ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 28–8–19

பதிவு செய்த நாள் : 28 ஆகஸ்ட் 2019

ரஜினி – பாலு காம்­பி­னே­ஷன்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

‘‘கொஞ்­சிக் கொஞ்சி அலை­கள் ஆட’’ பாட­லைப் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முறை­கள் கேட்­டி­ருக்­கி­றேன். மன­மி­ளக்­கி­வில்லை என்­பதை விட மன­நோய்­மை­யைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரக் கூடிய அங்­கு­சக் கூர்மை இந்­தப் பாடல். எத்­த­னையோ முறை நான் இதன் வச­மாகி இருக்­கி­றேன். இரண்டு விஷ­யங்­க­ளுக்­காக இந்த பாடல் மிக­மிக முக்­கி­ய­மா­னது. ‘‘மடை திறந்து’’ என்ற பாடல் இளை­ய­ராஜா இசை­ய­மைப்­பா­ள­ராக முயற்சி செய்­கிற சந்­தி­ர­சே­க­ரின் பாட­லாக அமைத்­தி­ருப்­பார். அதனை அவ­ரைத் தவிர வேறு யாரா­லும் மிஞ்­சவே முடி­யாது என்­பது இந்த பாட­லில் ரஜி­னி­காந்த் இசைப்­போட்டி ஒன்­றில் கலந்து கொண்டு வென்று இசை­ய­மைப்­பா­ள­ராக மாறி பெரும்­பு­கழ் அடை­வார். இந்­தப் பாடல்­கள் இரண்­டை­யும் அரு­க­ருகே வைத்­தால் ஒன்று – உற்­சா­கத்­தின் கொண்­டாட்­டம் என்று அமைந்­தி­ருக்­கும். இன்­னொன்று – அமை­தி­யின் ஆழ்­யவ்­வ­னம் என்று நிகழ்ந்­தே­றும். இது ராஜ­வ­ரிசை. ‘‘மடை திறந்து’’ பாட­லின் துவக்­கம் ஹார்­மோ­னி­யம் இங்கே பாடல் முடி­வில் தன்னை இணைக்­கும் அதே ஹார்­மோ­னி­யம்.

  அடுத்த விஷ­யம்  ‘‘கொஞ்­சிக் கொஞ்சி’’ பாட­லில் ஆழ­மும் உய­ர­மும் மாறி மாறி வரும். இசை­யின் இழை­த­லா­கட்­டும் குர­லின் பய­ண­மா­கட்­டும் எல்­லாமே ஏறி இறங்கி, ஏறி இறங்கி வித்தை காட்­டும். இந்த பாடல் அந்த ஆண்­டின் ‘நம்­பர் ஒன்’  ஆக அந்த வரு­டம் முழு­வ­தும் ஆண்­டது. பின் நாட்­க­ளில் வந்த ‘காத­லுக்கு மரி­யாதை’ படத்­தின் ‘‘என்­னைத் தாலாட்ட வரு­வாளா’’ பாட­லின் மைய இழை­த­லும் மேற்­சொன்ன ‘‘கொஞ்­சிக் கொஞ்சி’’ பாட­லின் அதே இழை­யின் இன்­னொரு அலை­தல்­தான் என்­பது கூடு­தல் வசீ­க­ரம்.

 ரஜினி – எஸ்.பி.பி. காம்­பி­னே­ஷ­னில் எத்­த­னையோ பாடல்­கள் வந்­தி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு வரி­யை­யும் ஏன் சொல் ஒவ்­வொன்­றாக எடுத்­தெ­டுத்து ரஜி­னிக்­கா­கப் பாடு­வார் பாலு. குழை­வ­தி­லா­கட்­டும், கம்­பீ­ர­மா­கட்­டும் மற்ற யாருக்­கும் மெனக்­கெ­டு­வதை விட­வும் தனக்­குள் இருக்­கிற ரஜி­னியை ஆக்­டி­வேட் செய்­து­தான் அவற்­றைப் பாடு­கி­றார் பாலு என்று கூடத் தோன்­றும். ரஜி­னிக்­கா­கப் பாடப்­பட்ட குரல்­க­ளி­லேயே உத்­த­மக் குரல் பாலு­தான்.

