தண்ணீர் பிரச்னையும், ஸ்டார்ட் அப்களும்

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2019

சென்னையின் தண்ணீர் பிரச்சனை இந்திய அளவில்,ஏன் உலக அளவில் பேசப்பட்டது. அப்போது பலரும் தண்ணீரின் சிக்கனத்தை பற்றியும், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பற்றியும், நீர்வரத்து குழாய்களை சரி செய்வது பற்றியும் பரவலாக பேசத் தொடங்கினார்கள். இந்திய அளவில் பத்திரிகைகளில் சென்னையும் பிரதானமாக அடிபட்டது. நிதி ஆயோக் எல்லோரும் பயப்படும்

படியாக ஒரு அறிக்கையும் வெளியிட்டது. அதாவது இதே நிலை நீடித்தால் 2030 வருடம் இந்தியாவில் 40 சதவீத மக்களுக்கு நிலத்தடி குடிநீர் கிடைக்காது என்று.

அதே சமயத்தில் பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கப்பட்டன தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பதை பற்றி ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை நடைப்படுத்த சென்னையைச் சேர்ந்த எர்த் போக்கஸ் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி தண்ணீர் வரும் குழாய்களில் பொருத்துவதற்காக இரு கருவிகளை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த கருவிகளை பயன்டுத்துவதன் மூலமாக தண்ணீர் 95% சேமிக்கப்படுகிறது. சிறிது விளக்கமாக கூற வேண்டுமென்றால் இந்த கருவியை தண்ணீர் வரும் குழாயில் பொருத்தி விட்டால் தண்ணீர் வரும் வேகமும், வெளியேறும் தண்ணீர் அளவும் மிகவும் குறைவாக இருக்கும்.

இதனால் பெருமளவு தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

தற்போது பல இடங்களில் பார்த்தால் குறிப்பாக ஹோட்டல்கள், பள்ளிகள் கல்லூரிகள், பல ஆயிரம் பேர் வேலை பார்க்கும் இடங்களில் கை, முகம் கழுவும் வாஸ் பேசின் கள் மூலமாக பெரிய அளவில் தண்ணீர் விரயமாகிறது.

மேலும், பாத்திரங்கள் கழுவும்

போதும் தண்ணீர் பெரிய அளவில் விரயமாகிறது. இதை தவிர்க்கும் விதமாக அந்த தண்ணீர் வரும் குழாய்களில் இந்த சிறிய கருவியை பொருத்துவதன் மூலமாக தண்ணீர் வீணடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

ஒரு நிமிடத்தில் 10 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில் இந்தக் கருவியை பொருத்துவதன் மூலமாக 600 மில்லி லிட்டர் தண்ணீர் மட்டுமே வெளியேறுகிறது.

இதை சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனிகள் உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன தண்ணீர் சேமிப்பு மிகுந்த அளவில் இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணைய தளத்திற்கு சென்று பாருங்கள் மேலும் தகவல்கள் பெறலாம்  

https://www.earthfokus.com/

உதான்

இப்ப கடை வச்சிருக்கவங்க எல்லாருக்கும் பெரிய பிரச்சினை என்னன்னா எப்படி பொருட்களை விற்பது என்பது தான். தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இப்போத ஆன்லைனில் வாங்குவதையே விரும்புவதால் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் கம்பெனிகளுக்கு விற்பனை கூடுகிறது. சிறிய கடை வைத்திருப்பவர்கள் கூட இந்த ஆன்லைன் கம்பெனிகள் கம்பெனிகளில் சென்று பதிவு செய்து கொண்டு அதன் மூலமாக விற்பனை செய்ய தற்போது வாய்ப்புகள் இருக்கின்றன. பிளிப்கார்ட், அமேசான் வகைகளில் இருக்கும் இன்னொரு கம்பெனிதான் "உதான்". இந்த இணையதளத்தில் 20,000 விற்பனையாளர்கள் இருக்கிறார்கள், 15 லட்சம் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது, 10 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.

நீங்கள் தயாரிக்கும் பொருட்களையும் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களையும் இந்த இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்யலாம். இதனால் உங்களின் விற்பனைக் கூடும்

வாய்ப்புகள் அதிகம். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தில் சென்று பார்க்கவும்

https://udaan.com/app