எனக்­காக அப்பா சான்ஸ் கேட்­டார்! – ராஜ்­கு­மார்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

“என்­னோட  எய்ம், எப்­ப­வுமே சினி­மா­தான். ஒரு காமெடி கேரக்­டர் கிடைச்சா கூட, என்னை நான் புரூப் பண்ணி காட்­டு­வேன்!” என்று சொல்­லும் நடி­கர் ராஜ்­கு­மார், ரொம்ப ரொம்ப கஷ்­டப்­பட்டு சின்­னத்­தி­ரை­யில் முன்­னே­றி­ய­வர்.

‘பாரதி கன்­ணம்மா,’ ‘வள்ளி’ ஆகிய சீரி­யல்­க­ளில் முன்­னணி கேரக்­டர்­க­ளில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கும் அவர், நம்­மி­டம் சொன்­ன­தா­வது:

“பாக்­ய­ராஜ் சார் புண்ணி­

யத்­திலே அவ­ரோட “பாரி­ஜா­தம்,” “சித்து பிளஸ் 2” இந்த ரெண்டு படங்­கள்ல  சின்ன கேரக்­டர்­கள்ல நடிச்­சேன். அவர்­தான் என்னை நடிக்க வச்­சாரு. ஆனா, என்­னோட துர­

திர்ஷ்­டம்... ரெண்­டி­லுமே எடிட்­டிங்­கிலே எகி­றி­டுச்சு. என் அப்பா ஒரு நெசவு தொழி­லாளி.  அவர் எங்க ஊர்ல (சத்­தி­ய­மங்­க­லம்) பாக்­ய­ராஜ் ரசி­கர் மன்ற தலை­வரா இருந்­த­வரு. அத­னால, பாக்­ய­ராஜ் சாரோடு அவ­ருக்கு நல்ல பழக்­கம் இருந்­துச்சு. சின்ன வய­சிலே இருந்தே சினிமா மேலே எனக்கு ரொம்ப அபெக்­க்ஷன் இருந்­துச்சு. ஸ்கூல் ஸ்டூடண்ட்டா இருக்­கும்­போதே நாட­கங்­கள்ல நடிச்­சேன். என்­னோட சினிமா ஆசையை அப்­பா­கிட்ட சொன்­ன­போது அந்த விஷ­யத்­திலே எனக்கு முழு சப்­போர்ட் கொடுக்­கி­றதா சொன்­னாரு. ஏன்னா, அவ­ருக்­கும் சினி­மாவை ரொம்ப பிடிக்­கும்.  அத­னால, என் உணர்­வு­களை புரிஞ்­சுக்­கிட்டு எனக்­காக அவரே சான்ஸ் கேட்க போயி­டு­வாரு. பொள்­ளாச்­சி­யி­லே­யும்,  எங்க ஊர்­ல­யும் சினிமா ஷூட்­டிங் நடந்­துச்­சுன்னா, அங்கே கிளம்­பி­டு­வாரு. நான் பிளஸ் 2 முடிச்­சி­ருந்த சம­யம். ஒரு நாள், ‘சொக்க தங்­கம்’ ஷூட்­டிங்­குக்­காக வந்­தி­ருந்த பாக்­ய­ராஜ் சாரை பார்க்­கி­ற­துக்­காக நானும் அப்­பா­வும் போயி­ருந்­தோம்.  அப்பா அவர்­கிட்ட எனக்கு சான்ஸ் கேட்­ட­போது என்னை ஏற இறங்க பார்த்­துட்டு, இவன் ரொம்ப சின்ன பையனா இருக்­கான், காலே­ஜிலே படிக்க வையுங்­கன்னு சொல்லி திருப்பி அனுப்­பிச்­சிட்­டாரு. அப்­பு­றம், நாமளே பேசாம சென்­னைக்கு போய் சினிமா சான்ஸ் தேட­லாம்னு முடிவு பண்ணி சென்­னைக்கு புறப்­பட்­டேன். என் பிரண்ட் ஒருத்­தன் மூலமா ஒரு ஓட்­டல்ல பார்ட் – -டைமா வேலை­யிலே சேர்ந்­தேன். நைட் டியூட்டி பார்க்­கும்­போது பகல்ல சினிமா கம்­பெனி கம்­பெ­னியா ஏறி சான்ஸ் கேட்­பேன். இப்­ப­டியே ரெண்டு வரு­ஷமா அலைஞ்­சேன். அப்­பு­றம், ராஜ் மியூ­சிக் சேனல்ல காம்ப்­பி­யரா ரெண்டு வரு­ஷம் வேலை பார்த்­தேன். மறு­ப­டி­யும் என்­னோட தேடு­தல் வேட்டை தொடர ஆரம்­பிச்­சிச்சு.  

 ‘தங்­கம்’ சீரி­யல்ல நடிக்­கிற வாய்ப்பு கிடைச்­சிச்சு. அது­தான் என்­னோட சீரி­யல் எண்ட்ரி. ஒரு கிரா­மத்து இளை­ஞனா நடிச்­சேன். அந்த சீரி­யல் எனக்கு வாழ்க்கை கொடுத்­துச்­சுன்­னு­தான் சொல்­ல­ணும். அதுக்­கப்­பு­றம், ‘வாணி ராணி,’ ‘சர­வ­ணன் மீனாட்சி,’ ‘முந்­தானை முடிச்சு,’ இந்த சீரி­யல்­கள்ல எல்­லாம் நடிச்­சேன். நான் நடிச்ச சீரி­யல்­கள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்­டர்ன்னா... அது ‘வாணி ராணி’­­யிலே வந்த ‘கார்த்­திக்’ கேரக்­டர்­தான். அப்­பு­றம், ‘சர­வ­ணன் மீனாட்­சி’­­யிலே வந்த ‘சக்­தி­வேல்’ கேரக்­டர் என்­னோட ஒரி­ஜி­னல் கேரக்­ட­ரோடு ஓர­ள­வுக்கு ஒத்து போச்சு. பொதுவா, நான் ரொம்ப சீரி­ய­சா­கவே இருக்­க­மாட்­டேன். திடீர்னு குழந்­தைங்­க­ளோடு டான்ஸ் ஆடு­வேன். ‘பாரதி கண்­ணம்­மா’­­விலே என்­னோட ‘கண­பதி’ கேரக்­டர் நெகட்­டிவ் கேரக்­டர்ன்னு சொல்­லலே. ஆரம்­பத்­திலே, கண்­ணம்­மா­வுக்கு ஆப்­போ­சிட்டா இருப்­பேன்­னும், அதுக்­கப்­பு­றம் ஆத­ரவா இருப்­பேன்­னும் சொல்­லி­யி­ருக்­காங்க. அப்­ப­டித்­தான் போய்க்­கிட்டு இருக்கு.”