பாட்டிமார் சொன்ன கதைகள் – 232 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2019


நீர் யார்?

அது கேட்ட ரிஷி­கு­மா­ரன் ஜடை­யாக முடிந்­தி­ருந்த தலையை அசைத்­துக் கொண்டே, சிரித்­தான். ராஜ­கு­மா­ரன் அவ­னைப் பார்த்து ` சத்­தி­ய­மா­கச் சொல்­லு­கி­றேன். எப்­போ­தும் உனக்கு பிரி­ய­மா­ன­தையே செய்­வேன்’ என்­றான். இரு­வ­ரும் சேர்ந்து தனுர் வேதத்­தி­லும்  ஊக்­கத்­து­டன் பழகி வந்­தார்­கள்.

 அந்த பிர­ம­சா­ரி­கள் பிரிந்து வெகு கால­மாகி விட்­டது. ராஜ­கு­மா­ரன் பாஞ்­சால தேசத்­தின் அர­ச­னா­கித்  துரு­ப­தன் என்ற பேரும், புக­ழும் பெற்று ஐஸ்­வ­ரி­ய­மும் அதி­கார ஆடம்­பர வைப­வங்­க­ளும் நிரம்­பி­ய­வ­ னா­யி­ருந்­தான்.  ரிஷி­கு­மா­ரனோ வித்­தையே தனங்­க­ளுக்­கெல்­லாம் தனம் என்ற கொள்­கை­யோடு மேலும் மேலும் வேத சாஸ்­திர ஆராய்ச்­சி­யி­லும் தனுர் வேத ஆராய்ச்­சி­யி­லும் ஈடு­பட்டு துரோ­ணர் என்­றும் துரோ­ணா­சா­ரி­யார் என்­னும் பேரும் புக­ழும் பெற்­றான். நாள­டை­வில் இரு­வ­ரும் விவா­கம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்­த­லா­னார்­கள். ஆனால் அந்த நிலை­யில் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சந்­திக்­க­வில்லை. சந்­திப்­ப­தற்கு அவ­சி­ய­மும் ஏற்­ப­ட­வில்லை.

 துரோ­ண­ருக்கு அசு­வத்­தாமா என்ற குழந்தை பிறந்­தான். குழந்­தை­யி­டன் அவ­ருக்­குப் பிரி­யம் அதி­கம். அவன் என்ன விரும்­பி­னா­லும் கொடுக்க வேண்­டு­மென்ற விருப்­ப­முண்டு. ஆனால் என்ன செய்­வார் ? பரம ஏழை. பக்­கத்­தி­லுள்ள பணக்­கா­ரர் வீருப் பிள்­ளை­கள் பசும் பால் குடிப்­பார்­கள். அதைக் கண்டு குழந்தை அழு­வான். ` அவ­னுக்­காக நாம் ஏன் பணம் சேர்க்­கக்­கூ­டாது ‘ என்று எண்­ணி­னார் துரோ­ணர். பல­த­டவை நாடெல்­லாம் சுற்­றித் திரிந்­தார். கறக்­கிற ஒரு பசு கிடைக்­கா­மற் போயிற்று.

 அரி­சி­மாக் கரைத்த தண்­ணீ­ரைக் கொடுத்­துக் குழந்­தையை ஏமாற்­றி­னார். ` அப்பா. இது­தான் பாலா ?’  என்று அசு­வத்­தாமா மழ­லைச் சொல்­லால் கேட்­பான். ` இது மாவின் பால் ‘ என்று பதில் சொல்­வார் துரோ­ ணாச்­சா­ரி­யர். குழந்தை ` நானும் பால் குடித்­தேன் ‘ என்று மகிழ்ந்து கூத்­தா­டு­வான்.` ஆவின் பாலுக்­குக்  இணை­யாக மாவின் பாலா ? ‘ என்று ஜனங்­கள் பரி­கா­சம் செய்­வார்­கள். மற்­றக் குழந்­தை­க­ளும் அசு­வத்­தா­மா­வைச் சுற்றி சிரித்­துக் கொண்டே கூத்­தா­டும். துரோ­ணர் மனம் இடிந்து போயிற்று. தம்­மைத் தாமே நிந்­தித்­துக் கொண்­டார்.

 துரோ­ணா­சா­ரி­யார் தம்­மு­டைய தர்­ம­பத்­தி­னி­யி­டம் கூட அந்­தப் பிரி­ய­மான புதல்­வ­னை­யும் அழைத்­துக் கொண்டு துரு­பத ராஜ­னி­டம் போனார். பழைய சினே­கத்­தை­யும் அந்த வாக்­கை­யும் நினைத்து நினைத்­துத் தமக்கு வேண்­டிய செல்­வ­மெல்­லாம் கிடைத்­து­விட்­ட­தா­க­வும் கவலை தீர்ந்­து­விட்­ட­தா­க­வும் மகிழ்ந்து போனார். மகா­ரா­ஜாவை நெருங்­கி­னார். அவன் இவரை முன் அறி­யா­த­வன் போல்  சும்மா இருந்­து­விட்­டான். ` பழைய சினே­கி­த­னில்­லையா ?’ என்று ஞாப­கப்­ப­டுத்­தி­னார். துரு­ப­தன் சிரித்­துக் கொண்டு ` என்ன நெஞ்­சத் துணிவு! என்ன புத்­திக் குறைவு! பரம தரித்­தி­ர­ரா­கிய உமக்­கும் முடி­மன்­ன­னா­கிய எனக்கு எப்­படி சினே­கம் இருக்க முடி­யும் ‘ என்­றான்.

