கட்சியை சீரமைக்க மம்தா பானர்ஜி திட்டம்

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019

திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ரும், மேற்கு வங்க முதல்­வ­ரு­மான மம்தா பானர்ஜி ‘தீதிகி போலோ’ என்ற போன் மூலம் மக்­க­ளின் குறை­களை கேட்­கும் திட்­டத்தை அமல்­ப­டுத்­தி­யுள்­ளார். இதை தேர்­தல் வியூ­கத்தை வகுக்­கும் பிர­சாந்த் கிஷோ­ரின் ஐ–பி.ஏ.சி நிறு­வ­னம் கையாள்­கி­றது. இந்த கால் சென்­ட­ருக்கு போன்­கள் குவி­கின்­றன.

இந்த கால்­சென்­டரை தொடர்பு கொண்டு பேசு­ப­வர்­கள் கூறும் தக­வல்­க­ளில் இருந்து, திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் புதி­தாக சேர்ந்­த­வர்­கள், குறிப்­பாக மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யில் இருந்து சேர்ந்­த­வர்­க­ளால் கட்­சிக்கு கெட்ட பெயர் உண்­டா­கின்­றது என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.

மார்க்­சிஸ்ட் கட்­சி­யில் இருந்து சேர்ந்­த­வர்­க­ளா­லும், புதி­தாக கட்­சி­யில் சேரு­ப­வர்­களை பற்றி விசா­ரிக்­கா­மல் சேர்த்­துக் கொண்­ட­தா­லும் கட்­சிக்­கும், ஆட்­சிக்­கும் கெட்ட பெயர் உண்­டா­கின்­றது என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த கால்­சென்­ட­ரில் வேலை செய்­யும் மூத்த அதி­கா­ரி­கள் கூறும் போது, “திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த தலை­வர்­க­ளும், ஊழி­யர்­க­ளும் நேர்­மை­யா­ன­வர்­கள், மக்­க­ளின் பிரச்­னை­க­ளில் கவ­னம் செலுத்­து­ப­வர்­கள். அதே நேரத்­தில் புதி­தாக கட்­சி­யில் சேர்ந்­த­வர்­கள் பணம் பறிப்­ப­தி­லும், பல சட்­ட­வி­ரோத செயல்­க­ளை­யும் செய்­கின்­ற­னர். தங்­க­ளின் அதி­கா­ரத்தை நிலை நிறுத்­திக் கொள்ள வன்­மு­றை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். ஏற்­க­னவே உள்ள பழைய கட்சி தலை­வர்­க­ளும், தொண்­டர்­க­ளும் மரி­யா­தை­யா­ன­வர்­கள், மக்­கள் எப்­போ­தும் அணுக கூடி­ய­வர்­க­ளாக இருந்­த­னர்” என்று தெரிய வரு­வ­தாக தெரி­வித்­தார்.

தீதிகி போலோ கால் சென்­டர் செயல்­பட தொடங்­கிய முதல் நாளில் 700 பேர் போனில் தொடர்பு கொண்­டுள்­ள­னர். புதி­தாக கட்­சி­யில் சேர்ந்­த­வர்­களை பற்றி புகார் கூறி­ய­து­டன், அவர்­கள் நேர்­மை­யா­ன­வர்­க­ளாக இல்லை என்­றும் கூறி­யுள்­ள­னர்.

இது பற்றி தன்­னு­டைய பெயரை கூற விரும்­பாத திரி­ணா­முல் காங்­கி­ரஸ் தலை­வர் கூறும் போது, இது கட்­சிக்கு ஒன்­றும் புதி­தல்ல. இது போல் சில கால­மாக நடக்­கின்­றது. கட்சி ஆரம்­பித்­த­தில் இருந்து இருப்­ப­வர்­கள் புறக்­க­ணிக்­க­ணிக்­கப் பட்­டுள்­ளோம். கோஷ்டி சண்டை, உள்­கட்சி சண்­டை­யால் புதி­தாக சேர்ந்­த­வர்­க­ளுக்­கும், கட்சி தொடங்­கி­ய­தில் இருந்து இருப்­ப­வர்­க­ளுக்­கும் இடையே மோதல் நீடிக்­கின்­றது. நாங்­கள் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன் பல கால­மாக எந்த கட்­சியை எதிர்த்து போரா­டி­னோமோ, அந்த கட்­சியை சேர்ந்த தலை­வர்­க­ளும், தொண்­டர்­க­ளும் புதி­தாக சேர்ந்­துள்­ள­னர். ஆனால் தற்­போது இதை பற்றி மம்தா பானர்ஜி கவ­னத்­தில் கொண்­டுள்­ளார். இந்த பிரச்னை கூடிய விரை­வில் சரி செய்­யப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கின்­றோம். புதி­தாக கட்­சி­யில் சேர்ந்­த­வர்­கள் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி, மக்­க­ளுக்கு மரி­யாதை செலுத்த வேண்­டும் ” என்று கூறி­னார்.

