ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 4–9–19

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2019

 

பாடலை தாண்டி...!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

‘‘பனி விழும் இரவு’’ என்­கிற ‘மவுன ராகம்’ பாடல் குழு, நட­னம் குழு உட­னொலி இத்­யா­தி­க­ளுக்­கான முக்­கிய கானம். ‘‘சின்­னச் சின்ன வண்­ணக் குயில்’’ என்­கிற ‘மவுன ராகம்’ பாடல். நமக்கு ரேவ­தி­யைத் தெரி­யும், மோக­னை­யும். எஸ்.ஜான­கி­யைத் தெரி­யும், இளை­ய­ரா­ஜா­வை­யும். இந்த பாடலை நன்கு அறி­வோம், அதன் வரி­க­ளை­யும். இதன் பின்­னணி இசை நம்மை மயக்கி இருக்­கி­றது,

பட­மாக்­கப்­பட்ட வித­மும். இது­வரை சொன்­ன­வற்­றைத் தாண்டி இந்­தப் பாட­லைப் பார்க்­க­லாம், என்ன இருக்­கி­றது? கூட ஆடிய உப­தே­வ­தை­க­ளும், உட­னொலி தந்­த­வர்­க­ளும். ஒரு பேச்­சுக்கு அல்ல இந்­தப் பாடல். இது­தான் பாடல். "மாலை சூடி.. ம்ம்ம் ம்ம்ம்... மஞ்­சம் தேடி.. ம்ம்ம் ம்ம்ம்... பரு­வம் என்­னும் கீர்த்­த­னம்"  எத்­தனை முறை கேட்­டி­ருப்­போம், எத்­தனை முறை கடந்­தி­ருப்­போம், எத்­தனை முறை முணு­மு­ணுத்­தி­ருப்­போம், எத்­தனை முறை என்று எண்ணி இருக்­கி­றோமா? "ம்ம்ம்... ம்ம்ம்" உட­னா­டு­ப­வர்­க­ளின் பாதங்­க­ளைக் கொண்டு, அவர்­க­ளின் கரங்­க­ளைக் கொண்டு, அவர்­க­ளு­டைய முக­பா­வங்­க­ளைக் கொண்டு ஒரு பாட­லைப் பாடு­வது  என்­பது, பிர­ச­வ­கால வேத­னை­யின் பெருங்­கூச்­ச­லைக் கொண்டு ஒரு குழந்­தை­யைக் கரங்­க­ளி­லேந்­திக் கணக்­கற்ற முத்­தங்­களை அதற்கு வழங்­கு­வ­தைப் போல.

 "வெளக்கு வெப்­போம் வெளக்கு வெப்­போம்" -– ‘ஆத்மா’.

 "ஏதோ மயக்­கம் என்­னவோ நெருக்­கம்" - – ‘இதய தாமரை’.

 "ஓ மை லவ், ஓ மை லவ், கண்­ணான என் கண்­மணி" - ‘இதய தாமரை’.

  பார­தி­ரா­ஜா­வின் வெள்ளை உடை தேவ­தை­க­ளுக்­கென்று ஒரு தனித்த வர­வேற்பு இருந்­தது. "அபூர்வ சகோ­த­ரர்­கள்" திரைப்­ப­டத்­தின்  ‘‘புது மாப்­பிள்­ளைக்கு நல்ல யோக­மடா’’ பாட­லி­லும், பிற்­பாடு "உன்ன நெனச்­சேன் பாட்டு படிச்­சேன்" என்­கிற பாட­லி­லும் உடன் ஆடி­ய­வர்­கள் உற்­றுக் கவ­னிக்க வைத்­தார்­கள். இவர்­கள் வரு­வ­தும் எழு­வ­தும் நின்று நிலைப்­பது போல் நின்று நகர்­வ­தும் பிறகு அகல்­வ­தும் எப்­போ­தா­வது தென்­ப­டு­கிற எரி­நட்­சத்­தி­ரத்­தின் வீழ்­த­லைப் போல அல்­லா­மல் சதா சர்­வ­கா­ல­மும் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கிற ஒரு இயக்­க­மா­கவே இவர்­க­ளது பற்­ற­று­தல் நிகழ்ந்­தே­று­கி­றது.

