கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 195

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2019

ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர்  5

‘பலே பாண்­டியா’ வந்த அதே 1963ல், ஜெயி­லுக்­கும் சிவா­ஜிக்­கும் வேறு படங்­க­ளி­லும் தொடர்பு இருந்­தது. அவற்­றுள், ‘குங்­கு­மம்’ திரைப்­ப­டத்­தில், கொலை குற்­றத்­தி­லி­ருந்து தந்­தை­யைக் காக்க,  தானே குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு போலீஸ் பிடி­யி­லி­ருந்து படம் முழுக்­கத் தப்­பித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் சிவாஜி.

சிறை செல்­வ­தி­லி­ருந்து தப்­பிக்க, ‘குங்­கு­ம’த்­தில் சிவாஜி  பல மாறு­வே­டங்­கள் ஏற்­கி­றார். அர­வாணி வேஷம், வயது முதிர்ந்­த­வர் வேஷம், பிச்­சைக்­கா­ரன் வேஷம் என்­றெல்­லாம் அவ்­வப்­போது தோன்­று­ப­வர், தன்­னைத் தமிழ் ஆசி­ரி­யர் என்று கூறிக்­கொண்டு ஒரு நீதி­ப­தி­யின் வீட்­டில், செந்­த­மிழ் தேன்­மொ­ழி­யா­ராக வேலைக்கு அமர்ந்­து­

வி­டு­கி­றார்!

நீதி­ப­தி­யின் மக­ளின் (சாரதா) காதல் பார்­வைக்கு ஆளா­கும் போது, அவர்­க­ளி­டையே ‘தூங்­காத கண்­ணென்று ஒன்று’ என்ற அற்­பு­த­மான பாடல் பிறக்­கி­றது. இதைத் தொடர்ந்து வரு­கி­றது, ‘சின்­னஞ்­சி­றிய வண்­ணப்­ப­றவை’ பாடல். காவ­லர்­க­ளி­டம் அகப்­பட்­டு­வி­டு­வோம் என்று மறைந்து வாழும் நிலை­யைத்­தான், ‘மயக்­கம் எனது தாய­கம்’ பாட­லும் குறிக்­கி­றது.

எத்­த­னையோ பேரை சிறைக்கு அனுப்­பு­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­களை செய்த முன்­னாள் உள்­துறை அமைச்­ச­ரையே பதுங்க வைக்­கி­றது, ஒதுங்க வைக்­கி­றது, மாய­மாக வைக்­கி­றது என்­றால், சிறைக்­குச் செல்­லும் அச்­சம் குறிப்­பி­டும்­ப­டி­யான ஒரு அச்­சம்­தான் !

ஆனால் ‘சரஸ்­வதி சப­தம்’ திரைப்­ப­டத்­தில் வரும்  வித்­யா­ப­திக்கு (சிவாஜி) சிறை­யின் பயம் சிறி­தும் இல்லை. செல்­வச்­செ­ருக்கு நிறைந்த ராணி­யான செல்­வாம்­பிகை (கே.ஆர்.விஜயா), வித்­யா­ப­தி­யி­டம் மோதும் போது, கவி­ஞ­னின் இந்த செருக்­கும் கம்­பீ­ர­மும் அவ­னுக்கு எதி­ராக அவளை இன்­னும் உசிப்பி விடு­கின்­றன. அவர்­க­ளி­டையே நடக்­கும் மோத­லில், வித்­யா­ப­தி­யின் கர்­வத்தை அடக்­கு­கி­றோம் என்று நினைத்­துக்­கொண்டு அவனை அவள் சிறை­யில் தள்­ளு­கி­றாள்.

ஆனால், வித்­யா­ப­தி­யின் உலகை சிறை­யின் சுவர்­கள் சுருக்­கி­வி­ட­வில்லை. அவ­னு­டைய சிறைப்­பா­டல்  ராணி­யின் அகந்­தையை எள்ளி நகை­யா­டு­கி­றது.

