கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 04–09–19

பதிவு செய்த நாள் : 05 செப்டம்பர் 2019

இதுவும் அதுவும் (திஸ் அண்ட் தேட்)

ஒரு உண­வ­கத்­தில் உட்­கார்ந்­து­கொண்டு, நெய் ரோஸ்­டுக்­காக ஆர்­டர் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள்.

நேரம் ஆவ­தைப் பொறுத்­துக்­கொண்­டீர்­கள். கூடு­தல் நேர­மா­னால் ரோஸ்ட் இன்­னும் முறு­க­லாக இருக்­கும் என்­பது உங்­கள் நினைப்பு !

பதி­னைந்து நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு உங்­கள் மேஜை­யில் ஸர்­வர் தட்­டைக் கொண்டு வைத்­தார்.

பார்த்­தால் சப்­பாதி குருமா!

கொண்டு வந்து வைத்­த­வ­ரி­டம் நீங்­கள் கேட்­கி­றீர்­கள்…'வாட் இஸ் திஸ்? ' What is this? இது என்ன?

சப்­ளை­யர் (ஸர்­வரை அப்­ப­டி­யும் அழைக்­கி­றார்­கள், அல்­லவா…?) விழிக்­கி­றார்.

அப்­போது சற்று தள்­ளி­யுள்ள இன்­னொரு மேஜையை நீங்­கள் பார்க்­கி­றீர்­கள். அங்கே அமர்ந்­தி­ருப்­ப­வ­ருக்கு முன் நெய் ரோஸ்டு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த நப­ரும், நான் இதற்கு ஆர்­டர் செய்­ய­வில்­லையே என்­கிற முகக்­கு­றி­பைக் காட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்.

அப்­போது, அதைக் காட்டி, 'வாட் இஸ் தேட்? ' (What is that?) என்று நீங்­கள் கேட்­கி­றீர்­கள். அது என்ன என்று பொருள்.

அப்­போ­து­தான் அந்த ஸர்­வ­ருக்கு (சப்­ளை­ய­ருக்கு), தான் செய்த உணவு மாற்­றம் புரி­கி­றது. ரோஸ்­டை­யும் ரொட்­டி­யை­யும் மாற்­றிக்­கொ­டுத்­து­விட்­டி­ருக்­கி­றார்.

அரு­கில் உங்­கள் முன் இருப்­பது 'திஸ்' this. அதை விடத் தள்­ளி­யி­ருப்­பது 'தேட்' that.

இது (திஸ் this) என்­னு­டைய பெட்டி. அது (தேட் that) அவ­ரு­டைய பெட்டி. திஸ் இஸ் மை பாக்ஸ் (This is my box). தேட் இஸ் ஹிஸ் பாக்ஸ் (That is his box).

இது என்­னு­டைய கருத்து. 'திஸ் இஸ் மை வியூ'.This is my view. அது அவ­னு­டைய கருத்து. 'தேட் இஸ் ஹிஸ் வியூ'. That is his view.

திஸ் இஸ் மோகன்…­தேட் பர்­ஸன் தேர்…­இஸ் ஹிஸ் ஸிஸ்­டர். This is Mohan..That person there is his sister. இது மோகன். அதோ அந்த நபர்…­அ­வள் அவ­னு­டைய சகோ­தரி.

திஸ் புக் இஸ் ஹெவி. This book is heavy. இந்­தப் புத்­த­கம் கன­மாக இருக்­கி­றது.  தேட் புக் இஸ் லைட். That book is light. அந்­தப் புத்­த­கம் லேசாக இருக்கு.

லைட் (light)  என்­பது ஒளி, விளக்கு என்ற பொரு­ளில் மட்­டும் இல்­லா­மல், கனம் குறைந்த, லேசான என்ற அர்த்­தத்­தில்  மேற்­படி வாக்­கி­யத்­தில் வந்­தி­ருக்­கி­றது.

அதன் பல­வி­த­மான உப­யோ­கங்­களை சில வாக்­கி­யங்­க­ளில் காண்­போம்.

பிளான்ட்ஸ் நீட்d வாடர் அண்ட்d ஸன்­லைட். Plants need water and sunlight. தாவ­ரங்­க­ளுக்கு நீரும் சூரிய ஒளி­யும் தேவை.

டர்ன் ஆஃப் த லைட்ஸ் வென் யூ லீவ் த ரூம்…Turn off the lights when you leave the room. அறையை விட்­டுப் போகும் போது விளக்­கு­களை ஆஃப் செய்து விடுங்­கள்.

லைட் டிரா­வெல்ஸ் ஃபாஸ்­டர் தேன் சவுண்டு. Light travels faster than sound. ஒளி, ஒலியை விட அதிக வேகத்­தில் செல்­கி­றது.

லைட் என்­பது அளவு, படி­நிலை (டிdக்ரி) ஆகி­ய­வற்­றில் குறை­வான என்ற பொரு­ளில் பல­வி­த­மா­கப் பயன்­ப­டு­கி­றது.

