பின்லாந்து நாட்டில் அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப் பயணம்

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2019 16:42

சென்னை,

பின்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிட்டார்.

7 நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அங்குள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அங்கு கையாளப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

பின்லாந்து அந்நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து அமைச்சர் விவரங்களைக் கேட்டறிந்தார்.

"மெய்நிகர்" எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கல்வியை மேம்படுத்துவது குறித்து பின்லாந்து நாட்டு கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சரையும் சந்தித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பில் பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதர் வாணி ராவ், உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.