 மற்ற எந்த நடி­கர் – பாட­கர் காம்­பி­னே­ஷனை விட­வும் நேச­காம்போ ஆகவே ரஜினி – பாலு இணையை சொல்ல முடி­யும் எனத் தோன்­று­கி­றது. பாலு­வின் பாடல்­கள் என்று தனித்­த­றிய முடி­யா­த­தும் ரஜி­னி­யின் பாடல்­கள் என்­றாலே பாலு­வின் குரல் வந்து தானா­கவே ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­ப­தும் அந்த இணை­யின் வசீ­க­ரம். ஒரே நிகழ்­த­லின் இரு­வேறு பரி­ணா­மங்­கள் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம் மற்­றும் ரஜினி இணைந்­த­ளித்த பாடல்­கள்.

‘‘ராஜாதி ராஜ­னிந்த ராஜா’’ எனும் பாட­லில் வரும் பிர­பு­தே­வா­தான் எத்­தனை அழகு. பின்­னா­ளில் அதே கார்த்­திக்­கோடு நாய­க­னாய் அவரே நடித்­த­தும் இந்­தப் பாடலை இசை­ய­மைத்­துப் பாடிய அதே இளை­ய­ரா­ஜா­வின் இயற்­பெ­ய­ரைத் தாங்­கிய ‘‘ராசய்யா’’ எனும் படத்­தில் நாய­க­னாய் நடித்­த­தும் பின்­னர் நடந்த மேஜிக்­கு­கள்.

 குழு­வில் நட­ன­மா­டு­ப­வர்­க­ளின் செயற்­கை­யான முக­ம­லர்­தல்­க­ளைக் கவ­னித்­தி­ருக்­கி­றீர்­களா? யாரும் பரா­ம­ரிக்­காத வனத் தோட்­டத்­தின் தன் விருப்ப மலர்­களை ஒத்­தவை அவர்­க­ளின் முகங்­கள். அவர்­க­ளைப் பொறுத்­த­வரை தனியே ஒரு பாட்­டில் தோன்­றி­விட மாட்­டோமா என்­பது அவர்­க­ளின் பெரிய கனவு. குறைந்­த­பட்­சம் ஒரு வரிசை முன்­னேறி விட மாட்­டோமா என்­பது மத்­தி­மக் கனவு. இருக்­கும் அந்த இடத்தை அப்­ப­டியே தக்­க­வைத்­துக்­கொள்ள மாட்­டோமா என்­பது அவர்­க­ளின் வாழ்­வா­தார இச்சை. இணை­ய­த­ளங்­கள் இன்­றைக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கக் கூடிய ஒரு தனி நபர் மன நடுக்­கம் இங்கே சொல்­லத்­தக்­கது. சதா சர்வ காலம் எண்­ணற்ற கண்­கள் தங்­களை உற்று நோக்­கிக் கொண்­டி­ருப்­ப­தாக நம்­பு­வது. எதை­யா­வது வித்­தி­யா­ச­மா­கச் சமைத்­துத் தன் இணை­யத்­தில் பரி­மாறி விட வேண்­டும் என்­கிற நித்­திய நடுக்­கம், முடி­யா­மற் போகை­யில் பெரிய நோய்­மை­யைத் தரு­கி­றது. அது போலவே தான் குழு­வில் ஆடு­ப­வர்­கள் தாங்­கள் தனித்­துத் தெரி­யப் போகி­றோம் அதற்­கான முன் காரி­ய­மா­கவே குழு­வில் தோன்­று­கி­றோம் என்று எல்­லோ­ருமே நம்­பு­வார்­கள்.

