பாட்டிமார் சொன்ன கதைகள் – 231 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2019

‘நல்ல காலம்!’

 துரியோதனன் பீமனுக்கு ஊட்டினாலும் அவன் உள்ளத்தில் விஷம். ` இப்போதுதான் உண்மையான சகோதரனாகவும், சினேகிதனாகவும் இருக்கிறான் துரியோதனன் என்று சந்தோ ஷப்பட்டான் தர்மபுத்திரன். பீமசேனனோ பட்சணங்களை வஞ்சனை யில்லாமல் பட்சித்துக் கொண்டே ` இவனுக்கு ஏன் நாம் விளையாட்டிலும் கூடத் தொந்த்ரவு கொடுத்தோம்.‘ என்று எண்ணத் தொடங்கினான். துரியோத னனோ உடம்புக்கு தகுந்தபடி மூளை யில்லையே‘ என்று உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

 பீமன் மயங்கி விழுந்தான்.` வயிறு  தெரியாமல் தின்றுவிட்டு இப்படித் தூங்குகிறான்.‘  என்று நினைத்தான் தர்மபுத்திரன். தர்மனுக்கும் மூளை யில்லையென்று தீர்மானித்துவிட்டான் துரியோ தனன். ` இரண்டாவது தட வையும் விஷத்தைத் தடவி விட்டேன். இன்னும் தெரியவில்லையே?’ என்று குதூகலத்தோடு பீமனை மறுபடியும் கட்டி கரையிலிருந்து இழுத்துத் தண்ணீ ரில் தள்ளிவிட்டார்கள்.

அது  ஆழமான ஒரு மடு. தண்ணீ ருக்குள்  சூலங்கள் இடைவிட்டு  நாட்டப் பட்டிருந்தன. ஆனால் பீமன் விழுந்த இடத்தில் சூலம் இருக்கவில்லை. அவ முழுகி முழுகி கீழே போய்விட்டானாம். அங்கே நாக குமாரர்கள் மேலே போய் விழுந்தானாம். அனேக நாகங்கள் கோரப் பல்லும் கொடிய  விஷ முமுள்ளவை – சேர்ந்து கோபத்தோடு கடித்தனவாம். அதனால் பீமன் செத்தே போய்விட்டானா?  துரியோதனனுடைய நோக்கம் பலித்துவிட்டதா ?

அதுதான் இல்லை. ஸ்தாவர விஷத்தை அல்லவா துரியோதனன் பட்ச ணங்களில் கலந்து வைத்தான்? அந்த விஷத்தை இந்த விஷம் கடித்து விட்டதாம். பீமன் பிழைத்துக் கொண்டான். விழித்துக் கொண்டான். கட்டுக்களையெல்லாம் உதறி அறுக்கும் போதே சில சர்ப்பங்களை நசுக்கிவிட்டானாம். மிஞ்சின நாகங் களையெல்லாம் சர்ப்ப ராஜாவான வாசு கியிடம் போய் ` மகாராஜாவே! இந்த மனிதன் அசைவற்றவனாக எங்களிடம் வந்தான். கடிக்கப்பட்டதும் கட்டை அவிழ்த்துக்கொண்டு எங்களை நசுக்கு கிறான்‘ என்று முறையிட்டுக் கொண்ட னவாம்.

