பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 1 – 9–19

பதிவு செய்த நாள் : 01 செப்டம்பர் 2019

பார்க்­கி­றேன். முன்­னாள் அமைச்­சர் ப. சிதம்­ப­ரத்­தின் மீதான வழக்கு! ப. சிதம்­ப­ரத் திற்கு ஜாமீன் மறுப்பு என்­றால் எல்லா எதிர்க்­கட்­சி­க­ளும், ஊட­கங்­க­ளும் அல­று­கின்­றன.  இது அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி என்­கி­றார்­கள் காங்­கி­ர­சும் அதன் கூட்­டணி கட்­சி­யான திமு­க­வும். இதில் எங்கே அர­சி­யல் வந்­தது?

 இந்த வழக்கு துவங்­கி­யது 2007ம் ஆண்டு. அப்­போதே அம­லாக்­கத்­துறை மத்­திய அர­சுக்கு தாக்­கீது அனுப்­பி­யது. அதா­வது ஐ.என். எக்ஸ் மீடியா என்­கிற அந்­நிய நாட்டு நிறு­வ­னம் இந்­தி­யா­வில் முத­லீடு செய்ய அனு­மதி கேட்­டது.முத­லில் அனு­மதி வழங்­கப்­பட்­டது. முத­லில் வந்த தொகை 14.3 கோடி­கள். அதா­வது இந்த நிறு­வ­னத்­தின் ஒரு பங்கு என்­பது பத்து ரூபாய் மதிப்­பீடு.

ஆனால்  நிதி வந்த சில மாதங்­க­ளி­லேயே இந்த நிறு­வ­னம் இந்­தி­யா­வில் எந்த வியா­பா­ர­மும் செய்­யா­ம­லேயே இதன் பங்கு விலை  863 ரூபாய் ஆனது. அதா­வது 86 சத­வீ­தம் மேலே. அதற்­கான பணம் மறு­ப­டி­யும் அயல்­நாட்­டில் இருந்து வந்­தது. இதை வரு­மான வரித்­து­றை­யும், அம­லாக்­கத்­து­றை­யும் ஆட்­சே­பித்து அப்­போது ஆட்­சி­யில் இருந்த மன்­மோ­கன் சிங் அர­சுக்கு தக­வல் அனுப்­பி­யது. ஆனால், மன்­மோ­கன் சிங்­கின் செல்­லப்­பிள்­ளை­யான ப. சிதம்­ப­ரம் அப்­போது  மத்­திய நிதி அமைச்­ச­ராக  இருந்­தார். இந்த நிறு­வ­னத்­தின் முத­லீ­டு­க­ளுக் கெல்­லாம் தங்கு தடை­யின்றி அனு­மதி வழங்­கப்­பட்­டது.

 அதன்  பிறகு ஏர்­செல் விவ­கா­ரம். இதில் சம்­பந்­தப்­பட்ட தொகை ரூ. 3 ஆயி­ரத்து 500 கோடி. இதி­லும் பல முறை­கே­டு­கள். அதன் பிறகு பா.ஜ., ஆட்சி மோடி தலை­மை­யில் வந்­தது. பல­முறை வழக்கு விசா­ர­ணக்கு வந்த போது  எத்­தனை முறை அவ­ருக்­கும் நீதி­மன்­றம் முன்­ஜா­மீன் அளித்­தது? கிட்­டத்­தட்ட இரு­பது முறைக்கு மேல் அவ­ருக்கு  அவர் மக­னுக்­கும் முன் ஜாமீன். இது போக கோல்­கட்­டா­வில் நடந்த சாரதா நிதி நிறு­வன மோச­டிக்கு சிதம்­ப­ரத்­தின் மனைவி நளி­னி­தான் வழக்­க­றி­ஞர். அது போக அந்த நிதி நிறு­வ­னத்­தின் ஊழ­லி­லும் அவ­ருக்கு தொடர்­பி­ருப்­ப­தாக  வழக்கு. அவ­ரும் முன் ஜாமீன் வாங்­கிக் கொண்டே இருக்­கி­றார். ஆனால் அந்த குடும்­பத்­திற்கு மட்­டும் தொடர்ந்து எந்த கோர்ட்­டுக்கு போனா­லும் உடனே முன் ஜாமீன் வழங்­கப்­பட்­டது. இறு­தி­யாக இப்­போது டில்லி ஐகோர்ட் அவ­ரு­டைய முன்­ஜா­மீனை மறுத்­தி­ருக்­கி­றது. பிறகு சுப்­ரீம் கோர்ட்டை நாடி ஓடி­னார்.

