ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 14–8–19

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

அரிய வைரம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

அருண்­மொழி, ஷங்­கர் மகா­தே­வன், கார்த்­திக் தொடங்கி ஏ.ஆர். ரஹ்­மான் வரைக்­கும் ரஜி­னிக்­கான பாடல்­க­ளைப் பாடு­வ­தென்­பது பாடக அவ­தா­ரத்­தின் ‘ஞானஸ்­னா­னத் திரு­விழா’ போன்­றது. அந்த வகை­யில் புதுப்­பா­ட­கர்­கள் வரை எல்­லோ­ரின் பிரி­ய­னா­கத் திகழ்­வது ரஜினி என்­கிற மந்­தி­ரம். ரஜி­னி­யின் எல்லா பாடல்­க­ளுமே ஹிட் ஆகி­வி­டும் என்­பது நம்­பிக்கை மட்­டு­மல்ல. பெரு­ம­ளவு நிஜ­மும் என்­ப­தால் அப்­படி எல்­லோ­ரும் தேட­லாம்.

 கன்­னட ரஜி­னிக்­குப் பொருந்­தி­யது தெலுங்கு பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் குரல். ரஜி­னி­யின் பாடும் குர­லா­கவே பாலு திகழ்ந்­தார். அவர் பாடிய மற்ற நடி­கர்­க­ளுக்­கான பாடல்­களை விட­வும் மற்­ற­வர்­கள் பாடிய ரஜி­னிக்­கான பாடல்­களை விட­வும் தமிழ்த்­திரை இசை­யின் பெரு வெற்­றிச் சரித்­தி­ரத்­தில் ஆகச்­சி­றப்­பான காம்­பி­னே­ஷன் என்­ப­தாக ரஜினி மற்­றும் பாலு இரு­வ­ரின் இணை­தலை சொல்­ல­லாம்.

 எல்­லோ­ரும் எல்­லோ­ருக்­கா­க­வும் தான் பாடி­னார்­கள். ஏன் எம்.ஜி.ஆர். பாட­லில் அறி­மு­க­மா­ன­வர்­தான் பாலு. அவ­ருக்கு முன்பே ஜேசு­தாஸ், ஜெயச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரெல்­லாம் எம்.ஜி.ஆருக்­குப் பாடி இருந்­தார்­களே... என்­றா­லும் எம்.ஜி.ஆர்.என்­றாலே அவ­ருக்­கான பின் குர­லாக டி.எம். சவுந்­த­ர­ரா­ஜ­னைத்­தானே நினைக்­கத் தோன்­று­கி­றது. அதைப் போலவே ரஜி­னிக்­கான குர­லாக பாலு­வின் குரல்­தான் இருப்­ப­தில் சிறப்­பது என்­ப­தென் எண்­ணம். கம­லுக்­கும் பாலு பாடி இருந்­தா­லும் கூட கம­லுக்­கான பொருத்­தக் குர­லோன் ஹரி­ஹ­ரன்­தான். இதெல்­லாம் என் அபிப்­ரா­யங்­கள். ‘முரண் கொண்­டோர் மாற்­றுக் கட்சி கண்டு இன்­புற்­ற­லைக.’

 ‘‘சந்­த­னக் காற்றே செந்­த­மிழ் ஊற்றே சந்­தோ­ஷப்­பாட்டே வாவா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்­காத ஆசை ஹோ ஹோ நீங்­காத ஆசை’’ என்ற பாடலை ரஜி­னி­யின் சொந்த குர­லில் பாடி­யி­ருப்­பார் பாலு. அதா­வது ஐஸ்க்­ரீம் நனைந்த உத­டு­க­ளின் நிஜ நிறம் மறைந்து போகு­மல்­லவா அப்­படி ரஜி­னி­யின் பாலு­வின் குரல் வேறென்­பதே மறக்­கும்.