வாசுகி பீமனைப் பார்த்து சந்தோ ஷித்து ` ஆயிரம் யானை பலமுள்ள ரஸம் ஒவ்வொரு குடத்திலும் வைக்கப்பட்டி ருக்கிறது! உன்னால் எவ்வளவும் குடிக்க முடியுமோ அவ்வளவு குடித்துக் கொள்ளலாம்.’ என்று சொன்னானாம். பீமனும் வஞ்சனையில்லாமல் ஒரே மூச்சில் ஒரு குடம் வீதம் எட்டுக் குடங்களைக் குடித்து விட்டானாம். பிறகு நாக குமாரர்களால் மங்கள ஆசீர்வாதம் பெற்று அந்த பாண்டு குமாரன் மறுபடியும் நித்திரை செய்யத் தொடங்கினான் – அந்த லோகத்தி லேயே. இரவு கழிந்ததும் தர்மன் முத லான பாண்டவர்கள் பீமசேனனைக் காணாமல் திகைத்தார்கள். துரியோத னனோ சிரித்து,`  பீமன் நமக்கு முன்ன மேயே எழந்து போய் விட்டான் ; இன்று அவ்வளவு சுறுசுறுப்பு வந்துவிட்டது போலிருக்கிறது’’  என்று சொல்லிக் கொண்டே அவ்விடத்தை விட்டு நக ரத்திற்குப் புறப்பட்டான். தன்னைப் போலவே பிறரையும் யோக்கியனாக நினைத்த தர்மபுத்திரனும் துரியோதனனு டைய ஹாஸ்ய புத்திக்காக சந்தோஷம டைந்து அரண்மனைக்குத் திரும்பினான். அங்கே தாயார நமஸ்கரித்து ‘அம்மா! தம்பி வந்து விட்டானா?’ என்று விசா ரித்தான். அப்படி விசாரிக்கும்போதே  தர்மபுத்திரன் மனம் தெளிவாயில்லை. அரண்மனையில் பீமனைக் காணாததால் துரியோதனனுடைய துர்புத்தியும் பழைய செயல்களும் ஞாபகத்திலே பாய்ந்து வந்தன. குந்தியும் பதை பதைத்து `  ஹா ஹா!  பீமனை நான் பார்க்கவில்லை.   தம்பிகளுடன் கூட விரைந்து போய் அவளை தேடவேண்டும்’ என்றாள். கங்கைக் கரையெங்கும் தேடினார்கள். தோணிகளைக் கொண்டு ஆற்றோரமாக வும்  தேடிப் பார்த்தார்கள். விதுரனை கலந்து ஆலோசித்தார்கள். ‘துரியோத னன் கெட்ட நினைவுள்ளவன். என் மனம் கலங்குகிறது’  என்று கண்ணீர் வடித்தான் தர்மபுத்திரன். ` என் வயிறு எரிகிறதே! என்று கதறினாள் குந்தி. விதுரம் ஆறுதல் சொன்னான். தைரி யப்படுத்தினான்.

பூலோகத்தில் இவர்கள் இப்படி யெல்லாம் வருந்திக்கொண்டி ருக்கும் போது, நாக லோகத்திலே நித்திரை செய்து கொண்டிருந்த பீமசேனன் பக இரவு என்று வித்தியாசம் இல்லாமல் சில தினங்களாக தூங்கிக் கொண்டே யிருந்தானாம். எட்டாவது நாள் விழித்தெ ழுந்ததும் குடம் கணக்காக குடித்திருந்த அந்த ரஸம் இரத்தத்தோடு  இரத்தமாய் ஊறி அவனை அளவிட முடியாதபடி பலமுள்ளவனாக்கி விட்டதாம். நாகர்கள் சிறிது தூரத்தில் இருந்து கொண்டே மெல்ல சமாதானப்படுத்தி `பதினாயிரம் யானைகளின் பலம் உனக்கு வந்து விட்டது. இப்போது பாண்டவனே ! உன் சகோதரர்களும், தாயாரும் துக்கப்படு கிறார்கள். வீட்டுக்கு போ’  என்று சொல்லி வாழ்த்தினார்கள். பிறகு அவர்களே அவனை மெல்ல மெல்லத் தூக்கிக்கொண்டு மேலே வந்து கரையிலே விட்டு விட்டார்கள்.

தாயாரும் சகோதரமார்களும் ` நல்ல காலம்’ என்று அவனைத் தழுவிக் கொண்டார்கள். ‘இது முதல் நாம் ஜாக்கி ரதயாக இருக்க வேணும்’ என்று உறுதி கொண்டார்கள். துரியோதனன் பெரு மூச்சு விட்டான். பால லீலை களிலும் பால்ய சேஷ்டைகளிலுமே  பாரத யுத்தத்தின் விதை  விழுந்து விட்டது.

ஒரு நல்ல பாடம்

குருகுல ஆசிரமத்தில் ராஜகுமார னும்  ரிஷிகுமாரனும் சேர்ந்து அத்யயனம் செய்து கொண்டிருந்தார்கள்.  ராஜ குமாரன் பிரியமாய்ப் பேசுவதில் சமர்த்தன். ரிஷி குமாரனோ அடக்கமாய் ராஜகுமாரன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பான். ஒரு நாள் ராஜகுமாரன் சொன்னான் ` சினேகித னாகிய உனக்கு நீ விரும்பியபோ தெல்லாம் நான் உதவி செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன். என் தந்தை எப்போது எனக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்யப் போகிறாரோ அப்போது பாதி ராஜ்யம் நீயும் அனுபவிக்கத் தக்கது தான்! என்னுடைய போகங்களும் பாக்கி யங்களும் உனக்கும் உரியவை.’

( தொடரும்)