‘‘ராணி மகா­ராணி, ராஜ்­ஜி­யத்­தின் ராணி

 வேக­வே­க­மாக வந்த, நாக­ரீக ராணி’’  என்று கூறத்­தொ­டங்கி, அவ­ளு­டைய பூர்­வக் கதை­யின் பிச்­சைக்­கா­ரத்­த­னத்தை அம்­ப­லப்­ப­டுத்­தி­விட்டு, முக்­கி­ய­மான விஷ­யத்­திற்கு வரு­கி­றான் வித்­யா­பதி.

‘‘கவி­ய­ரசை புவி­ய­ரசு வெற்றி கொண்­ட­துண்டா?

கலை­ம­க­ளைத் திரு­ம­கள்­தான் வெற்றி கண்­ட­துண்டா?

சபை அறிந்த புல­வ­னுக்கு சிறை­யும் ஒரு வீடு

அறி­வி­ழந்த அர­சி­ய­ருக்கு நாடும் ஒரு காடு!’’

இந்த வீரி­ய­மான பார்வை உண்­மை­தான்

என்­றா­லும்,  சிறை வாழ்க்கை ஏற்­ப­டுத்­தும்

சோக­மும் வேத­னை­யும் ஆழ­மா­னவை. இந்­திரா காந்தி அவ­சர நிலை பிர­க­ட­னம் செய்து அர­சி­யல் தலை­வர்­களை சிறை­யில் அடைத்­த­போது,  

கைதா­ன­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர், வாஜ்­பாய். சிறை­வா­சத்­தின் சோகத்தை, ‘வேதனா’ என்ற

கவி­தை­யில் அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். வெறு­மை­யை­யும் இத­யத்­தின்  தாபத்­தை­யும் வாஜ்­பாயி  கவிதை வரி­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

ஜெய­காந்­த­னின் குறு­நா­வ­லான ‘கைவி­லங்’­­கின் கதை உரி­மையை வாங்கி, ‘காவல் தெய்­வம்’ எடுத்­தார், குணச்­சித்­திர நடி­கர் எஸ்.வி.சுப்­பையா. ஜெயில் கண்­கா­ணிப்­பா­ளர் ராக­வ­னாக, தன்­னு­டைய அமை­தி­யான பாணி­யிலே தானே நடிக்­க­வும் செய்­தார். தன்­னு­டைய சிறை­யில் இருக்­கும் கைதி­க­ளைக் குற்­ற­வா­ளி­கள் என்று கரு­தா­மல், தன்­னு­டைய பிள்­ளை­க­ளாக நினைத்து, கனி­வாக நடிக்­கும் பாத்­தி­ரம் அவ­ரு­டை­யது. இந்­தப் படத்­தில், கவு­ரவ வேடத்­தில் தூக்கு மேடை கைதி சாமுண்­டி­யாக வந்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­னார் சிவாஜி கணே­சன். ‘பிறப்­ப­தும் போவ­தும் இயற்கை’ என்ற பாடல் அவ­ருக்கு அமைந்­தது.  

‘மூன்று தெய்­வங்­கள்’ படத்­தில், சிவாஜி, முத்­து­ரா­மன், நாகேஷ் ஆகி­யோர் சிறை­யி­லி­ருந்து தப்பி வந்த கைதி­கள். அவர்­கள் எஸ்.வி.சுப்­பையா வீட்­டில் அடைக்­க­லம் புகு­வது மட்­டு­மின்றி, அவ­ரு­டைய குடும்­பத்­திற்­காக உழைக்­க­வும் செய்­கி­றார்­கள். ஒரு நல்ல குடும்­பத்­திற்­குத் தன்­ன­லம் மறந்து உதவி செய்­வ­தால், தேடப்­ப­டும் கைதி­கள் தெய்­வங்­க­ளாக உயர்வு பெறு­கி­றார்­கள்.

