மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 6

பதிவு செய்த நாள் : 01 செப்டம்பர் 2019

வாழ்க்­கை­யென்­றால் அப்­ப­டித்­தான் இருக்­கும். மயக்­க­மும், கலக்­க­மும் மட்­டு­மல்ல – இவை போல் இன்­னும் ஆயி­ரம் இருக்­கும்.

 நீ அடி­யெ­டுத்து வைக்­கும் வாசல்­தோ­றும் உன்னை வர­வேற்க வேதனை காத்­தி­ருக்­கும்.

 அப்­ப­டி­யா­னால், மனி­தன் வாடி வதங்­கு­வ­தைத் தவிர வேறு வழியே இல்­லையா?

 வாடி நின்­றால் மட்­டும் துன்­பம் ஓடி­வி­டுமா என்ன?

 வாட­வும் கூடாது. வாழ­வும் வேண்­டும். இது எப்­படி சாத்­தி­யம்?

 எதை­யும் தாங்­கும் இத­யம் உனக்­கி­ருந்­தால், இறுதி வரை­யில் அமை­தி­யி­ருக்­கும்.

‘‘மயக்­கமா? கலக்­கமா?’ பாட்டை, தன் அறைக்­குள் உட்­கார்ந்து கொண்டு, திரு பி.பி. ஸ்ரீனி­வாஸ் பாடிக் காட்­டிய பொழுது,  அந்­தப் பாட்­டின் உட்­பொ­ருளை உணர்ந்து  வாலி­யின் மனம் அமைதி பெற்­றது.

 சென்­னை­யி­லேயே தங்கி, மீண்­டும் சினி­மா­வில் இடம்­பெற முயற்­சிக்க வேண்­டும் என உறுதி பூண்­டார்.

 சென்­னைக்கு வந்து ஐந்­தாண்­டு­கள் ஆகி­யும் வாலி, கண்­ண­தா­சனை சந்­திக்­க­வில்லை. அடுத்த நாளே கண்­ண­தா­சனை சந்­திக்க வேண்­டும் என்­னும்  ஆசை அவ­ருள் எழுந்­தது. அவர், நாத்­தி­கத்­தி­லி­ருந்து ஆத்­தி­கத்­திற்கு மாறி­விட்­டார் என்­பது இந்த ஆசையை மேலும் கூட்­டிற்று.

 அடுத்த நாளே கண்­ண­தா­சனை சந்­தித்­தார். நண்­பர்  மா. லட்­சு­ம­ணன்­தான் வாலி­யைக் கண்­ண­தா­ச­னி­டம் அழைத்­துச் சென்­றார். அப்­போது, தியா­க­ராஜ நகர் உஸ்­மான் ரோட்­டில், கண்­ண­தா­ச­னின் அலு­வ­ல­கம் இருந்­தது. ஆகவே,  வாலி­யும், மா. லட்­சு­ம­ண­னும் நடந்து கண்­ண­தா­சன் அலு­வ­ல­கம் போய்ச் சேர்ந்­தார்­கள்.

 லட்­சு­ம­ணன் வாலியை  கவி­ஞ­ரி­டம் அறி­மு­கம் செய்து வைத்­த­வு­டன், அவரே சொன்­னார்.

 ‘தெரி­யுமே, திருச்சி ரேடி­யோ­வில நாட­க­மெல்­லாம் எழு­திக்­கிட்­டி­ருந்த வாலி­தானே நீங்க?’

 கவி­ஞ­ரின் ஞாப­க­சக்­தியை நினைத்து வாலி வியந்து கொண்­டி­ருந்த போது, இரண்டு கோப்­பை­யிலே காபி கொண்­டு­வ­ரப்­பட்டு, கவி­ஞர் தனது கையா­லேயே அவர்­கள் இரு­வ­ருக்­கும் வழங்­கி­னார்.

‘ நான் ஒரு தீவி­ர­மான ஆஸ்­தி­கன். நீங்­க­ளும் இப்ப ஆஸ்­தி­கனா மாறிட்­ட­திலே எனக்கு ரொம்ப சந்­தோ­ஷம் என்­றார் வாலி.

 ‘அட! நான் எப்­ப­வுமே ஆஸ்­தி­கன்­தான்யா... ஜூபி­டர் பிக்­சர்ஸ்ல இருக்­கி­றப்ப விபூதி குங்­கு­மத்­தோ­ட­தான் இருப்­பேன். நீங்க சுப்­பையா நாயு­டு­வைக் கேட்­டீங்­கன்னா சொல்­வாரு’ என்­றார் கவி­ஞர்.