 சற்று பழைய பாடல்­க­ளில் சொல்ல வேண்­டு­மா­னால், ‘‘சாந்து பொட்டு சல­ச­லக்க’’ என்­கிற ‘‘சிவ­கங்­கைச் சீமை’’ பாட­லும், ‘பாச­ம­லர்’ படத்­தின் ‘‘பாட்­டொன்று கேட்­டேன்’’, ‘‘வாராயோ தோழி’’ ஆகிய பாடல்­க­ளும் நினைவை நிர­டு­பவை.

 பிர­பு­தேவா, ராஜு சுந்­த­ரம், லாரன்ஸ், முன்­ன­தாக ஜான் பாபு, சம்­பத் உள்­ளிட்­ட­வர்­கள் கதை­யுள் கதை­யா­கப் பாடல்­களை அவ்­வப்­போது உரு­வாக்­கித் தந்­தார்­கள். பிர­பு­தேவா குழு­வில் ஜப்­பான் குமார் என்று ஒரு­வ­ருக்கு சொற்­ப­கால ரசி­கர் மன்­றங்­கள் இருந்­தன. பின்­னா­ளில் பெரி­தும் மிளிர்ந்த மயில்­சாமி ஆரம்­பத்­தில் பல பாடல்­க­ளில் உப நடி­கர்­தான். மன்­சூர் அலி கானுக்கு அப்­படி ஒரு முன் கதை இருக்­கும் என்று நம்­மில் எத்­தனை பேருக்­குத் தெரி­யும்?

 ‘‘வஞ்­சி­ரம் வவ்­வாலு மீனு­தானா’’ பாட­லில் அனா­யா­ச­மாக ஒரு முழு நட­னத்தை மன்­சூர் அலி கான் நிகழ்த்­திய போது, ‘அடடே’ எனச் சொல்­லத் தோன்­றி­யது. வில்ல மரம் என்­றா­லும் நட­னக்­க­னி­யும் கனி­யும் என்று காட்­டி­னார்.

‘‘சின்ன முள்ளு காத­லி­யல்லோ பெரிய முள்ளு காத­ல­னல்லோ’’, ‘‘காசு மேல காசு வந்து’’, ‘‘ஓ மாமா மாமா’’ (‘மின்­னலே’) உள்­ளிட்ட பாடல்­க­ளில் ஜப்­பான் குமா­ரின் அட்­ட­கா­சங்­கள் தனித்து மிளிர்­பவை.

 நம் சமூ­கத்­தில் பாட­லுக்­கான இடம் என்ன? வாழ்­வு­க­ளுக்­குள் நட­னம் என்­ப­தன் தேவை என்ன? கேர­ளா­வில் மட்­டும் கலக்­கி­யி­ருக்க வேண்­டிய ‘‘ஜிமிக்கி கம்­மல்’’ தமி­ழ­கத்­தில் வேர் வரை­யில் நீர் என்­றா­கிய மாயம் என்ன? பிர­ப­லம் என்­பது ஒரு வகை ஓய்­தலை நோக்­கிய நகர்­தல்­தானா..? வெளித்­தெ­ரி­யா­மல் இருப்­பது உண்­மை­யில் சாபமா அல்­லது வரமா? உப நடி­கர்­க­ளா­க­வும், உட­னொலி தரு­ப­வர்­க­ளா­க­வும், வாத்­தி­யக்­கா­ரர்­க­ளா­க­வும், இன்­னும் இன்­னும் கண்­ணுக்­குத் தெரி­யாத மகா பெரிய நிகழ் தகவு ஒன்­றின் ஊடு பாவு­க­ளாய் இருந்து கொண்டு பிறகு இல்­லா­மற் போனார்­களா அல்­லது இல்­லா­மற் போவ­தன் மூல­மா­கத்­தான் எஞ்­சு­கி­றார்­களா? எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., அமி­தாப் பச்­சன், ரஜி­னி­காந்த், இவர்­க­ளெல்­லாம் இருந்த, இருக்­கிற இருக்­கப் போகிற, அதே ஒரே சினி­மா­வில்­தானே அவர்­க­ளெல்­லா­மும் இருக்­கி­றார்­கள்?