 கூட்­டத்­தில் நிற்­ப­வர்­கள், குழு­வில் ஆடு­கி­ற­வர்­கள், சினி­மா­வில் ஒரு நெடுங்­கா­லத் தவ­மா­கவே அவற்­றைக் கொள்­கி­றார்­கள். நடன உத­வி­யா­ளர்­கள், நடன இயக்­கு­னர்­க­ளாக முன்­வர விழை­வது ஒரு நட்­சத்­திர விவ­சா­யம். இதில் நாய­க­னா­வது, இயக்­கு­ன­ரா­வது வேறு எதா­வது என்­ப­ன­வெல்­லாம் தரை­யில் உருண்டு உடை­யா­மல் கைக்­குக் கிட்­டிய குதிரை முட்­டை­கள் போன்­றவை. இதில் யாரோ ஒரு­வர் வாழ்­வாங்கு வாழ்ந்­ததை சொல்­லிச் சொல்­லியே காற்­றா­கா­ரம் பரு­கிக் காத்­தி­ருந்து காத்­தி­ருந்து கன­வு­திர்­கா­லம் தீர்ந்­த­வர்­கள் கோடிப் பேர். முகம் கொண்டு தோன்­று­வது, ஒரே இடத்­தில் ஓடு­வ­தைப் போன்ற நிதர்­ச­னத்தை மீறி, அந்­தந்­தப் படங்­க­ளைச் சொல்லி, அந்த படத்­தில் அந்த இடத்­தில் நான் வரு­வேன், இந்­தப் படத்­தில் இந்­தக் கட்­டத்­தில் நானும் தெரி­வேன் என்­றெல்­லாம் சொல்­லிக் கொள்­வ­தன் மூல­மாக சினிமா என்­கிற காது கேளாத தேவதை, கண்­கள் மூடி உறங்­கு­கை­யில், வெட்­டித் தள்­ளு­கிற எதிர்­காற்­றின் மத்­தி­யில், தன் பல­மி­லிக் குர­லால், அதன் கவ­னம் திருப்ப விழை­யும் பாவப்­பட்ட கலை­ஞர்­க­ளின் கூட்­டுப் பிரார்த்­த­னை­கள்­தான் குழுப் பாடல்­கள். இதை யாரா­வது பார்ப்­பார்­கள், நம்மை அழைப்­பார்­கள், ஒரு வாய்ப்­பைத் தரு­வார்­கள், இதன் மூல­மாக எதா­வது கிட்­டும் என்­ப­தை­யெல்­லாம் மன­துள் நிறுத்­தி­ய­படி நிகழ்த்­தப்­ப­டு­ப­வை­தான் அப்­ப­டி­யா­னப் பாடல் நடுப் புன்­ன­கை­கள். எப்­போ­தா­வது, எங்­கா­வது, யாரா­வது, எதா­வது ஒரு பாட­லின் நடுவே தோன்­றிய உப நடி­கர் ஒரு­வரை அடை­யா­ளம் கண்­டு­கொள்­வார்­க­ளே­யா­னால், அக­டமி விரு­து­க­ளை­யெல்­லாம் விட­வும் அவை முக்­கி­ய­மா­னவை.

‘‘சந்­தி­ர­லேகா’’ டிரம் டான்ஸ் தொடங்கி, முந்தா நேத்­துப் பய்­யர் கவு­தம் கார்த்­திக் பாட­லில் உடன் ஆடி­ய­வர்­கள் வரை நுாறு ஆண்­டு­களை நெருங்­கப் போகும் இந்­திய சினிமா வர­லாற்­றில் தெரிந்து கொண்டே தெரி­யா­மற் போன, பெரும் பிர­கா­ச­மாய் ஒளிர்ந்து பிறகு மங்கி உதிர்ந்­த­ணைந்த எத்­தனை எத்­தனை லட்­சக் கணக்­கான மாந்­தர்­க­ளின் நிஜ­மா­காத கன­வு­க­ளின் செல்­லப் பெயர் சினிமா என்­பது. நாய­கனை விடப் பொலிவோ, உய­ரமோ இன்ன பிற எது­வுமோ கூடா­மல் குறை­யா­மல் வேண்­டி­யது வேண மட்­டும் எனப் பார்த்­துப் பார்த்­துப் பண்­ணு­வது பாங்கு.