மனங்களை வென்ற சுஷ்மா...! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 15 ஆகஸ்ட் 2019

'என் அப்பாவை ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள். என் அப்பா எந்த தவறும் செய்யவில்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று சிறுமி ஒருவர், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ்க்கு ட்வீட் செய்கிறாள். அப்போது, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா, 'மகளே உன்னைப் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பு. நாங்கள் உனக்கு நிச்சயம் உதவி செய்வோம்' என்று பதிலளிக்கிறார்.

டுவிட்­டர் வழி­யாக மக்­க­ளு­டன் எப்­போ­தும் எந்­நே­ர­மும் தொடர்­பில் இருந்­த­வர் சுஷ்மா. பாஸ்­போர்ட் பிரச்­னை­யில் இருந்து குழந்­தை­யின் இதய அறு­வை­சி­கிச்சை வரைக்­கும் இணை­யம் வழி மக்­க­ளுக்கு உதவி செய்­து­கொண்­டி­ருந்­த­வர் சுஷ்மா ஸ்வராஜ். அத­னால்­தான் பாகிஸ்­தான் சிறை­யில் இருந்து சுஷ்­மா­வின் முயற்­சி­யால் மீட்­கப்­பட்ட ஹமீது அன்­சாரி, 'அவர் என் அம்­மா­வைப் போன்­ற­வர். அவர் என்­றென்­றைக்­கும் என் இத­யத்­துக்­குள் வாழ்ந்­து­கொண்­டி­ருப்­பார்' என்று தேம்­பி­யி­ருக்­கி­றார். தவிர, மேலே­யுள்­ளது போன்ற டுவீட்­க­ளுக்­கும் பதில் கொடுத்­த­வர் சுஷ்மா. இதன் கார­ண­மா­கவே, மக்­க­ளின் மனங்­க­ளுக்கு 'தன் வீட்­டுப் பெண்' என்று நெருக்­க­மாக உண­ரப்­பட்­ட­வர்.

சில வரு­டங்­க­ளுக்கு முன்­னால், சுஷ்மா இரண்டு சிறு­நீ­ர­கங்­க­ளும் செய­லி­ழந்து மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போது, அவ­ரு­டைய உற­வி­னர்­க­ளின் சிறு­நீ­ர­கம் சுஷ்­மா­வுக்­குப் பொருந்­த­வில்லை. ஆனால், அவர்­மேல் மரி­யாதை வைத்­தி­ருந்த பல­ரும் அவ­ருக்கு தங்­கள் சிறு­நீ­ர­கத்­தைத் தானம் தர முன் வந்­தார்­கள். இதில் மாற்று மதத்­தைச் சேர்ந்­த­வர்­கள், பா.ஜ.க அல்­லாத வேறு கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளும் அடக்­கம். அந்த அள­வுக்கு மக்­க­ளின் மனங்­களை வென்­றி­ருந்­தார் சுஷ்மா.

பாரா­ளு­மன்­றத்­தில், பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் என எப்­போ­தும் சிரித்த முகத்­து­டன் வலம் வந்­து­கொண்­டி­ருந்த சுஷ்­மா­வின் அர­சி­யல் வாழ்க்கை, பொது­வாழ்க்­கை­யில் ஜெயிக்­கத் துடிக்­கும் பெண்­க­ளுக்கு நல்­ல­தொரு வழி­காட்­டி­யாக இருக்­கும் என்று தாரா­ள­மா­கச் சொல்­ல­லாம்.

அர­சி­யல் அறி­வி­ய­லில் பட்­டப்­ப­டிப்பை முடித்­த­வர். அதன்­பின்­னர் பஞ்­சாப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சட்­டப்­ப­டிப்­பை­யும் முடித்­தார். ஹரி­யா­னா­வின் மொழி­யி­யல் துறை­யில் தொடர்ந்து 3 வரு­டங்­கள் 'சிறந்த இந்­திப் பேச்­சா­ளர்' விரு­தைப் பெற்­றி­ருக்­கி­றார். தவிர, என்.சி.சி-யில் சிறந்த மாண­வர் விரு­தை­யும் பெற்­றி­ருக்­கி­றார்.

கல்­வி­யைத் தாண்டி, இசை, கவி­தை­கள், நாட­கம் மற்­றும் நுண்­க­லை­க­ளில் ஆர்­வம் என ஆல் ரவுண்­ட­ரா­க­வும் தன் பள்ளி மற்­றும் கல்­லூ­ரிக் காலங்­க­ளில் வலம் வந்­தி­ருக்­கி­றார் சுஷ்மா. ஆசி­ரி­யர்­கள் பாராட்­டு­கிற அள­வுக்கு அவ­ரு­டைய மேதைமை தன்மை இருந்­தி­ருக்­கி­றது. ஒற்றை வரி­யில் சொல்ல வேண்­டு­மென்­றால், தன் எதிர்­கா­லத்தை தன் கல்­வி­யின் மேல் கட்­டி­ய­வர் சுஷ்மா ஸ்வராஜ்.

சுஷ்­மா­வின் பெய­ருக்­குப் பின்­னால் ஸ்வராஜ் சேர்ந்­த­தின் பின்­னால் ஒரு காதல் மட்­டு­மல்ல, ஒரு போராட்­ட­மும் இருந்­தி­ருக்­கி­றது. ஹரி­யா­னாவை சொந்த ஊராக கொண்ட சுஷ்மா, அங்கு 'ஆச்­சா­ர­மா­ன­வர்­கள்' என்று சொல்­லப்­பட்டு வந்த ஒரு குடும்­பத்­தில் பிறந்­த­வர்.

