கதறி அழுத சிறுமி! – சுமதி

பதிவு செய்த நாள் : 15 ஆகஸ்ட் 2019

ஆசை ஆசையாக தான் வளர்த்த மரங்களை அதிகாரிகள் வெட்டியதால் ஒன்பது வயது சிறுமி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியை சமாதானப்படுத்த 20 மரக்கன்றுகளை நட்டுள்ள அரசு, அவரை அம்மாநில பசுமைத் தூதராகவும் நியமித்து கவுரவப் படுத்தியுள்ளது.

மரங்­களை வெட்­டா­தீர்­கள் என்ற கோஷம் நீண்­ட­கா­ல­மா­கவே மக்­கள் முன் வைக்­கப்­பட்டு வரு­கி­றது. முன்பை விட தற்­போது மக்­க­ளி­ட­மும் இது பற்றி நல்ல விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளது. சில சமூ­க­வி­ரோ­தி­க­ளைத் தவிர மக்­கள் பெரும்­பா­லும் காடு­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும், புதிய மரக்­கன்­று­களை நட வேண்­டும் என்­ப­தில் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர். இதற்­காக விதைப்­பந்து போன்ற பல விச­யங்­களை அவர்­கள் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் இரண்டு மரங்­க­ளுக்­காக கதறி அழுது பல­ரது மன­தி­லும் இடம் பிடித்து விட்­டார் மணிப்­பூ­ரைச் சேர்ந்த ஒன்­பது வயது சிறுமி.

மணிப்­பூர் மாநி­லம் கக்­சிங் மாவட்­டம் ஹியாங்­லாம் மக்கா லேக்­காய் பகு­தியை சேர்ந்­த­வர் வாலென்­டினா எலங்­பாம். தற்­போது ஐந்­தாம் வகுப்பு படித்து வரும் அச்­சி­றுமி, கடந்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன் தனது வீட்­டின் அருகே உள்ள ஆற்­றின் கரை­யோர பகு­தி­யில் இரண்டு குல்­மோ­கர் மரங்­களை நட்­டார்.

அம்­ம­ரம் நன்கு வளர்ந்து தனக்கு நிழல் தரும் என ஆசை ஆசை­யாக அதனை கண்­ணும் கருத்­து­மாக பரா­ம­ரித்து வந்­தார். ஒவ்­வொரு நாளும் மரத்­தின் வளர்ச்­சியை பார்த்து அவர் ஆனந்­தத்­தில் திளைத்து வந்­தார்.

இந்­நி­லை­யில், சமீ­பத்­தில் அந்த ஆற்றை சுத்­தம் செய்­யும் பணி­யில் அப்­ப­குதி அரசு ஊழி­யர்­கள் ஈடு­பட்­ட­னர். அப்­போது கரை­யோ­ரங்­க­ளில் இருந்த மரங்­கள் வெட்டி அகற்­றப்­பட்­டன. இதில், வாலென்­டினா வளர்த்த இரண்டு மரங்­க­ளும் வெட்­டப்­பட்­டது. தான் ஆசை ஆசை­யாய் வளர்த்த மரங்­கள் வெட்­டப்­பட்­ட­தைப் பார்த்து வேத­னை­ய­டைந்த சிறுமி தேம்­பித் தேம்பி அழு­தார்.

இதனை அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் வீடி­யோ­வாக பதிவு செய்து சமூ­க­வ­லை­த­ளத்­தில் வெளி­யிட்­டார். மரங்­கள் மீது அச்­சி­று­மிக்கு இருந்த காத­லைக் கண்டு நெட்­டி­சன்­கள் ஆச்­சர்­யம் அடைந்­த­னர். சிறு­மிக்­காக பரி­தா­ப­மும் பட்­ட­னர். இத­னால் அந்த வீடியோ இணை­யத்­தில் வைர­லா­னது. ”நான் இந்த மரங்­களை நட்டு மிக­வும் அன்­பு­டன் வளர்த்து வந்­தேன், அதை இப்­படி வெட்­டி­ய­தைப் பார்த்து என் மனம் வலிக்­கி­றது,” என்­றார்.

இந்த வீடியோ அம்­மா­நில முதல்­வர் பிரன் சிங் மற்­றும் வனத்­துறை அமைச்­சர் ஷியாம்­கு­மார் சிங் பார்­வைக்­கும் சென்­றது. இப்­ப­டிப்­பட்ட குழந்­தை­கள் தான் வருங்­கால உல­கின் இயற்கை காவ­லர்­கள் என்­பதை உணர்ந்­த­னர்.

 “என் மக­ளுக்கு இந்த மரங்­கள் மீது இத்­தனை அன்பு இருந்­தி­ருக்­கி­றது என்று தெரி­ய­வில்லை. ஆனால் இனி நாங்­கள் அவ­ளு­டைய இந்த ஆசைக்கு ஆத­ர­வாக இருப்­போம்,” என்­றார்.

இரண்டு மரங்­களை வெட்­டி­ய­தற்­காக சிறு­மி­யி­டம் அதி­கா­ரி­கள் மன்­னிப்பு கேட்­ட­னர். அதோடு, சிறு­மி­யின் வேண்­டு­கோ­ளுக்கு ஏற்ப, அதே இடத்­தில் 20 மரக்­கன்­று­கள் நடப்­பட்­டது. மேலும் அப்­ப­கு­தி­யில் 500 மரக்­கன்­று­களை நட, அப்­ப­குதி மக்­க­ளும் திட்­ட­மிட்­டுள்­ள­னர். மரங்­களை வெட்­டக் கூடாது, புதிய மரக்­கன்­று­களை நட வேண்­டும் என்ற தாக்­கத்தை தனது கண்­ணீர் மூலம் உல­க­ள­வில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார் சிறுமி வாலென்­டினா. சிறிய வய­தில் இயற்கை மீது பேரார்­வம் கொண்­டுள்ள சிறு­மிக்கு அப்­ப­குதி எம்.எல்.ஏ பரிசு வழங்கி பாராட்­டி­னார்.வாலென்­டி­னா­வைக் கவு­ர­விக்­கும் வகை­யில், அம்­மா­நில பசு­மைத் தூது­வ­ராக அவரை நிய­மித்­துள்­ளது மணிப்­பூர் அரசு.