ஒரு  முன்­னாள் மத்­திய அமைச்­சர்.  பார்­லி­மென்­டில் நீண்ட நாள் அமைச்­சர். அது­வும் மத்­திய நிதி அமைச்­ச­ரா­க­வும், உள்­துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­த­வர்.  ஏன் தலை­ம­றை­வாக இருந்­தார்? அவர் பத­வி­யில் இருந்த காலத்­தில் அவர் அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கையே எடுக்­க­வில்­லையா ? காங்­கி­ர­சின் கூட்­டணி கட்­சி­யான திமு­க­வின் முன்­னாள் ராஜ்­ய­சபா உறுப்­பி­னர் கனி­மொ­ழி­யும், முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஆ. ராசா­வும் துணிச்­ச­லாக சிறைக்­குப் போக­வில்­லையா?  மற்­ற­வர்­கள் மீது ஊழ­லி­ருந்­தால் பர­வா­யில்லை.  பலர் சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து அர­சி­ய­லுக்கு வந்து, அதன் மூலம் சம்­பா­தித்து கோடீஸ்­வ­ர­ரா­கி­யி­ருப்­பார்­கள். ஆனால் ப. சிதம்­ப­ரத்­தின் நிலை அப்­ப­டியா? அவர் இருக்­கும் பாரம் ப­ரிய பெருமை என்ன? பிறக்­கும் போதே தங்க கரண்­டி­யோடு பிறந்­த­வர்.  கலை­ஞர் வார்த்­தை­க­ளில் சொல்ல வேண்­டு­மா­னால் `செட்­டி­நாட்­டுச் செல்­லப்­பிள்ளை’ அவ­ரது பாரம்ப­ரிய சொத்­துக்­களை அவர்­கள் குடும்­பம் அழிக்க நினைத் தா­லுமே இன்­னும் நாலைந்து தலை­மு­றைக்கு அழிக்க முடி­யாது.  

அது தவிர அவ­ரும் அவர் மனை­வி­யும் கைதேர்ந்த மூத்த வழக்­க­றி­ஞர்­கள். அவர்­கள் கோர்ட்­டில் ஒரு முறை நிற்­ப­தற்கே லட்­சங்­கள் கொடுக்க வேண்­டும். அப்­படி ஒரு சட்­டப் புலமை. அப்­ப­டி­யி­ருக்­கும் போது அவ­ருக்கு ஏன் இந்த ஆசை? ‘அப்­ப­ழுக்­கற்ற அர­சி­யல்­வாதி’ என்­கிற பேர் மட்­டும் நிலைத்­தி­ருக்­குமே? பிள்­ளைப் பாசத்­தி­னால் வந்த விப­ரீ­தம் இது .  நன்­றாக கவ­னித்­தால் ஒரு உண்மை புலப்­ப­டும். ஏழை, நடுத்­தர வர்க்­கத்­தி­லி­ருந்து வளர்ந்­த­வர்­கள் ‘போது­மென்ற மனமே பொன் செய்­யும் மருந்து’ என்­கிற நிலை­மை­யில்­தான் வாழ்­கி­றார்­கள். வங்­கி­களை ஏமாற்­று­வ­தும், பல கோடி ரூபாய்­கள் இருந்­தும் இன்­னும் பண ஆசைக்­காக அலை­வ­தும் கூட ஒரு வித­மான மன­நோய்­தான்.