சட்­டக்­கல்­லூ­ரி­யில் சுஷ்­மா­வும் ஸ்வரா­ஜும் முதன்­மு­றை­யாக சந்­திக்­கி­றார்­கள். சுஷ்மா ஆர்.எஸ்.எஸ் பற்­றா­ளர். ஸ்வராஜோ, சோஷி­ய­லிச நம்­பிக்­கை­யா­ளர். இவற்­றை­யெல்­லாம்­தாண்டி 'கற்­றாரை கற்­றாரே' என்ற அடிப்­ப­டை­யில் இரு மனங்­க­ளும் ஒன்­றை­யொன்று விரும்ப ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. பிறகு, உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­க­றி­ஞ­ரா­கப் பயிற்சி எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது ஒரே டீமில் வேலை பார்த்­தி­ருக்­கி­றார்­கள்.

பொது­வாக, காத­லித்­துக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு ஒரே இடத்­தில் வேலை­யும் அமைந்­து­விட்­டால், 'இரு­வ­ரும் எப்­போ­தும் பார்த்து கொண்­டி­ருக்­க­லாம்' என்று சந்­தோ­ஷப்­ப­டு­வார்­கள். ஆனால், இவர்­கள் உச்ச நீதி­மன்­றத்­தில் பயிற்சி எடுத்­துக் கொண்­டி­ருக்­கும்­போது, இந்­தி­யா­வில் அது எமர்­ஜென்சி கால­கட்­டம். எமர்­ஜென்­சி­யில் கைது செய்­யப்­பட்டு, சிறை சென்­ற­வர்­க­ளுக்­காக இல­வ­ச­மாக வழக்­கா­டிக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு காத­லிப்­ப­தற்­கெல்­லாம் நேர­மில்லை.

ஒரு கட்­டத்­தில் இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள முடி­வெ­டுக்­கி­றார்­கள். இரண்டு குடும்­பங்­க­ளுமே ஒப்­புக்­கொள்­ள­வில்லை. கல்­வி­யும் காத­லும் கொடுத்த உறு­தி­யில் போராடி, 1975, ஜூலை 13 அன்று தம்­ப­தி­க­ளா­கி­றார்­கள். தான் மறை­வ­தற்கு ஒரு மாதத்­துக்கு முன்­னால்­தான் தன்­னு­டைய 44-வது திரு­மண நாளைக் கொண்­டா­டி­னார் சுஷ்மா.

எமர்­ஜென்சி முடிந்­த­தும் ஜனதா கட்­சி­யில் (பா.ஜ.க) இணைந்­தார் சுஷ்மா. பிறகு, தன்­னு­டைய 25 வய­தில் ஜனதா கட்­சி­யின் மிக இள வயது அமைச்­ச­ரவை மந்­திரி ஆனார். தன்­னு­டைய 27-வது வய­தில் அக்­கட்­சி­யின் ஹரி­யானா மாநி­லத் தலை­வர், ஒரு தேசி­யக் கட்­சி­யின் முதல் பெண் செய்­தித் தொடர்­பா­ளர், பா.ஜ.க-வின் முதல் பெண் முத­ல­மைச்­சர், பொதுச் செய­லா­ளர், எதிர்க்­கட்­சித் தலை­வர், மத்­திய அமைச்­சர் என 'முதல் முறை­யாக' என்ற பட்­டத்தை பல­முறை பெற்­ற­வர் சுஷ்மா. 'வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர்' பத­வி­யில் மட்­டும், முன்­னாள் பிர­த­மர் இந்­தி­ரா­காந்தி முந்­திக்­கொண்­ட­தால் இரண்­டாம் பெண்­மணி. ஆனால், முழு நேர வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­ராக இவர்­தான் முதல் பெண்­மணி. 7 முறை மக்­க­ளவை எம்.பி-யாக இருந்த சுஷ்மா, 'சிறந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விருது' பெற்ற முதல் மற்­றும் ஒரே பெண்­மணி. தாயைப்­போ­லவே பிள்ளை என்­பார்­கள். சுஷ்­மா­வுக்கு அவ­ரைப்­போ­லவே அறி­வில் சிறந்த ஒரு மகள் இருக்­கி­றார். பெயர் பன்­சூரி ஸ்வராஜ். ஆக்ஸ்­போர்ட் பல்­க­லை­யில் பட்­டப்­ப­டிப்­பும் சட்­டத்­தில் பாரிஸ்­டர் பட்­ட­மும் முடித்­தி­ருக்­கி­றார். டெல்லி உயர் நீதி­மன்­றத்­தி­லும் உச்ச நீதி­மன்­றத்­தி­லும் கிரி­மி­னல் வழக்­க­றி­ஞ­ராக பிராக்­டீஸ் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார். அம்­மா­வுக்கு அர­சி­யல்­வா­ரி­சாக வரு­வாரா என்­பது தெரி­ய­வில்லை. ஆனால், அறி­வில் அம்­மா­வுக்கு மிகச் சரி­யான வாரி­சா­கவே பன்­சூரி குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்.