காலத்­தின் ஓட்­டத்­தில்,  ஒரு சிறைக்­கூ­டத்­தில் சிவாஜி நடந்து வந்­து­கொண்­டி­ருக்­கி­றார். படம் ‘படிக்­கா­த­வன்’. கொலைக்­குற்­றம் சாட்­டப்­பட்டு சிறை­யில் இருப்­ப­வர் ரஜி­னி­காந்த். உண்­மை­யில்,  படத்­தில் அவர் சிவா­ஜிக்கு உடன்­பி­றந்த தம்பி. ஆனால் சிறு வய­தி­லேயே பிரிய நேர்­கி­றது. தன்­னு­டைய சொந்த  தம்பி என்று அறிந்து சிறை­யிலே பார்க்க வரும்­போது, ‘இத்­தனை வரு­ஷமா ஒரு அண்­ணன் இருக்­கான், அவ­னைப் பாக்­க­ணும்னு தோணவே இல்­லையா?’ என்று சிவாஜி கேட்­பது மிக­வும் உருக்­க­மா­க­வும், அவ­ரு­டைய உணர்ச்­சி­க­ர­மான நடிப்­பின் முத்­திரை கொண்­ட­தா­க­வும் இருக்­கி­றது. சிவாஜி என்ற நடிப்பு மன்­ன­ரு­டன் ரஜி­னி­காந்த் இடம்­பெற்ற உணர்ச்­சி­க­ர­மான ஜெயில் காட்­சி­யில், தன்­னு­டைய

ரீயாக் ஷனை­யெல்­லாம் ரஜினி அடக்கி வாசிப்­பது ஒரு இனி­மை­யான அழகு.

‘முதல் மரி­யா­தை’­­யி­லும் சிவாஜி சிறை­யில் தோன்­று­கி­றார், தன்­னு­டைய இத­யத்­தில் இடம்­பி­டித்த ஓடக்­காரி ராதா­வைக் காண்­ப­தற்­காக. கொலை குற்­றத்­திற்­காக ராதா சிறை­யில் இருக்­கி­றார். அவர் அந்­தக் கொலையை செய்­ததே, சிவா­ஜி­யின் குடும்ப மானத்­தைக் காக்­கத்­தான் என்ற விஷ­யம் இந்த சிறைக் காட்­சி­யில் வெளிப்­ப­டு­கி­றது.

 ‘சிவாஜி த பாஸ்’ என்று ரஜி­னி­காந்த் வரும் போது, அவ­ரு­டைய பஞ்ச் டய­லாக்­கு­ட­னான சிறைக் காட்சி, படத்­தின் ஆரம்­பக்­காட்­சி­யாக அமை­கி­றது.

அந்­தக் காட்­சி­யில் அவர் பர­ப­ரப்­பாக சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றார்.

‘என்­னப்பா, மர்­டர் கேசா?’ என்று அடுத்து செல்­வா­சி­யின் குரல் வரு­கி­றது.

நமக்கு முது­கைக் காட்­டிக்­கொண்­டி­ருக்­கும்

ரஜி­னி­யி­ட­மி­ருந்து, ‘ஊஹும்...’ என்ற பதில்

வரு­கி­றது.

‘பைனான்ஸ் கம்­பெனி எது­வும் நடத்­தி­னியா?’ என்­ப­த­டுத்து கொஸ்­ஷன்’!

‘இல்லை’ என்­பது, நமக்கு எதிர் பக்­கம் திரும்­பி­யி­ருக்­கிற ரஜினி அளிக்­கும் பதில்.

‘செக்ஸ் படம் எடுத்து நெட்­டிலே விட்­டியா?’ என்­பது மூன்­றா­வது கேள்வி.

அப்­ப­டிப்­பட்ட துச்­ச­மான எச்­சில் வேலை எது­வும் செய்­யலே என்­ப­தைக் குறிக்­கும் ஒரு சத்­தம்­தான் அதற்­குப் பதில்.

‘பின்னே என்­ன­தான் தப்­புப் பண்ணே?’

இதற்­குப் பதில் கூறும் போது, முகம் கேமி­ராவை நோக்க, கேமிரா ஜூம் போட்­டுக்­கொண்டு முகத்தை நோக்க, ‘நாட்­டுக்கு நல்­லது பண்­ணேன்’ என்ற பதில் வரு­கி­றது!

‘அப்போ உள்ளே தள்­ள­வேண்­டி­ய­து­தான்’ என்று ஆப் கேமி­ரா­வில் குரல் கேட்க, குளோஸ் – அப்­பில் ரஜி­னி­யின் முகம் தெரி­கி­றது. ஹா...ஹா..ஹா என்று அவ­ரு­டைய சிரிப்பு ஒலிக்­கி­றது.