இந்­தி­யா­வில் இன்று லாப­க­ர­மான தொழில் அர­சி­யல்­தான். பல அர­சி­யல் தலை­வர்­க­ளின் பிள்­ளை­க­ளுக்கு போதிய படிப்பு அறிவு கிடை­யாது. எங்­கே­யும் வேலைக்கு போக­வில்லை. ஆனால் அவர்­கள் பெயர்­க­ளி­லெல்­லாம் பல கோடி ரூபாய் சொத்­துக்­கள். ஜெய­ல­லிதா மறைந்­தார்.

அவ­ரது போயஸ் தோட்­டத்து இல்­லம் என்ன ஆனது? அவ­ரு­டைய பனை­யூர் பங்­களா, கொட நாடு எஸ்­டேட் எல்­லாம் யாருக்கு போகப் போகி­றது? அவ­ரு­டைய வீட்­டில் இருந்த பணம் நகை­க­ளின் கணக்கு எங்கே? சசி­க­லா­வுக்கு பல கோடி பணம், சொத்­துக்­கள். டிடிவி தின­க­ர­னுக்கு அர­சி­யல் நடத்த எங்­கே­யி­ருந்து பணம் வந்­தது ?

ஸ்டாலின் சென்னை புதுக்­கல்­லூ­ரி­யில் பி. ஏ. பட்­ட­தாரி. அவர் எந்த நிறு­வ­னத்­தில் வேலை­யில் இருந்­தார்? அவ­ருக்­கும் அவர் குடும்­பத்­திற்­கும் உள்ள சொத்­துக்­கள் எத்­தனை கோடி? இவை­யெல்­லாம் எப்­படி வந்­தன ? லெட்­டர் பேட் கட்­சித் தலை­வர்­கள் – குறிப்­பாக ஜாதி கட்­சித் தலை­வர்­க­ளுக்­கெல்­லாம் எப்­படி இத்­தனை கோடி சொத்­துக்­கள் வந்­தன?  

விஜ­ய­காந்த் சினி­மா­வில் சம்­பா­தித்­ததை விட அர­சி­ய­லில் தான் அதி­கம் சம்­பா­தித்­தார் என்­றும் ஒரு தக­வல். ஒரு சம­யத்­தில் அவர் மனைவி  பிரே­ம­லதா, சினி­மாவை விட அர­சி­யல்­தான் லாப­க­ர­மான தொழில் என்று நினைக்­கத் துவங்­கி­யது உண்டா, இல்­லையா? அவ­ரு­டைய மைத்­து­னர் சுதீஷ் என்ன தொழில் செய்து கோடீஸ்­வ­ர­ரா­னார்?   விஜ­ய­காந்த் சினி­மா­வில் கோடி­க­ளைத் தொட்டு  குறைந்த அள­வில்­தான் நடித்­தார். ஆனால், ஒரு கட்சி நடத்­து­வது என்­பது சாதா­ரண விஷ­யமா? அதற்கு இவர்­க­ளுக்கு நிதி எங்­கே­யி­ருந்து வந்­தது?

அதே கதை­தான் டாக்­டர். ராம­தாஸ், தொல். திரு­மா­வ­ள­வன் கதை­யும்.  சீமான் கதையை எடுத்­துக் கொள்­ளுங்­கள். அவ­ருக்கு இந்த சொகுசு வாழ்க்கை என்ன சினி­மா­வில் சம்­பா­தித்து கிடைத்­ததா?  இதி­லி­ருந்து தெரிந்து கொள்ள வேண்­டிய உண்மை.  நீங்­கள் உயர் ஜாதிக்­கா­ர­ராக இல்­லா­மல் இருந்­தால்   உங்­க­ளுக்கு பேச்சு திற­மை­யி­ருந்­தால்,  குறிப்­பாக தாழ்த்­தப்­பட்ட இனத்­தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தால் உங்­க­ளுக்கு வாழ்க்­கை­யில் பொரு­ளா­தா­ர­ ரீ­தி­யாக முன்­னேற நல்ல தொழில் அர­சி­யல்­தான்.

படித்­தது!

