முதல்வர் பழனிசாமி நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 13:18

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2வது நாளாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியார்ளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கேரள மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது, லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் இன்று கேரளாவுக்கு சென்றடையும்.

அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்பாட்டில் இருப்பதால் நீலகிரி செல்ல முதல்வருக்கு நேரமிருக்காது என கருதுகிறேன்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக.

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம்  கூறினார்.