 ‘காதல் கோட்டை’ திரைப்­ப­டத்தை இரண்டு பேரின் மழைக்­க­ளி­யாட்­டம் கொண்டு ஆரம்­பித்­தி­ருப்­பார் அகத்­தி­யன். மொத்த மழை­யை­யும் அறு­வடை செய்த அஜீத்­கு­மார், தேவ­யானி ஆகி­யோ­ருக்கு மத்­தி­யில் சொற்­பத் துாற­லைக் கூட அந்­தப் பாட­லில் ஆடிய இரு­வ­ரும் அறு­வடை செய்­ய­வில்லை என்­ப­து­தானே நிஜத்­தின் இன்­னொரு புறம்?

  "கற்­பூர முல்லை ஒன்று காட்­டாற்று வெள்­ளம் என்று"

 "பாடும் நேரம் இது­தான் இது­தான்"

 "தேவதை போலொரு பெண்­ணிங்கு வந்­தது" ஆகிய பாடல்­க­ளின் நட­னங்­களை விட­வும் கோரஸ் ஒலி­க­ளுக்­கா­கவே இந்­தப் பாடல்­க­ளைப் பெரி­தும் விரும்­பி­யி­ருக்­கி­றேன்.

 அபத்­த­மா­வது

அற்­பு­த­மா­வது

கண்­க­ள­னை­யது

காட்சி

என ஒரு கவி­தை­யில் எழு­தி­யி­ருப்­பேன்.

இரண்டு திருப்­பங்­கள்

டிராக் பாடிக் கொண்­டி­ருக்­கும் பானுப்­ரி­யாவை இந்த முழுப்­பா­ட­லை­யும் நீ பாடு என்று சொல்­லு­வார்­கள், அந்த நேரத்­தில் அந்­தப் பாட­லைப் பாட வேண்­டிய எல்.ஆர். ஈஸ்­வரி வந்து விடு­வார். சும்மா ரிகர்­சல் பார்த்­தோம், ஒல­தொ­ல­வாய், என்று சொல்­லி­விட்டு பானுப்­ரி­யா­வின் மன­சைக் கொல்­வ­தைப் பற்­றிச் சற்­றும் கவ­லை­யில்­லா­மல் மறு­படி அவரை டிராக் பாட வைப்­பார்­கள். இது முத­லா­வது...

  இது அடுத்­தது... தன் ஒண்­டுக் குடித்­தன வீட்­டில் நடந்­தாலே கைகால் இடிக்­கும் என்­கிற வாழ்­வா­தா­ரம் தரும் நெருக்­க­டியை மீறி ஆர்ப்­ப­ரிக்­கும் கட­ல­லை­க­ளுக்கு மத்­தி­யில் யாரு­மற்ற ஒரு வனாந்­தி­ரப் பொன் பொழு­தில், அதிர வைக்­கும் இசையை ஒலிக்­கச் செய்­த­படி நட­ன­வழி உடற்­ப­யிற்சி செய்­யத் தொடங்­கு­வார் ஊர்­மிளா. கண் அசை­யா­மல் பார்த்­துக் கொண்­டி­ருந்­து­விட்டு சொக்­கிப் போகும் சினிமா சுல்­தான் ஜாக்கி ஷெராப் அவள் தன் படத்­தில் உட­னா­டும் உப­மல்­லி­கை­க­ளில் ஒருத்தி என்­பதை அறி­கிற கணம் அவளை அப்­ப­டியே எடுத்து நட்­சத்­திர வானில் நாய­கி­யாக்கி எறி­வார்.

 ஓவர் நைட்­டில் மாறு­வ­தன் பேர்­தான் வாழ்க்கை.

 இரண்­டும்­தான் சினிமா.