உத்தரகாண்டில் இடி, மின்னல், கனமழைக்கு17 பேர் பலி

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2019 13:57

உத்தரகாசி,

உத்தரகாண்டில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரகாண்டில் சமீப நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உத்தரகாசி நகரில் மோரி பகுதியில் உள்ள அரகோட் என்ற இடத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை அடுத்து இடி, மின்னலால் காயமடைந்தோர் டேராடூன் நகருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

உத்தரகாண்டின் நிதி செயலாளர் அமித் நேகி, போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரகோட் பகுதிக்கு நேரில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண் செயலாளர் (பொறுப்பு) முருகேசன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, உத்தரகாண்டில் கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார்.