கம­லியை மணக்க மன­நோ­யாளி முயற்சி!

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2019

ராஜ் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 6-.30 மணிக்கு ‘மண்­வா­சனை’ ஒளி­ப­ரப்­பில் உள்­ளது.

குடும்ப உற­வு­க­ளின் பின்­ன­ணி­யில் எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளு­டன் நக­ரும் இதில், நிர்­மலா அறைக்கு தன்னை புறக்­க­ணித்­து­விட்டு சென்ற முகுந்­த­னின் நட­வ­டிக்­கை­களை மாதவி கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றாள்.

தனது திரு­ம­ணத்தை நிறுத்­தும்­படி பெற்­றோ­ரி­டம் கமலி கெஞ்­சு­கி­றாள். அந்த நபர் வய­தா­ன­வரை போன்று இருப்­ப­தா­க­வும், அவ­ருக்கு இரண்டு குழந்­தை­கள் இருப்­ப­தா­க­வும் பெற்­றோ­ரி­டம் கூறி கமலி கெஞ்­சு­கி­றாள். இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த அவ­ளது தந்தை வர­த­ரா­ஜன், கம­லியை அடிக்­கி­றார். இதனை அறிந்த நிர்­மலா, கம­லிக்கு ஆறு­தல் கூறி உணவு அருந்­தும்­படி கூறு­கி­றாள்.

சரிதா மற்­றும் ஆனந்­தி­டம் நித்யா அலட்­சி­ய­மாக நடந்து கொள்­கி­றாள். நித்யா குறித்து சிவ­ரஞ்­சன் சிவத்­தி­டம் ஆனந்தி முறை­யி­டு­கி­றாள். இதை­ய­டுத்து, தனது தவ­று­க­ளுக்­காக நித்யா மன்­னிப்பு கேட்­கி­றாள். எனி­னும், நித்­யாவை வீட்­டுக்கு அழைத்­துச் செல்­லும் அவ­ளது தாயா­ரின் விருப்­பத்தை ஆனந்தி தடுக்­கி­றாள். இத­னி­டையே, நிர்­ம­லா­வி­டம் முகுந்­தன் தவ­றாக நடக்­கி­றார். இவற்­றை­யெல்­லாம் தாண்டி, மன­நிலை பாதிக்­கப்­பட்ட நபர் கம­லியை திரு­ம­ணம் செய்ய முயற்­சிப்­பதை கண்டு, அனை­வ­ரும் அதிர்ச்சி அடை­கின்­ற­னர்.