சாதிக்க துாண்­டிய ஆசி­ரியை!

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2019

நடுத்­தர வரு­மான குடும்­பத்­தில் பிறந்த, ஐந்து பெண்­க­ளில் மூத்­த­வள் நான். திருப்­பூர் மாவட்­டம், பாளை­யக்­காடு, மூ.ந.முரு­கப்­பச் செட்­டி­யார் பெண்­கள் மேல்­நி­லைப் பள்­ளி­யில், 1990ல், 6ம் வகுப்பு படித்­தேன்.

கனி­வும், பொறு­மை­யும் நிறைந்­த­வர், வகுப்பு ஆசி­ரியை தன­பாக்­கி­யம். பொறுப்­பு­டன் பாடம் நடத்தி, அக்­க­றை­யு­டன் கவ­னித்­துக் கொள்­வார்.

காய்ச்­ச­லால் ஒரு நாள், வகுப்­பில் சோர்­வாக இருந்­தேன். அதைக் கண்ட ஆசி­ரியை, மதிய உணவு இடை­வே­ளை­யில், வீட்­டிற்கு அழைத்­துச் சென்­றார்; ரசம் சாதம் சாப்­பிட வைத்து, மருந்­தும் கொடுத்­தார். இந்த செயல், அவர் மீதான மரி­யா­தை­யை­யும், அன்­பை­யும் பன்­ம­டங்கு உயர்த்­தி­யது.

தேர்­வு­க­ளில், முதன்மை மதிப்­பெண் பெறும் போதெல்­லாம், 'சாதிக்க வேண்­டி­யது நிறைய இருக்­கி­றது... மகிழ்ச்­சி­யில் தேங்­கி­வி­டாதே... இன்­னும் முயற்சி செய்...' என்று உற்­சா­க­மூட்­டு­வார்.

கல்­லுா­ரி­யில் சேர்ந்த பின்­னும், சந்­திப்­பேன். நல்ல ஆலோ­ச­னை­கள் வழங்கி, சிறப்­பாக வாழ நம்­பிக்கை ஊட்­டி­னார். குடும்­பத்­தில் ஒரு­வ­ராக சுக, துக்­கங்­க­ளில் பங்­கேற்று அறி­வுரை வழங்கி வரு­கி­றார்.

அவர் தந்த நம்­பிக்­கை­யால், ஆயத்த ஆடை ஏற்­று­மதி நிறு­வ­னம் ஒன்றை நிறுவி, 18 ஆண்­டு­க­ளாக வெற்­றி­க­ர­மாக நிர்­வ­கித்து வரு­கி­றேன். என் ஒவ்­வொரு வெற்­றி­யி­லும், அவ­ரது பாராட்­டும், உற்­சா­கம் தரும் அறி­வு­ரை­யும் நிறைந்­தி­ருக்­கி­றது. அவரை போல ஆசி­ரி­யர் வாய்த்­து­விட்­டால், எப்­ப­டிப்­பட்­ட­வ­ரும் வாழ்க்­கை­யில் சாதிக்க முடி­யும். அவ­ரது கனி­வான சேவை­யை­யும், அக்­கறை நிறைந்த ஆர­வ­ணைப்­பை­யும் வணங்­கு­கி­றேன்.

–- நித்­ய­கல்­யாணி, திருப்­பூர்.