சிறைச்­சா­லை­யில் நடக்­கும் சந்­திப்­பு­கள் நிஜ­வாழ்க்­கை­யி­லும் மாறு­தல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை. என்.எஸ். கிருஷ்­ணன் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல் சிறை­யில் இருந்­த­போது, அவ­ரு­டைய நட்­பைப்­பெற்ற ஒரு கொலைக்­குற்­ற­வாளி, பின்­னா­ளில் அவரை சந்­தித்து, என்.எஸ்.கே.வீட்­டில் தோட்ட வேலை பார்த்­தி­ருக்­கி­றார். ‘பிதா­ம­கன்’ படத்­தில், நாய­கன் சித்­தன் (விக்­ரம்), சக்தி (சூர்யா) ஆகி­யோ­ரின் முக்­கி­ய­மான சந்­திப்பு சிறை­யில்­

­தான் நடக்­கி­றது. ஜெமி­னி­யின் ‘வஞ்­சிக்­கோட்டை வாலி­பன்’ படத்­தில், தன்­னு­டைய தங்கை கற்­ப­ழித்­துக்­கொலை செய்­யப்­பட்ட பின், நாய­கன் சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றான். சோக­ச­முத்­தி­ரத்­தில் இந்த வகை­யில் அவன்  ஆழ்ந்­தி­ருக்­கும் போது, சிறை­யி­லேயே தனது தாயைச் சந்­திக்­கி­றான்!

‘மகா­ந­தி’­­யில் சிறை­க­ளில் நடக்­கும் ஊழல்­கள் வெளிப்­ப­டை­யா­கக் காட்­டப்­பட்­டன. ‘விரு­மாண்­டி’­­யி­லும் இவைக் குறிப்­பி­டப்­பட்டு, மரண தண்­ட­னைக்கு எதி­ரான வாதங்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. மோகன், லட்­சுமி, ரேவதி முத­லி­யோர் நடித்த ‘உதய கீதம்’ படக்­கதை, மரண தண்­டனை எந்த அள­வுக்கு தவ­றாக அமை­யக்­கூ­டும் என்­ப­தைக் காட்­டி­யது. படத்­தில், சிறந்த பாட­க­ரான மோகன், தூக்­குத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யி­ருக்­கும் ஒரு கைதி. தன்­னு­டைய இனி­மை­யான பாட்­டுக்­கு­ர­லால் அவர் எல்­லோ­ரை­யும் ஈர்க்­கக்­கூ­டி­ய­வர். இந்த நிலை­யில் அவர் குற்­ற­வாளி இல்லை, கொலை செய்­ய­வில்லை என்­கிற விஷ­யங்­கள் எல்­லாம் மெல்ல வெளியே வரு­கின்­றன. அது­மட்­டு­மல்­லா­மல், அவர் இருக்­கும் சிறை­யின் கண்­கா­ணிப்­பா­ளர் (லட்­சுமி) உண்­மை­யில் அவ­ரு­டைய தாய் என்­கிற விஷ­ய­மும் வெளியே வரு­கி­றது! மிக­வும் விதி­வி­லக்­கா­கத்­தான் நமது கோர்ட்­க­ளும் மரண தண்­டனை அளிக்­கின்­றன.

கமல்­ஹா­ச­னைப் பொறுத்த வரை­யில், ‘சிகப்பு ரோஜா­கள்’ படத்­தில் அவ­ருக்கு அமைந்த சிறைக்­காட்­சி­கள் மறக்க முடி­யா­தவை. பட ஆரம்­பத்­தில் அவர் சிறைக்கு வந்து கைதி­க­ளுக்­குத் தன்­னு­டைய பிறந்த நாளில் உண­வுப்­பண்­டங்­கள் வழங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார். ஜெயில் அதி­கா­ரி­யின் கேள்­விக்கு விடை­யாக,  செய்­யாத குற்­றத்­திற்­கா­கத் தன்­னு­டைய தந்தை தண்­டிக்­கப்­பட்­ட­தால்  மன­நிலை பாதிக்­கப்­பட்­டு­விட்­டார் என்று தெரி­விக்­கி­றார்.

