைப் பெண்­கள் சிலர், ஆண்­க­ளுக்கு எதி­ரா­கப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­பது உண்­மை­தான். அதே­ச­ம­யம், அந்­தச் சட்­டத்­தால் எத்­த­னையோ பெண்­க­ளுக்கு நீதி கிடைத்­தி­ருப்­ப­தும் மறுக்­க­மு­டி­யாத உண்­மை­தானே?

‘என்­ன­தான் சட்­டம் கொண்­டு­வந்­தா­லும், பெண்­கள் இதைக் குறித்­துப் பேசத் தயங்­கு­வார்­கள், கூச்­சப்­ப­டு­வார்­கள்’ என்ற குர­லும் கேட்­கி­றது. காலம் கால­மாக தன் உடலை மறைத்தே பழ­கிய பெண்­க­ளுக்கு, இந்­தக் கொடு­மையை வெளி­யில் சொல்ல தயக்­கம் இருக்­கும் என்­பது உண்­மை­தான். தனக்கு நீதி வழங்க எந்த நீதி­மன்­ற­மும், வழக்­குப் பதி­வு­செய்ய எந்­தச் சட்­ட­மும் இல்­லாத நிலை­யில், எந்த நம்­பிக்­கை­யில் ஒரு பெண் தனக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­க­ளைச் சொல்ல முன்­வ­ரு­வாள்? இதில் வேத­னை­யான விஷ­யம் என்­ன­வென்­றால், பெரும்­பா­லான பெண்­கள் இதை ஒரு குற்­ற­மா­கவே கரு­து­வ­தில்லை. தன் உட­லைத் தின்ன கொடுத்தே மடிந்­து­போன முந்­தைய தலை­முறை பெண்­கள், அடுத்­த­டுத்த தலை­முறை பெண்­க­ளுக்­கும் அதைப் பாட­மா­கக் கடத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.

இங்கே திரு­ம­ணம் என்ற சொல்­லுக்­குப் பின்­னால் எத்­த­னையோ மேற்­பூச்­சுக்­கள் பூசப்­பட்­டுள்­ளன. திரு­ம­ணத்­துக்­குப் பிற­கான பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு எதி­ரா­கச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டால், அந்­தப் பூச்­சு­கள் அனைத்­தை­யும் கலைத்­து­வி­டும். அந்­தச் சட்­டம் ‘பெண் என்­றால் வெறும் உடல் அல்ல’, ‘திரு­ம­ணம் என்­பது பெண் உடலை அனு­ப­விக்­கும் பாத்­தி­யதை தரும் சடங்­கல்ல’ என்று இந்­தச் சமூ­கத்­துக்கு உணர்த்­தும். பால் வேற்­று­மையை ஒழிக்­கத் தேவைப்­ப­டும் ஒரு வலு­வான ஆயு­த­மாக மாறும். என்று கிடைக்­கும் அந்­தச் சட்­டம் என்­கிற சுதந்­தி­ரம்?