அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 13:14

சென்னை,

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் சுவாமி தரிசனம் ஆகஸ்ட்16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

ஆகஸ்ட் 17ம் தேதி அனந்த சரஸ் குளத்திற்குள் மீண்டும் அத்திவரதரை வைத்துவிடுவதாகவும், ஆகம விதிப்படி இதில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்திருந்தார். 

ஆகஸ்ட் 16ம் அதற்குள் சுவாமியைத் தரிசனம் செய்ய பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி குவிந்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அத்திவரதர் சுவாமியை இன்னும் பலர் தரிசிக்காத நிலையில் அத்திவரதர் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.