பள்ளி மாணவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் விபத்துகளுக்கு காப்பீட்டுப் பயன்

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2019 19:00

சென்னை,

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் விபத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுதல் விபத்துகள் பற்றிய அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டு உள்ளார்.

இதன்படி, விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் வழங்கப்படும்.

பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கி உயிரை இழந்தாலும் நிவாரணம் வழங்கப்படும்.
விஷப் பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.