டால்ஸ்­டா­யின் எழுத்­துக்­களை படித்­துக் கொண்­டி­ருந்­தேன். ரொவு ஆட­வன் தன்­னைப் பற்றி ஒரு பெண் தெரிந்து கொள்­ளக்­கூ­டாத அள­விற்­குக் கூட அதி­க­மான விஷ­யங்­களை  அவ­ளி­டம் சில சந்­தர்ப்­பங்­க­ளில் சொல்லி விடு­கி­றான். அதன் பிறகு அவற்­றைப் பற்றி அவ­ளி­டம் சொன்­ன­தையே அவன் அடி­யோடு மறந்து விடு­கி­றான். ஆனால் அந்­தப் பெண்ணோ அவற்றை ஞாப­கம் வைத்­துக் கொண்டே இருக்­கி­றாள்.

 ஆத்மா : ஆத்மா அகன்ற உடல் பிண­மாகி மண்­ணோடு மண்­ணாய் அழிந்து விடு­கின்­றது. அனை­வ­ரும் அதைக் காண்­கி­றோம். ஆனால் உட­லி­லி­ருந்து வெளி­யே­றிய ஆத்மா அழிந்து போவதை யாரே­னும் காண்­கி­றோமோ?  இல்லை. ஆகை­யால் ஆத்­மா­விற்கு அழி­வில்லை என்றே நான் கரு­து­கின்­றேன்.

 இறை­வன் :  நமக்­குத் தெரி­யும் என்று சொல்­லும்­போது நாம் என்ன அர்த்­தத்­தில் சொல்­கி­றோம்?  நான் டால்ஸ்­டாய் என்­பது எனக்­குத் தெரி­யும். எனக்கு மனை­வி­யும் குழந்­தை­க­ளும் இருக்­கி­றார்­கள் என்­ப­தும், நரைத்த முடி­யும், அவ­லட்­சண முக­மும், ஒரு தாடி­யும் எனக்கு இருக்­கின்­றன என்­ப­தும் எனக்­குத் தெரி­யும். இவை­யெல்­லாம் என் பாஸ்­போர்ட்­டில் இருக்­கின்­றன. ஆனால் அவை பாஸ்­போர்ட்­டு­கள் மூலம் என் ஆத்­மா­வி­னுள் நுழை­வ­தில்லை. என் ஆத்மா ஆண்­ட­வன் அருகே நெருங்­கி­யி­ருக்க தவிக்­கி­றது என்­பது எனக்­குத் தெரி­யும். ஆனால் இறை­வன் என்­பது என்ன? அந்த இறை­வ­னின் ஒரு அணு­தான் என் ஆத்மா, எல்­லாம் அவ்­வ­ள­வு­தான். சிந்­திக்­கக் கற்­றுக் கொண்­ட­வன் அதை நம்­பு­வது கடி­ன­மெ­னக் காண்­கி­றான். ஆனால் நம்­பிக்­கை­யின் மூலமே இறை­வ­னி­டத்­தில் ஒரு­வன் வாழ முடி­யும்.

 இருள் :  மனி­தர்­கள் வெளிச்­சத்தை விட இருட்­டையே விரும்­பு­கி­றார்­கள். ஏனெ­னில், அவர்­கள் செய்­யும்  தீய செயல்­கள் மற்­ற­வர்­க­ளுக்கு தெரி­யாது போவ­தற்­கா­கத்­தான்.

 இன்­பம் :  மனி­த­னு­டைய குழந்­தைப்­ப­ருவ நினை­வு­கள் நினை­வில்லா இன்­பம் பயப்­பவை.

 உண்மை :  உண்மை எப்­போ­தும் தன்னை உண­ரச் செய்­யும்.

 உல­கம் :  நாண­ய­மா­ன­வனை மக்­கள் மதிப்­ப­தில்லை. புறக்­க­ணிக்­கின்­ற­னர். ஆனால், வேஷ­தா­ரி­களை வாழ்த்தி பாராட்­டு­கின்­ற­னர். இது உல­கம்.

  ஏழைக்கு உதவி : அவன் ஏழை­க­ளுக்­காக எது­வுமே செய்­வான். அவ்­வே­ழை­க­ளின் முது­கு­க­ளி­லுள்ள பாரங்­களை இறக்­கு­வ­தைத் தவிர.               ***