சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

பதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 17:13

சென்னை,         

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், 3வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் ஒருகட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,”கடுமையான நீட் தேர்வை தாண்டி மருத்துவ துறையில் நுழைவது சவாலான விஷயம். இந்நிலையில் ஒரு பக்கம் மருத்துவர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியம் மிகவும் குறைவு.

எனவே, அரசு உடனடியாக அரசாணை எண்.354-ஐ மறுஆய்வு செய்து முழுமையான சம்பளம் கிடைக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்று வலியுறுத்தினர்.