  சுப்­பையா நாயுடு என்று அவர் குறிப்­பிட்­டது இசை­ய­மைப்­பா­ளர் எஸ். எம். சுப்­பையா நாயு­டு­வைத்­தான்.

 ‘உங்­க­ளைப் பத்தி நாலு வரி கவிதை எழு­தி­யி­ருக்­கேன். கேக்­க­றீங்­களா?’ என்­றார் வாலி.

 ‘என்­னப்­பத்­தியா? சொல்­லுங்க, சொல்­லுங்க... ?’ என்று உற்­சா­கத்­தின் விளிம்­பிற்கே போனார் கண்­ண­தா­சன்.

 உடனே வாலி

‘ காட்­டுக்­குள் தேனீக்­கள்

 கூட்­டுக்­குள் வைத்­த­தைப்

 பாட்­டுக்­குள் வைத்­த­வனே – காக்­கைக்

 கூட்­டுக்­குள் குயி­லா­கக்

 கூவித் திரி­யா­மல்

 காலங் கழித்­த­வனே?

 இந்த வரி­களை வாலி பாடி­னார்.   கவி­ஞர் வெகு­வாக சந்­தோ­ஷப்­பட்டு, வாலி­யின் கைக­ளைப் பற்­றிக் கொண்டு பேசி­னார்.

 ‘காக்­கைக் கூட்­டுக்­குள் குயி­லா­கத் திரி­யா­மல், காலங்­க­ழித்­த­வ­னேன்னு சொல்­லி­யி­ருக்­கீங்­களே – அது என்ன அர்த்­தத்­திலே?

 ‘அண்ணே! நீங்க குயில் முட்டை மாதிரி. குயில் முட்­டை­யைக் காக்­கை­தான் அடை­காக்­கு­துங்­கி­றது உங்­க­ளுக்­குத் தெரி­யும். ரெக்கை முளைச்சு குயில் குஞ்சு கூவிப் பறக்­கிற போது­தான் – அது தன் குஞ்­சல்­லங்­கி­றது காக்­கைக்­குத் தெரி­யும். அது மாதிரி, நீங்க நக­ரத்­தார் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வங்க, சைவத்­தை­யும், தெய்­வத்­தை­யும் ரெண்டு கண்­களா நினைக்­கிற சமூ­கம், உங்க சமூ­கம். இயல்­பா­கவே உங்­க­ளுக்­குள்ளே இருக்­கிற இறைப்­பற்று வெளிப்­ப­டு­கிற நேரம் வந்­த­வு­டனே, நீங்­க­ளும் கழ­கத்தை விட்டு வெளியே வந்­துட்­டீங்க. அத­னா­ல­தான், உங்­க­ளைக் குயில் குஞ்­சுக்கு உவ­மை­யா­கச் சொன்­னேன், என்­றார் வாலி.

 கண்­ண­தா­சன் ஒரு விநாடி சிந்­த­னை­யில் ஆழ்ந்­தார். பிறகு நிதா­ன­மா­கச் சொன்­னார்.

‘கட­வுளை உணர்­வ­தி­லி­ருந்­து­தான், உண்­மை­யான பகுத்­த­றிவே தொடங்­கு­கி­றது’ என்­றார் கண்­ண­தா­சன். ஆனால் காலம் இரு­வ­ரை­யும் எதி­ரெ­திர் அணி­யில் நிறுத்­தித் தொழில் புரிய வைத்­தது. அதன் கார­ண­மாக  அவர்­கள் இரு­வ­ருக்­கு­மி­டையே உள்ள இடை­வெ­ளி­யும் நீண்டு கொண்டே போனது.

 எம்.ஜி.ஆர். ரசி­கர் மன்ற மேடை­க­ளில் வாலி, கண்­ண­தா­சன் பாட்­டுக்­களை விமர்­சிப்­பது, காங்­கி­ரஸ் மேடை­க­ளில் கண்­ண­தா­சன், வாலி­யின் பாட்டை விமர்­சிப்­ப­தும் தவிர்க்க முடி­யாத விஷ­யங் க­ளா­கி­ விட்­டன.

 ஒரு முறை கண்­ண­தா­சன், மெல்­லிசை மன்­னர்  விஸ்­வ­நா­த­னி­டம் ‘‘விசு! நீ எவனை வேணும்­னா­லும் என்­க­ரேஜ் பண்ணு. இந்த வாலியை மட்­டும் என்­க­ரேஜ் பண்­ணாதே’ என்று சொன்­னார்.  அதற்கு விஸ்­வ­நா­தன் ‘ஏன்? அவன் பிரா­ம­ணர்ங்­க­ற­து­னா­லயா?’ என்று கேட்­டி­ருக்­கி­றார்.

