முளைக்­கீரை பால் மசி­யல்!

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2019

தேவை­யான பொருட்­கள்: முளைக்­கீரை - 1 கட்டு, எண்­ணெய் - 100 கிராம், மிள­காய் வற்­றல் - 3, பால் - 1 மேஜைக்­க­ரண்டி, கடுகு, சீர­கம், உளுந்­தம் பருப்பு - 1 தேக்­க­ரண்டி.

செய்­முறை: முளைக்­கீ­ரையை, நன்­றாக கழுவி, பொடி­யாக நறுக்­கிக் கொள்­ள­வும். வாண­லி­யில், எண்­ணெய் ஊற்றி, சீர­கம், உளுந்­தம் பருப்பு, கடுகு, மிள­காய் வற்­றல் போட்டு, தாளிக்­க­வும். பின், நறுக்­கிய கீரை­யைப் போட்டு, உப்பு சேர்த்து கிள­ற­வும். இந்த கல­வையை, நன்கு மசி­யும் வரை வேக வைத்து, கடை­ய­வும். கீரை குழைந்­த­தும், பால் ஊற்றி, மீண்­டும் கடைந்து இறக்­க­வும். சத்­து­மிக்க, 'முளைக்­கீரை பால் மசி­யல்' தயார். மதிய உண­வு­டன் சேர்த்­துக் கொள்ள லாம்.

இந்த மசி­யல் வாசனை, நாவில் எச்­சில் ஊற வைக்­கும்; குழந்­தை­கள் விரும்பி உண்­பர்.

-–- கா.திவ்யா, திண்­டுக்­கல்.