‘‘போருக்கு போன மன்னர் பாதி வழியிலேயே பின் வாங்கிட்டாரே.... எதுக்கு?’’
‘‘சமாதான கொடியை அரண்மனையிலேயே விட்டுட்டு வந்துட்டாராம்...!’’
– தி. சிவசங்கரி, விழுப்புரம்.
‘‘மன்னர் போருக்கு வெற்றுடம்புடன் செல்கிறாரே.... ஏன்?’’
‘‘மன்னர் உடம்புல ஏற்கனவே இருக்கிற காய வடுக்களை பார்த்து எதிரி மன்னன் விட்டுடுவான்னு தான்!’’
– எம். சரவணன், திருவண்ணாமலை.
‘‘என்னை எப்போ டிஸ்சார்ஜ் செய்வீங்க.... டாக்டர்?’’
‘‘உங்களுக்கு ரொம்ப அவசரம்ன்னா இன்னொரு பேஷன்டை கூட்டி வந்து இந்த பெட்ல அட்மிட் செய்துட்டு நீங்க போலாமே!’’
– என். ஜெ. மகாலிங்கம், ஊட்டி.
‘‘புது டாக்டர் ஒரு போலின்னு எப்படி சொல்றே?’’
‘‘ரவுண்ட்ஸ் போகணும் கிளம்புங்கன்னு சொன்னதுக்கு ஸ்கூட்டர்லயா கார்லயான்னு கேக்குறாரே...!’’
– லெ.நா. சிவக்குமார், சென்னை.
‘‘பாடி பிழைப்பது உங்களுக்கே கேவலமா தெரியலையா புலவரே?’’
‘‘ஓடி பிழைப்பதை விடவும் இது எவ்வளவோ மேல் மன்னா!’’
– எஸ். ரீனு, சென்னை.