வெல்­வது எது அக்­கா­ள் ஆண­வமா? தங்­கை­ பாசமா?

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

ஸ்ருதி ஸ்டூடி­யோஸ் நிறு­வ­னம் சார்­பாக ஆர்.ஏ.எஸ். நாரா­ய­ணன் தயா­ரிக்­கும் புதிய மெகா சீரி­யல், ‘இரட்டை ரோஜா.’ இவர் ஏற்­க­னவே ‘பூவே பூச்­சூட வா’ வெற்றி சீரி­யல் உட்­பட ‘சிந்து பைரவி’ தெலுங்கு சீரி­ய­லை­யும், ‘ஜீவன சைத்ரா’ கன்­னட சீரி­ய­லை­யும் தயா­ரித்­த­வர். ஜீ தெலுங்­கில் ஒளி­ப­ரப்­பில் இருக்­கும் ‘அக்கா செல்­லலு’ தெலுங்கு சீரி­ய­லின் தமிழ் ரீமேக்­தான் ‘இரட்டை ரோஜா.’ இது ஜீ தமி­ழில் திங்­கள் முதல் வெள்ளி வரை மதி­யம் 2 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

ஷிவானி, சபிதா ஆனந்த், ‘பூவி­லங்கு’ மோகன், மீனா, அக்­க்ஷய், ஷாகர், எல். ராஜா, தமிழ்­செல்வி, விஷ்வா, திவா­கர் மற்­றும் பல­ரும் நடிக்­கி­றார்­கள்.

சர­வ­ணன் வச­னம் எழுத, கிரண் பின்­னணி இசை­ய­மைக்க, ‘பூவே பூச்­சூட வா’வை டைரக்ட் செய்த மணி­கண்ட குமார் டைரக்ட் செய்­கி­றார்.

அக்­காள் அனு­வும் தங்கை அபி­யும் இரட்­டைக்­கு­ழந்­தை­கள்.  உருவ ஒற்­று­மை­யால் தனக்கு கிடைக்­கும் பரி­சு­கள், பாராட்­டுக்­கள் அனைத்­தும் தான் அபியை போல இருப்­ப­தா­லேயே வந்­தன என்று பொறாமை ஏற்­பட்டு                      சிறு வய­தி­லி­ருந்தே அவள் மேல் அனு­வுக்கு பயங்­கர வெறுப்பு இருந்து வரு­கி­றது. ஆனால் அபியோ, அக்­கா­ளுக்­காக தன்­னையே தியா­கம் செய்­கி­றாள். பிற்­கா­லத்­தில், அனு வக்­கீ­லா­கி­றாள். தான் மகா­ரா­ணி­யாக வாழ, தன் காலை பிடிக்­கும் சேவ­கி­யாக தங்கை அபி இருக்க வேண்­டும் என்­கிற அவ­ளது நினைப்­பில் மண் விழு­கி­றது. ஒரு பணக்­கார குடும்­பத்­தில் அபி வாழ்க்­கைப் ப­டும் நிலைமை ஏற்­ப­டு­கி­றது. அதே குடும்­பத்­தில் அனு­வும் அம்மி மிதித்து அடி­யெ­டுத்து வைக்­கி­றாள்.

தனது அத்தை சிந்­தா­ம­ணி­யு­டன் கைகோர்த்து அபியை நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வர வேண்­டும் என்­கிற அனு­வின் ஆண­வம் வெற்றி பெற்­றதா அல்­லது தனக்கு எது வந்­தா­லும் அக்­காள் நன்­றாக இருக்க வேண்­டும் என்­கிற அபி­யின் பாசம் வெற்றி பெற்­றதா? அனுவை கையில் போட்­டுக்­கொண்டு அந்த குடும்­பத்­தையே சீர­ழிக்க ­வேண்­டும் என்­கிற சிந்­தா­ம­ணி­யின் கனவு பலித்­ததா?