ஜெயில் அதி­கா­ரி­யி­டம் விடை­பெ­றும் போது, ‘வர்­றேன்’ என்று கைகொ­டுத்­து­விட்­டுக் கிளம்­பு­கி­றார் கமல்­ஹா­சன்.

‘‘மிஸ்­டர் திலீப், போறேன்னு சொல்­லுங்க, நீங்க வந்­துட்­டுப்­போற இடம் ஜெயில்,’’ என்­கி­றார் ஜெயில் அதி­காரி!

‘‘இல்லை...வரு­வேன்...’’ என்று கூறும் கமல்­ஹா­சன், ‘‘என்­னு­டைய அடுத்த ெபர்த்­டேக்கு’’ என்­கி­றார்!

ஒரு சாதா­ர­ண­மான காட்­சி­தான், யதார்த்­த­மான பதில்­தான். ஆனால் ஆழ­மான விஷ­யங்­கள் அதில் இருக்­கின்­றன என்­பது படத்­தின் முடி­வில் தெரி­கி­றது. எந்­தச் சிறைச்­சா­லைக்கு நான் வரு­வேன் என்று கூறி­னாரோ அதே சிறைச்­சா­லைக்கு கைதி­யாக அவர் வர நேர்­கி­றது!

ஒரு மனி­தன் அடுத்­த­வ­ரைக் குற்­ற­வாளி என்று கூறி ஆட்­காட்டி விர­லைக் காட்­டும் போது, மற்ற மூன்று விரல்­கள் அவரை நோக்­கி­யி­ருக்­கும். இந்த உல­கத்­தில் அநே­க­மாக யாருமே முழு­மை­யா­கக் குற்­றமே செய்­யா­த­வர்­கள் என்று கூறி­விட முடி­யாது. ஆனால் சிறை சென்­று­விட்­டால் ஒரு­வ­ரின் வாழ்க்­கை­யில் விழு­கிற கரும்­புள்­ளியை அழிக்க மிக­வும் கஷ்­ட­மாக இருக்­கி­றது. ஆகவே குற்­றம் செய்­யா­மல் இருப்­பது மிக­வும் முக்­கி­யம். ‘எலி’ படத்­தில், வடி­வேலு பாடும் பாட­லில், குற்­றம் செய்­யா­மல் இருப்­ப­தற்­கான எச்­ச­ரிக்­கை­கள் அடுக்­கப்­ப­டு­கின்­றன.

‘‘கண்ணை மேய விட்­டியா

கன்­னிப் பொண்­ணைத் தொட்­டியா

ரோட்டு ஓரம் கஞ்சா வித்து

ஏட்­டுக் கண்­ணில் பட்­டியா’’ என்று தொடங்­கும் பாடல்,

‘‘மூக்கு மேல கோவமா

முடி­வெ­டுத்த ஆளெல்­லாம்

தூக்கு மேடை ஏறப்­போ­கும்

நாளை எண்ணி வாடு­றான்

அஞ்சு நிமிஷ ஆத்­தி­ரம்

ஆளை முழுசா மாத்­தி­ரும்

ஆயுள் கைதி­யாக உன்னை

அழுது  புலம்ப வச்­சி­ரும்’’ என்று எச்­ச­ரிக்­கி­றது.

கோப­தா­பங்­க­ளும், வேகங்­க­ளும், மது­ம­யக்­கங்­க­ளும்  மதி­ம­யக்­கங்­க­ளும் மனி­த­னைக் குற்­ற­வாளி ஆக்கி அவ­னு­டைய  சுதந்­தி­ரத்­தைப் பறித்­து­வி­டு­கின்­றன. அறத்­தை­யும் ஒழுக்­கத்­தை­யும் போதிக்­கும்  திருக்­கு­றள், தெருக்­கு­ற­ளாக அனை­வ­ரா­லும் கடைப்­பி­டிக்­கப்­ப­டும்­போது, குற்­றங்­கள் குறை­யும், சமூக வாழ்வு உய­ரும். அறப்­ப­யிர் வளர்ந்­தால், இன்ப மக­சூல் அதி­க­ரிக்­கும்.

                                           (தொட­ரும்)