ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 21–8–19

பதிவு செய்த நாள் : 21 ஆகஸ்ட் 2019

‘‘கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட....!’’

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

‘‘கண்­ம­ணியே காத­லென்­பது கற்­ப­னையோ’’ பாடலை எத்­தனை முறை சுவைத்­தா­லும் இனிக்­கும். ‘‘பேரைச் சொல்­லவா அது நியா­ய­மா­குமா..?’’ பாட­லும் கூட அள­வெ­டுத்­துச் செய்த வார்த்­தைச் சிற்­பம்­தான். ரஜி­னிக்­கான பாடல்­கள் ரஜி­னியை நினை­வு­ப­டுத்­து­வதோ அல்­லது நினை­வைக் கிளர்த்­து­வதோ அல்ல. மாறாக, அவை ரஜி­னிக்கு வேறொ­ரு­வ­ரான பாலு குரல் தந்த பாடலை ரஜினி பாடிய பாடல்­க­ளாக்கி நமக்­குத் தரு­பவை. அல்­லது ரஜி­னி­யின் பாடல்­க­ளாகி நமக்­குள் வரு­பவை. அப்­படி வந்த பாடல்­க­ளைத் தொகுத்­தால் ரஜினி பாடல்­கள் என்­கிற தனித்த இசைப்­பேழை ஒன்­றாக அது மல­ரும். ‘‘ராத்­தி­ரி­யில் பூத்­தி­ருக்­கும் தாம­ரை­தான் பெண்ணோ’’ பாடல் ஒரு சூத்­தி­ரத்­தில் அடங்­காத நன்­மாலை அல்­லவா..? ‘‘அடி வான்­மதி என் பார்­வதி’’ என்ற ‘சிவா’ படப்­பா­டல் பட­ப­டக்­கும் பட்­டாம்­பூச்­சி­யைப் பாட்­டில் பெயர்க்­கும் முயற்சி என­லாம்.

‘‘அடுக்கு மல்­லிகை இது ஆள் பிடிக்­குது’’ பாட­லைக் கேட்­டால் ரசம். பார்த்­தால் கொஞ்­சம் சர­ச­மும், விர­ச­மு­மாய் வேறா­கும். ‘மூன்று முக’த்­தில் ‘‘நான் செய்த குறும்பு உண்­டாச்சு கரும்பு’’ பாடலை எப்­படி வகைப்­ப­டுத்­து­வது..? அதன் ஆரம்­பத்­தி­லி­ருந்தே அள்­ளித் தெளித்­தி­ருப்­பார் பாலு. ‘‘தேவாம்­ரு­தம் ஜீவாம்­ரு­தம் கண்ணா’’ பாடலை வேறு ஸ்டைலில் குழைத்­தெ­டுத்­தி­ருப்­பார் பாலு. ‘‘மாசி மாசம் தான் மேள தாளம் தான்’’ ‘ஊர்க்­கா­வ­லன்’ பாடல் அட்­ட­கா­சத் தேன்­மழை.

‘‘மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்­லாம்’’ பாடல் சொன்­னோ­மல்­லவா..? ‘‘நான் பொல்­லா­த­வன் பொய் சொல்­லா­த­வன்’’ பாடல் ரசி­கர்­க­ளின் வழித்­த­ட­மாய் மாறிய பாடல். ‘ரங்கா’ படத்­தில் வரு­கிற ‘‘ஏம் பேரு ரங்கா உன்­னு­டைய பங்கா’’ பாடல் அத்­தனை ஸ்டைல் கொப்­ப­ளிக்­கும்.

‘‘தென்­ம­துரை வைகை நதி தினம் பாடும் தமிழ்ப்­பாட்டு’’ என்ற பாடலை சிறு­வ­ய­தி­லி­ருந்தே வியந்­தி­ருக்­கி­றேன். ‘‘கண்டு பிடிச்­சேன் கண்டு பிடிச்­சேன்’’ ‘குரு சிஷ்­யன்’ பாடல், ‘‘ஆணென்ன பெண்­ணென்ன நீயென்ன நானென்ன எல்­லாம் ஓரி­னம்­தான்’’ ‘தர்­ம­துரை’ பாடல், ‘துடிக்­கும் கரங்­கள்’ படத்­தில் பாலுவே ரஜி­னிக்­காக இசை­ய­மைத்­துப் பாடிய ‘‘மேகம் முந்­தானை’’ பாடல் மறக்க முடி­யாத ஒரு நல்­வ­ரம்.

கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

காற்­றிலே பர­வும் ஒலி­கள்

கன­விலே மிதக்­கும் விழி­கள்

கண்­டேன் அன்பே அன்பே

ஓ… அன்­பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

அன்­பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

என்­றும் உன்னை பாடு­வேன்

மன­தில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

 மாங்­கு­யில் கூவுது மாம­ரம் பூக்­குது

மேகம் வந்து தாலாட்ட

பொன் மயில் ஆடுது வெண்­பனி தூவுது

பூமி எங்­கும் சீராட்ட

ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்­ச­லாட

ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்­ச­லாட

அன்­னங்­க­ளின் ஊர்­வ­லம்

ச க ரி ம க… ம ம ட ப நி… ட ச நி ரி நி…

சுவ­ரங்­க­ளின் தோர­ணம்

எங்­கெங்­கும் பாடுது காதல் கீதங்­களே

 கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

 மாத­வன் பூங்­கு­ழல் மந்­திர கீதத்­தில்

மாதர் தம்மை மறந்­தாட

ஆத­வன் கரங்­க­ளின் ஆத­ர­வால் பொன்னி

ஆற்­றில் பொற்­கோல் அலை­யாட

காலை பனி­யில் ரோஜா புது கவிதை பாடி ஆட

காலை பனி­யில் ரோஜா புது கவிதை பாடி ஆட

இயற்­கை­யின் அதி­ச­யம்

ச க ரி ம க… ம ம ட ப நி… ட ச நி ரி நி…

வான­வில் ஓவி­யம்….

எங்­கெங்­கும் பாடுது காதல் கீதங்­களே

 கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

 கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

காற்­றிலே பர­வும் ஒலி­கள்

கன­விலே மிதக்­கும் விழி­கள்

கண்­டேன் அன்பே அன்பே

அன்­பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

அன்­பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

என்­றும் உன்னை பாடு­வேன்

மன­தில் இன்ப தேனும் ஊறும்

 கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

 கொஞ்சி கொஞ்சி அலை­கள் ஓட

கோடை தென்­றல் மலர்­கள் ஆட