சில்லறை விற்பனை விலை பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைந்தது

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 20:35

புது டில்லி,

   2019ம் நிதியாண்டில் ஜூலை மாதத்தில் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைந்தது. உணவு பொருட்களின் விலை குறைந்ததே இதற்கு காரணம் ஆகும் என அரசாங்கம் இன்று தரவு வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விலை குறியீட்டு எண் 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4.17 சதவீதத்தில் இருந்து நடப்பாண்டு ஜூலையில் 3.18 சதவீதமாக குறைந்தது.

உணவு பொருட்களின் மீதான பணவீக்கம் 2019ம் ஆண்டு சென்ற ஜூலை மாதத்தில் 2.36 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 2.25 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

சில்லறை விற்பனை விலை பணவீக்கம் சீரான  நிலையில் உள்ளது. பணவீக்கத்தை 4 சதவீத வரம்பில் வைத்திருக்குமாறு மத்திய வங்கியை அரசு கேட்டுள்ளது. அதற்கேற்ப ரிசர்வ் வங்கியுடன் பணி அமைந்துள்ளது.