 துரோ­ண­ருக்கு உள்­ளுக்­குள்ளே ஆத்­தி­ரம். இராஜ்­யத்­தைப் பற்றி அவன் செய்த பிர­திக்­ஞை­யைக் கூட ஞாப­கப் படுத்­திப் பார்த்­தார். அர­ச­னுக்கோ அந்த ஞாப­கம் வர­வே­யில்லை. துரோ­ண­ருக்கு  இப்­போது தேவை­யா­னது ஒரு பசு மாடு­தான். பாதி ராஜ்­ய­மல்ல, அர­சனோ புரு­வங்­கலை நெறித்­துக் கொண்டு கண் சிவந்­த­வ­னாக, ` அதிர்ஷ்­டம் இல்­லா­த­வரே ! ஒரு ராத்­திரி மட்­டும் நம் சத்­தி­ரத்­தில் சாப்­பிட்டு விட்­டுப் போங்­கள் ‘ என்று சொல்­லி­விட்­டான். அப்­போது மனை­வி­யு­ட­னும், மக­னு­ட­னும் பாஞ்­சால ராஜ்­யத்­தி­லி­ருந்து கிளம்­பி­விட்­டான்.

 அஸ்­தி­னா­பு­ரத்­திற்கு வெளி­யே­யுள்ள ஒரு மைதா­னத்­தில் ராஜ­கு­மா­ரர்­கள் உற்­சா­க­மாய் பந்து விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தார்­கள். அப்­போது தர்­ம­புத்­தி­ர­னு­டைய மோதி­ரம் கிணற்­றில் விழுந்­தது. பந்­தும் விழுந்­து­விட்­டது. கிணற்­றின் தெளிந்த நீரி­னால் மூடப்­பட்டு ஆகா­யத்­தில் நட்­சத்­தி­ரம் தெரி­வது போல் காணப்­பட்ட அந்த மோதி­ரத்தை குனிந்து பார்த்­துக் கொண்டே அந்­தக் குமா­ரர்­கள் கிணற்­றை­யும் சுற்றி நின்று, ` அதை எப்­படி எடுக்­க­லாம் ?’ என்று ஆலோ­ச­னை­யின் ஆழ்ந்­தார்­கள். ` பந்­தைத்­தான் எப்­படி எடுக்­க­லாம் என்ற ஆலோ­ச­னை­யும் கூட. ` விளை­யாட்டு நின்­று­விட்­டதே ‘ என்ற வருத்­தத்­தோடு வெட்­க­மும் அடைந்­தார்­கள்.

 அப்­போது அங்கே நரைத்­தும் இளைத்­து­மி­ருந்த ஒரு பிரா­ம­ணர் வந்­தார். தரித்­தி­ரன் அவ­தா­ரம் என்று சொல்­லும்­ப­டி­யி­ருந்­தார். அவர் ராஜ­கு­மா­ரர்­க­ளைப் பார்த்து மெல்­லச் சிரித்து நய­மா­கப் பேசத் தொடங்­கி­னார். ` என்ன அஸ்­ர­வித்தை நீங்­கள் கற்று இருப்­பது ? பந்­தை­யும் மோதி­ரத்­தை­யும் எடுக்­கா­ம­லி­ருக்­கி­றீர்­களே ?’ என்று சொல்­லிக் கொண்டே ஒரு ஈர்க்­கி­னால் பந்தை எடுத்­தார். அந்த ஈர்க்கை மற்­றொன்­றி­னா­லும் அதை வேறொன்­றி­னா­லும் அப்­படி சேர்த்து வந்து, பந்­தைக் சீக்­க­ரத்­தில் எடுத்து விட்­டார். ஆச்­ச­ரி­யத்­தால் மலர்ந்த கண்­க­ளோடு ராஜ­கு­மா­ரர்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கும்­போதே துரோ­ணர் அம்பு ஒன்றை செலுத்தி மோதி­ரத்­தை­யும் மேலே கொண்டு வந்­து­விட்­டார். பந்­தை­யும் மோதி­ரத்­தை­யும் அவர்­க­ளி­டம் கொடுத்து ஆசீர்­வ­தித்­தார்.

 கெள­ர­வர்­க­ளும், பாண்­ட­வர்­க­ளும் அவரை நமஸ்­க­ரித்து ` இவ்­வ­ள­வும் சாமர்த்­தி­யம் மற்­ற­வர்­க­ளி­ட­மில்லை. எங்­கள் குரு­வான கிரு­பா­சா­ரி­ய­ரி­டத்­தி­லு­மில்லை. நீர் யார் ?’ என்று கேட்­டார்­கள். அதற்கு அவர் ` என் உரு­வத்­தை­யும் செய­லை­யும் பீஷ்­மா­சா­ரி­யா­ரி­டன் சொல்­லுங்­கள். அவர் அறிந்து கொள்­வார் ‘ என்று  பதில் சொன்­னார். பிறகு அவர்­கள் ` உமக்கு நாங்­கள் என்ன செய்ய வேண்­டும் ?’ என்று கேட்­டார்­கள். பதி­யோ­டி­ருந்த அவர்,  ` எனக்­குப் போஜ­னம் கொடுங்­கள் ‘ என்­றார்.  உடனே தர்­ம­புத்­தி­ரன் ` கிரு­பா­சா­ரி­யா­ரின்  அனு­ம­தி­யின் மேல் சாச்­வ­த­மான போஜ­னத்தை நீர் அடை­ய­லாம்’ என்று சொன்­னான்.

( தொட­ரும்)