லைட்டா ஒரு கப் டீ கொடுப்பா.

லைட்டா கிண்­டல் பண்­ணா­லும் அவ­னுக்கு ரொம்ப கோபம் வந்­து­டும்.

ஹீ டச்ட்d மீ லைட்லி ஆன் மை ஷோல்­டர். He touched me lightly on my shoulder. அவர் என்­னு­டைய தோளை மெல்­லத் தோட்­டார்.

இன்­னொரு வாக்­கி­யம்  --  அவர் அந்த விஷ­யத்­தைப் பற்­றிப் பேசிய பிற­கு­தான் அதை வேறு கோணத்­தில் என்­னால் பார்க்க முடிந்­தது. ஒன்லி ஆஃப்­டர் ஹீ ஸ்போக் அப­வுட் தேட் மேட்­டர், ஐ குட் ஸீ இட் இன் அ டிஃபெ­ரென்ட் லைட். Only after he spoke about that matter, I could see it in a different light.

இந்த வாக்­கி­யத்­தில் ஸ்போக் (spoke) என்­பது ஸ்பீக் (speak) என்ற வினைச்­சொல்­லின் இறந்த கால வடி­வம். ஐ குட் ஸீ I could see = என்­னால் பார்க்க முடிந்­தது.

எப்­ப­டிப் பார்க்க முடிந்­தது?…ஒரு மாறு­பட்ட , வேறு­பட்ட கோணத்­தில் என்­பது 'டிஃபெ­ரென்ட் லைட்' (different light) என்­கிற சொற்­க­ளால் குறிக்­கப்­ப­டு­கி­றது.

நிறங்­க­ளைப் பற்­றிப் பேசும் போது, வெளி­றிய நிறங்­க­ளைக் குறிக்க, லைட்  பிளூ (light blue), லைட் கிரீன் (light green) என்­றெல்­லாம் பயன்­ப­டுத்­து­கி­றோம்.

கடி­ன­மற்ற, களைப்­பூட்­டாத, அறி­வுக்­குக் கூடு­தல் வேலை கொடுக்­காத என்ற பொரு­ளி­லும் 'லைட்' (light) பயன்­ப­டு­கி­றது…

'ஐ ஹேட் அ லைட் டிஃபென்…' லைட்டா ஒரு டிபன் சாப்­பிட்­டேன்.

ஐ ஹேவ் அ லைட் ஹெட்d ஏக். I have a light headache. எனக்கு லேசாக தலை வலிக்­கி­றது அல்­லது எனக்கு லேசான தலை­வலி இருக்­கி­றது.

ரொம்ப ஹெவியா புஸ்­த­க­மெல்­லாம் கொடுக் காதீங்க..லைட்டா படிக்க ஒரு நாவல் கொடுங்க…Don’t give me heavy stuff…give me a novel for light reading…டோன்ட் கிவ் மீ ஹெவி ஸ்டஃப்…­கிவ் மீ அ நாவல் ஃபார் லைட் ரீdடிங்

மீண்­டும் 'தேட்'டுக்கு (that) வரு­வோம்.

அதோ அந்­தப் பறவை போல வாழ­வேண்­டும்…

வொன் மஸ்ட் லிவ் லைக் தேட் பர்ட்d தேர். One must live like that bird (there  -- இன் த ஸ்கய்..வானில் இருக்­கும் அல்­லது பறக்­கும்).

திஸ்  (this) என்­றால் இது என்­கிற போது தேட்  என்­றால் அது…

ஒரு­வர் அரு­மை­யான ஒரு ஜோக் அடிக்­கி­றார்…

அதைக் கேட்டு ரசித்­த­வர், 'ஐ லைக்  தேட்' I like that என்­கி­றார்.

காவல் துறை அதி­காரி தன்­னு­டைய டிரை­வ­ரி­டம் கூறி­னார், ஃபால்லோ தேட் கார் (Follow that car). அந்­தக் காரைப் பின்­தொ­டர்ந்து செல்.

ஹூ இஸ் தேட் பாய்/ கர்ல்/ மேன்? Who is that boy/girl/man? யார் அந்­தப் பையன்/ பெண்/ மனி­தன்?

குட்d யூ ரிப்­பீட் தேட்? Could you repeat that? அதை இன்­னொரு முறை நீங்­கள் கூற இய­லுமா? அதா­வது, அதை இன்­னொரு முறை கூறு­கி­றீர்­களா?  

(யூ) கிவ் மீ தேட் ஹேம்­மர். (You)  Give me that hammer. (நீ) அந்த சுத்­தியை என்­னி­டம் கொடு.

பயிற்சி பலன் தரும். விடா முயற்சி நிறை­வைத் தரும். நேரத்தை வீணாக்­கா­மல் முன்­னே­றிக்  கொண்டே இருந்­தால், வெற்­றிக்­க­னி­யைப் பறிக்­க­லாம்.

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in