 ‘ஜானி’ படத்­துக்­காக மகேந்­தி­ரன் இயக்­கம், அசோக்­கு­மார் பட­மாக்­கம், இளை­ய­ராஜா இசை என அரி­தான காம்­பி­னே­ஷ­னில் ரஜினி பாலு பங்­கேற்ற ‘‘ஸ்னோ ரீட்டா’’ பாடல் ஒரு அரிய வைரம். கேட்­டால் அந்த நாள் கெடும்.அடுத்­த­டுத்த நாட்­க­ளும் கெடும் அந்­த­ள­வுக்கு இசை­வழி மயக்­கம் அந்த பாடல் நிகழ்த்­தும்.

 அடுத்த கணமே உடைந்து சித­றக்­கூ­டிய குமி­ழித்­தன்மை இந்த பாட­லின் உரு­வாக்­கத்­தின் மைய இழை­யாக இடம்­பெற்­றி­ருக்­கும். கதைப்­படி தன் மித­மிஞ்­சிய நம்­பிக்­கை­யைத் தனக்கு அறி­மு­க­மா­கும் ஒருத்­தி­யின் மீது வைப்­பான் நாய­கன். அவளோ அடுத்த சில காட்­சி­க­ளில் கதை­யைச் சித­ற­டித்­துக் கிளம்­பிப் பறந்து செல்­வ­தா­கக் கதை­யின் நகர்­தல் இருக்­கும். இந்த இடத்­தில் தன் பல­ஜென்ம ஜென்­மாந்­தி­ரத் துணை அவள்­தான் என்ற அள­வில் தன் ஆனந்­தம் ஷண நேரப் பட்­டாம்­பூச்சி என்­பதை உண­ரா­மல் அவள் மீது நெய்­யாய் உரு­கிப் பாலாய்க் கனி­வான். அப்­போது பாடு­கிற பாடல்­தான் இது. அந்த பாட­லின் உரு­வாக்­கத்­தில் நாய­கன் பாவ­னை­யில் முழு வாழ்­வை­யும் வாழ்ந்து பார்க்­கி­றாற் போல அமைத்­தி­ருப்­பார் மகேந்­தி­ரன். ரஜி­னி­யின் அதி அற்­பு­தப் பரி­மா­ணம் இந்­தப் பாட­லில் தென்­ப­டும். ரஜி­னி­யின் நடிப்­புத் திற­னுக்­கான சாட்­சி­ய­மா­க­வும் இத­னைச் சொல்­வது தகும். தன் அங்க அசை­வு­க­ளால் அந்­தப் பாட­லின் உயி­ரா­கவே அவர் மாறி இருப்­பார்.

 செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

அழகோ அழகு அதி­லோர் உறவு

அருகே இருந்து தவிக்­கும் மனது

 செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

 ராகங்­கள் பாடு­கின்ற நாத வெள்­ளங்­கள்

நானென்­றும் காணு­கின்ற பாவை வண்­ணங்­கள்

ஹே ஹே ராகங்­கள் பாடு­கின்ற நாத வெள்­ளங்­கள்

நானென்­றும் காணு­கின்ற பாவை வண்­ணங்­கள்

ஆனந்­தம் ஒன்­றல்ல ஆரம்­பம் இன்­றல்ல

ஏ ஹே ஹே

எங்­கெங்கோ செல்­லுதே என் நெஞ்­சைக் கில்­லுதே

அங்கே அங்­கங்கே வாவென்­னும் அங்­கங்­கள்

 செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

அழகோ அழகு அதி­லோர் உறவு

அருகே இருந்து தவிக்­கும் மனது

 பூமெத்தை போடு­கிற வாச புஷ்­பங்­கள்

பொன் தட்­டில் ஆடு­கிற பூவை எண்­ணங்­கள்

ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடு­கிற வாச புஷ்­பங்­கள்

பொன் தட்­டில் ஆடு­கிற பூவை எண்­ணங்­கள்

தூவாதோ வாசங்­கள் துள்­ளாதோ எண்­ணங்­கள்

ஏ ஹே ஹே

வானெங்­கும் ஊர்­வ­லம் வாவென்­னும் உன் முகம்

கண்­டால் மயக்­கம் கலந்­தால் இனிக்­கும்

 செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

அழகோ அழகு அதி­லோர் உறவு

அருகே இருந்து தவிக்­கும் மனது

 செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ.