சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 408 – எஸ்.கணேஷ்

03 செப்டம்பர் 2019, 05:48 PM

விஜய், ரகு­வ­ரன்,  ராஜன் பி.தேவ், கரண், ஸ்ரீமன், தாமு, சுவ­லட்­சுமி,  மந்­தரா, பிந்து பணிக்­கர், பாபி பேடி உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்த இப்­ப­டத்தை பால­சே­க­ரன் இயக்கி இருந்­தார். சூப்­பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி இப்­ப­டத்தை தயா­ரித்­தி­ருந்­தார். ஷிவா எனும் புது­முக இசை­ய­மைப்­பா­ளர் இசை­ய­மைத்­தி­ருந்­தார். 1997ம் ஆண்டு வெளி­வந்த இப்­ப­டம் பெரிய வசூல் சாத­னையை புரிந்­தது. படம் பற்றி பார்ப்­போம்… ரகு­வ­ரன் தன் மகன் விஜய்யை முழு சுதந்­தி­ரம் கொடுத்து தன் தோழ­னைப்­போல நடத்தி வரு­கி­றார்.

கடு­மை­யான இயல்பு கொண்ட போலீஸ் அதி­காரி ராஜன் பி.தேவின் மகள் சுவ­லட்­சு­மியை ஒரு­நாள் சந்­திக்­கும் விஜய் அவர் மீது காதல் கொள்­கி­றார்.

படிப்­பைத் தவிர வேறு எதி­லும் கவ­னம் செலுத்த விரும்­பாத சுவ­லட்­சுமி, தன் வாழ்க்­கை­யில் காத­லுக்கு இட­மில்லை என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றார். ஆயி­னும் சுவ­லட்­சுமி தின­மும் வரும் பேருந்து நிறுத்­தத்­துக்­குத் தொடர்ந்து வரும் விஜய், சுவ­லட்­சு­மி­யின் உள்­ளத்­தில் குடி­புக நினைக்­கி­றார்.

தன் மக­னின் காதலை அறிந்த ரகு­வ­ரன் மேற்­கொண்டு பேச சுவ­லட்­சு­மி­யின் வீட்­டுக்­குச் செல்ல அவரை அவ­மா­னப்­ப­டுத்தி அனுப்­பு­கி­றார் ராஜன் பி.தேவ்.

தன் மக­ளும் காதல் வ­லை­யில் வீழ்ந்து விடு­வாளோ என்ற சந்­தே­கத்­தில், மகளை அழைத்­துக்­கொண்டு பெங்­க­ளூ­ரு­வுக்­குப் புறப்­ப­டு­கி­றார் ராஜன் பி.தேவ்.

சுவ­லட்­சு­மியை சந்­திப்­ப­தற்­காக பெங்­க­ளூரு செல்­கி­றார் விஜய். செல்­வ­தற்கு முன் தன் நண்­பர்­க­ளி­டம் தன்­னைத் தொடர்­பு­கொள்ள தொலை­பேசி எண் ஒன்­றை­யும் கொடுக்­கி­றார்.

இந்த சூழ்­நி­லை­யில் ரகு­வ­ரன் விபத்து ஒன்­றில் சிக்கி மர­ண­ம­டை­கி­றார். விஜய் கொடுத்த தொலை­பேசி எண் உள்ள காகி­தத்தை நண்­பன் ஒரு­வன் கிழித்து எறிந்து விட்­ட­தால், தந்தை இறந்த தக­வலை விஜய்க்கு தெரி­விக்க முடி­யா­மல் போய்­வி­டு­கி­றது. பெற்ற மகன் இல்­லாத கார­ணத்­தால் ரகு­வ­ர­னுக்கு விஜய்­யின் நண்­ப­ரான கரண் இறு­திச் சடங்­கு­க­ளைச் செய்­கி­றார்.

ரகு­வ­ரன் இறந்த செய்தி சுவ­லட்­சு­மிக்­குத் தெரிய வரு­கி­றது. தன்­மீது கொண்ட காத­லால்­தானே விஜய்க்கு இவ்­வ­ளவு பெரிய இழப்பு என்று நினைக்க ஆரம்­பிக்­கும் அவர், விஜய் மீது காதல் கொள்­கி­றார். விஜய்யை சந்­தித்து தன் காதலை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

காத­லுக்­காக தான்­பட்ட அவ­மா­னங்­க­ளை­யும் இழப்­பு­க­ளை­யும் சுவ­லட்­சு­மி­யி­டம் எடுத்­துக்­கூ­றும் விஜய், 'இவ்­வ­ளவு வேத­னை­க­ளுக்­குப் பிற­கு­தான் உன் காதல் கிடைக்­கும் என்­றால் அந்த பாழாய்ப்­போன காதல் எனக்­குத் தேவையே இல்லை' என்று சொல்­லி­விட்டு, தந்தை இறப்­ப­தற்­கு­முன் தனக்­காக ஏற்­பாடு செய்­தி­ருந்த வேலை­யில் சேர்­வ­தற்­குச் சென்று விடு­கி­றார்.

1998ம் ஆண்டு பவன் கல்­யாண், தேவ­யானி நடிக்க 'சுஸ்­வா­க­தம்' என்ற பெய­ரில் தெலுங்­கில் தயா­ரிக்­கப்­பட்ட இந்­தப் படத்தை, கன்­னட நடி­கர் துவா­ர­கீஷ் தன் மகன் கிரி துவா­ர­கீஷை நாய­க­னாக வைத்து 2002ம் ஆண்டு 'மஞ்சு' என்ற பெய­ரில் கன்­ன­டத்­தில் இயக்­கி­னார்.

அப்­தாப், அமியா படேல் நடிக்க 2002ம் ஆண்டு 'கயா யேஹி பியார் ஹை' என்ற பெய­ரில் இந்­தி­யி­லும் உரு­வா­னது 'லவ் டுடே.' யாரும் எதிர்­பா­ராத வகை­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த உச்­சக்­கட்ட காட்­சி­தான் படத்­தின் மிகப் பெரிய வெற்­றிக்­குக் கார­ண­மாக அப்­போது பேசப்­பட்­டது. பால­சே­க­ரன் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மான 'லவ் டுடே' அவ­ருக்கு நல்­ல­தொரு அடை­யா­ளத்­தைக் கொடுத்­தது. வித்­தி­யா­ச­மான நல்ல படங்­க­ளைத் தொடர்ந்து தரு­வார் என்று பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்­ட­வர் என்ன கார­ணத்­தாலோ சினி­மா­வில் பெரி­தா­கப் பிர­கா­சிக்­கா­மல் போனார்.