மவு­னிகா, ஷமிதா நடிக்­கும் ‘பூவே செம்­பூவே!’

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

குடும்ப உற­வுக்­கும், காக்கி சட்­டைக்­கும் இடை­யே­யான போராட்­டத்தை எடுத்­துச் சொல்­லும் ‘பூவே செம்­பூவே’ புதிய மெகா சீரி­யல் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு கலை­ஞர் டிவி­யில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.

ஒரு சரா­சரி தமிழ் குடும்­பத்தை பின்­பு­ல­மாக கொண்டு அமைக்­கப்­பட்ட களத்­தில், பணி­யி­லி­ருக்­கும் குடும்ப பெண்­கள் சந்­திக்­கும் முரண்­பா­டு­களை மையப்­ப­டுத்தி கதை நகர்­கி­றது.  திரு­ம­ண­மாகி புகுந்த வீட்­டிற்கு செல்­லும் ஒரு பெண் தனது கட­மையை செவ்­வனே செய்­வ­து­டன், தனது குடும்ப மானத்­தை­யும் எப்­படி காப்­பாற்­று­கி­றாள் என்­பதை பல்­வேறு எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளோடு சொல்லி இருக்­கி­றார்­கள். தனது கண­வன் மீதான காத­லுக்­கி­டையே, கட­மையை ஆற்ற பாடு­ப­டும் போலீஸ் அதி­காரி பத்ரா, தனது அண்ணி உமா மகேஸ்­வ­ரி­யால் என்­னென்ன பிரச்­னை­களை சந்­திக்­கி­றாள்? தனது கண­வ­னின் அன்­பை­யும் குடும்­பத்­தி­ன­ரின் மன­தை­யும் எப்­படி வெல்­கி­றாள்? அதன் பின்­ன­ணி­யில் என்ன நடக்­கி­றது?

லைட் சவுண்ட் & மேஜிக் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் இந்த சீரி­ய­லுக்கு சார்­லஸ் திரைக்­கதை அமைக்­கி­றார்.  ‘குள்­ள­ந­ரிக் கூட்­டம்’ படத்­தின் டைரக்­டர் ஸ்ரீபா­லாஜி டைரக்ட் செய்­கி­றார்.

நேர்­மை­யான போலீஸ் அதி­காரி பத்­ரா­வாக மவு­னிகா, உமா மகேஸ்­வ­ரி­யாக ஷமிதா உட்­பட பல­ரும் நடிக்­கி­றார்­கள்.