மூட்டு வலிக்கு போனார் யூ டியூப் சேனல் ஆரம்பித்தார் – லட்சுமி

பதிவு செய்த நாள் : 05 செப்டம்பர் 2019

பெண்களுக்குள் ஏதாவது ஒருதிறமை ஒளிந்திருக்கும் சிலர் அதனை கண்டுபிடித்து சாதனைப் பெண்களாகின்றனர். மற்ற சிலருக்கு தூண்டுகோல்கள் மூலம் அந்தத் திறமை வெளிவந்து சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தை பெற்றுத் தரும். கரூரைச் சேர்ந்த சரஸ்வதிவிற்கும் அப்படித் தான் ஒரு தூண்டுகோல் மூலம் அவரது நளபாக சமையல் யூடியூப் மூலம் இன்று உலகம் முழுவதும் உலா வருகிறது.

கரூர் அரு­கே­யுள்ள அர­வக்­கு­றிச்­சி­யைப் பூர்­வி­க­மா­கக் கொண்ட சரஸ்­வதி, செட்­டி­நாடு சிமென்ட் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்­து­வந்த அசோ­கனை திரு­ம­ணம் செய்­து­கொண்டு கரூ­ரின் மரு­ம­க­ளா­னார். கண­வர், மகள், குடும்­பம், அன்­றாட வேலை­கள் என வாழ்க்கை அதன் போக்­கில் சென்­று­கொண்­டி­ருக்க, 4 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மூட்­டு­வலி பிரச்­னைக்­காக சிகிச்சை எடுக்­கச் சென்­ற­வ­ருக்கு வாழ்க்­கையை முன்­னேற்­றப் பாதை­யில் கொண்டு செல்­வ­தற்­கான விடி­வள்ளி கிடைத்­தி­ருக்­கி­றது.

கோவை­யில் இருக்­கும் நேச்­சு­ரோ­பதி மையத்­தில் நான் சிகிச்­சைக்­காக சென்­றி­ருந்­தேன். அப்­போது என்­னு­டைய அறை­யி­லேயே தங்கி இருந்த சென்­னை­யைச் சேர்ந்த உத்­ரா­லட்­சு­மி­யின் அறி­மு­கம் கிடைத்­தது. சிகிச்சை நேரம் போக மற்ற நேரங்­க­ளில் நாங்­கள் பேசிக் கொண்­டி­ருந்த போது உத்­ரா­விற்கு சமை­யல் சம்­மந்­த­மாக நிறைய டிப்ஸ் சொன்­னேன். இதைப் பார்த்­த­தும் உத்ரா “நீங்­கள் வாயைத் திறந்­தாலே டிப்ஸ்­க­ளாக கொட்­டு­கின்­றன ஏன் நீங்­கள் ஒரு யூடி­யூப் சேனல் தொடங்­கக் கூடாது,” என்று கேட்­டார்

அவர் கூறி­ய­தைக் கேட்டு பெரு­மை­யாக இருந்­தா­லும் நான் +2 தான் படித்­தி­ருக்­கி­றேன். அவ்­வ­ள­வாக கணினி அறிவு இல்லை என்று கூறி­ய­தாக தெரி­விக்­கி­றார் சரஸ்­வதி. தொழில்­நுட்­பம் பற்றி தெரி­யா­விட்­டா­லும் மகள் மற்­றும் கண­வர் இரு­வ­ருமே இன்ஜி­னி­யர் என்­ப­தால் அவர்­க­ளின் உத­வி­யோடு யூடி­யூப் சேனலை சாத்­தி­ய­மாக்க முடி­யும் என்று நம்­பிக்கை கொடுத்­துள்­ளார் உத்ரா.

மூட்­டுப் பிரச்­னைக்­குத் தீர்வு காண சென்­ற­வர் புது உத்­வே­கத்­து­டன் கரூர் திரும்பி வாழ்க்­கை­யின் முன்­னேற்­றப் பாதையை நோக்கி வெற்றி நடை போடத் தொடங்­கி­யுள்­ளார்.

ஊருக்­குத் திரும்­பி­ய­துமே நடந்­த­வற்றை கண­வ­ரி­ட­மும் மக­ளி­ட­மும் கூறி­னேன். அவர்­க­ளும் என்­னு­டைய ஆர்­வத்தை பார்த்து உத்­ரா­வி­டம் பேசி விவ­ரங்­களை கேட்டு 2015ல் ’சர­சுஸ் சமை­யல்’ (Sarasus samayal) என்ற யூடி­யூப் சேனல் உத­ய­மா­னது,” என்று மகிழ்ச்­சி­யோடு கூறு­கி­றார் சரஸ்­வதி அசோ­கன்.

வழக்­க­மாக சமைக்­கும் இட­மாக இருந்­தா­லும் முதல்­மு­றை­யாக வீடியோ கேமரா முன்பு சமைத்த போதும் பயம், பதற்­றம் என பர­ப­ரப்­பாக இருந்­தது. கேரட் கீர் செய்து பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட வீடியோ 10 நாட்­க­ளில் ஆயி­ரம் பார்­வை­யா­ளர்­களை பெற்­றது. இந்த இனிப்­பான தொடக்­கமே 4 ஆண்­டு­க­ளைக் கடந்து என்னை இயங்க வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றது என்று புன்­ன­கைக்­கி­றார் சரஸ்­வதி.

இள­சு­கள் வட்­ட­மி­டும் சமூ­க­வ­லை­த­ளத்­தில் 54 வய­தில் யூடி­யூப் சேனல் மூலம் உழைப்­புக்கு ஏற்ற வரு­மா­னத்­தை­யும் தனக்­கான அங்­கீ­கா­ரத்­தை­யும் பெற்­றுள்­ளார் சரஸ்­வதி. தன்­னு­டைய இந்த வளர்ச்­சிக்­குக் கார­ண­மாக இருந்த கண­வர், மகள் மற்­றும் 90 வய­தைக் கடந்து தன் வேலை­க­ளைத் தானே செய்து கொண்டு இன்­ற­ள­வும் சரஸ்­வதி அம்­மா­விற்கு ஆசா­னாக இருந்து வரும் அவ­ரின் தாயா­ருக்­கும் நன்­றி­களை தெரி­வித்­துக் கொள்­கி­றார் சரஸ்­வதி.