‘‘சேச்சே, அந்த எண்­ண­மெல்­லாம் எனக்கு கிடை­யாது. மத்­த­வங்­கள நீ என்­க­ரேஜ் பண்ணா, எவ­னும் எனக்­குப் போட்­டியா வர­மாட்­டான். இந்­தப் பய அப்­ப­டி­யில்ல. விஷ­யம் உள்­ள­வன்’ என்று கவி­ஞர் சொல்­லி­விட்­டுக் குழந்தை போல் வெகு­ளித்­த­ன­மாக சிரித்­தி­ருக்

கி­றார்.

 இதைக் கேள்­விப்­பட்ட வாலி, விஸ்­வ­நா­த­னி­டம் சொன்­னார்– ‘‘அண்ணே! சினி­மா­வில பாட்டு எழு­த­ற­துங்­க­றது வரு­மா­னம் சம்­பந்­தப்­பட்ட விஷ­யம். என்­னு­டைய வளர்ச்சி, அவ­ரு­டைய வரு­மா­னத்தை பாதிக்­க­லாம். அதான் அப்­ப­டிச் சொல்­லி­யி­ருக்­காரு. அது நியா­ய­மும் கூட. ஏன்னா, எனக்கு ஒரே குழந்தை – அவ­ருக்கு பத்­துப் பன்­னி­ரண்டு  குழந்­தைங்க, பொரு­ளா­தா­ர­ரீ­தியா, அவ­ரு­டைய வரு­மா­னம்  இன்­னொ­ருத்­தர் வர­வால பாதிக்­கப்­ப­ட­றதை அவர் கவ­னிக்­காம இருக்க முடி­யுமா” என்று வாலி கவி­ஞ­ரின் எண்­ணத்தை நியா­யப்­ப­டுத்தி பேசி­னார்.

 ஆனால் ‘மயக்­கமா? கலக்­கமா?’ என்­னும் அவ­ரது பாடல்­தான் வாலியை, சென்­னை­யி­லேயே தங்க வைத்­தது என்­பது அப்­போது கண்­ண­தா­ச­னுக்­குத் தெரி­யாது.

 பிறி­தொரு சந்­தர்ப்­பத்­தில் இதை வாலி, கண்­ண­தா­ச­னி­டம் சொன்­ன­போது, ‘என் பாட்டு,ஒரு­வ­னுக்கு தெம்பு கொடுத்­தி­ருக்­குன்னா – அது எனக்கு மிக­வும் சந்­தோ­ஷ­மான விஷ­யம்’ என்று வாலியை ஆரத் தழு­விக் கொண்­டார்.

 சென்­னை­யில் இருந்து   போகா­மல் இருந்­த­தால்­தான்  வாழ்க்கை கிடைத்­தது. ஏற்­க­னவே வாலி நடி­கர் நாகேஷ், பாலாஜி  போன்­ற­வர்­க­ளுக்கு நாட­கம்  எழு­திக் கிட்­டி­ருந்த மா.ரா. முக்தா சீனி­வா­ச­னி­ டம் ‘ இத­யத்­தில் நீ’ படம்   எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது சொல்­லி­யி­ருந்­தார்.

 இது நடந்­தது 1963 ஜன­வரி.  ‘1958லேயே  வி. கோபா­ல­கி­ருஷ்­ணன் வாலி­யைப் பற்றி சொல்­லி­யி­ருக்­கார்’ என்­றா­ராம்.  பிறகு ஒரு நாள் முக்தா சீனி­வா­சன் வாலியை அழைத்­தார்.

 ‘ பாட்­டுக்­கான சிச்­சு­வே­ஷன்– தேவிகா எம்­பி­ராய்­டரி பூ போட­றாங்க. ஜெமினி கணே­சன் பாடற மாதிரி லவ் சாங். நாலஞ்சு பல்­லவி எழு­திட்டு வாங்க. எம்.எஸ். வி. கிட்ட கொடுப்­போம். அவர் ஓகே சொன்னா வச்­சுக்­க­லாம். நான் சொல்­றேன். என் சொந்­தக்­கா­ரன்னு.

 உடனே வாலி மறுத்­தார். ஏன்?’

(தொட­ரும்)