புதி­தாக கட்­சி­யில் சேர்ந்­த­வர்­க­ளால் பிரச்னை ஏற்­ப­டு­கி­றது என்­பதை மறுக்­கும் கூச் பீகா­ரைச் சேர்ந்த, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யில் இருந்து திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணைந்த மூத்த தலை­வர், நான் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்­த­வன். மம்தா பானர்­ஜி­யின் சேவையை பார்த்து திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் சேர்ந்­தேன். நான் பணம் சம்­பா­திக்க எந்த முறை­கேட்­டி­லும் ஈடு­ப­ட­வில்லை. புதி­தாக கட்­சி­யில் சேரந்­த­வர்­கள்,. பழைய கட்­சிக்­கா­ரர்­கள் என்­ப­தல்ல பிரச்னை. இது தனிப்­பட்ட நபரை பொருத்­தது.

பல பழைய கட்­சிக்­கா­ரர்­கள் முறை­கேட்­டி­லும், ஊழ­லி­லும் திளைக்­கின்­ற­னர். வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். எனவே இது புதி­ய­வர்­கள், பழை­ய­வர்­கள் பிரச்னை அல்ல. ஊழல் வாதி­கள், நேர்­மை­யா­ன­வர்­கள் என்­ப­தில் உள்ள பிரச்னை. நான் மம்தா பானர்ஜி உரிய நட­வ­டிக்கை எடுப்­பார் என்று நம்­பு­கின்­றேன்” என்று கூறி­னார்.

தற்­போது தீதிகே போலா கால் சென்­ட­ருக்கு மணிக்கு 17ஆயி­ரம் முதல் 18 ஆயி­ரம் போன் அழைப்­பு­கள் வரு­கின்­றன. முத­ல­மைச்­ச­ரின் குறை தீர்க்­கும் அலு­வ­ல­கத்­திற்­கும், போனில் புகார்­களை தெரி­விக்­கின்­ற­னர். ஆலோ­ச­னை­க­ளை­யும் கூறு­கின்­ற­னர். ஆனால் எங்­கள் கால் சென்­ட­ருக்கு பல மடங்கு போன்­கள் வரு­கின்­றன. திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் புதி­தாக சேர்ந்­த­வர்­களை பற்றி புகார்­களை கூறு­வ­து­டன் மட்­டு­மல்­லாது, அர­சின் திட்­டங்­களை பற்­றி­யும் புகார் தெரி­விக்­கின்­ற­னர். அர­சின் சில திட்­டங்­களை பற்றி மக்­கள் குறை கூறு­கின்­ற­னர். சில திட்­டங்­க­ளில் சிறிய அள­வில் மாற்­றம் செய்­தால், அதிக அளவு மக்­கள் பலன் அடை­வார்­கள் என்­றும் ஆலோ­சனை கூறு­கின்­ற­னர். இதை பற்­றி­யும் நாங்­கள் பரி­சீ­லிக்­கின்­றோம். இவை எல்­லாம் மக்­க­ளின் கருத்­துக்­கள். இதை பற்­றி­யும் நாங்­கள் பரி­சீ­லிப்­போம்” என்று ஐ–ஏ.பி.சி நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

தீதிகி போலோ­வுக்கு என இணை­ய­த­ள­மும் உள்­ளது. இதில் மக்­கள் தங்­கள் குறை­களை பதிவு செய்­ய­லாம். இந்த இணை­ய­த­ளத்­தில் ஆங்­கி­லம், வங்­காள மொழி­க­ளில் மட்­டும் புகார்­கள், ஆலோ­ச­னை­கள் கூறும் படி­வங்­கள் உள்­ளன. இந்த திட்­டத்­தின் நோக்­கம் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் உயிர்­து­டிப்­புள்ள தொடர்பு கொள்­வ­தற்கே என்று திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

தீதிகி போலோ கால் சென்­டர், இணை­ய­த­ளத்தை பற்றி மக்­கள் மத்­தி­யில் கொண்டு செல்­வ­தற்­காக திரி­ணா­முல் காங்­கி­ரஸ் டீ–சர்ட், பேக் போன்­ற­வை­க­ளில் லோகோவை அச்­ச­டித்து விநி­யோ­கிக்­கின்­ற­னர். திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், முக்­கிய தலை­வர்­கள் மக்­களை சந்­தித்து தீதிகி போலோ பற்றி விளக்­கு­கின்­ற­னர்.

 திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் எதற்­கெ­டுத்­தா­லும் கட்– மணி என்ற பெய­ரில் லஞ்­சம் கேட்­கின்­ற­னர் என்று மக்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டது. இதன் எதி­ரொ­லி­யாக லோக்­சபா தேர்­த­லி­லும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் தோல்­வியை சந்­தித்­தது. மம்தா பானர்ஜி பகி­ரங்­க­மாக கட்–­மணி கலாச்­சா­ரத்தை பற்றி எச்­ச­ரித்­தார். இதன் விளை­வாக மம்தா பானர்­ஜிக்கு உள்ள பெயரை காப்­பாற்­றிக் கொள்­ள­வும், கட்­சியை ஒழுங்­கு­ப­டுத்­த­வும் தீதிகி போலோ போன் திட்­டத்தை அறி­வித்­துள்­ளார்.

மேற்கு வங்க சட்­டம் மற்­றும் தொழி­லா­ளர் துறை அமைச்­சர் மலாய் கடாக் கூறு­கை­யில், “இது போன்று பெரிய அள­வில் மக்­க­ளின் கருத்­துக்­களை கேட்­கும் திட்­டத்தை அர­சி­யல் கட்சி தலை­வர் அறி­வித்து இருப்­பது மிக அரி­தா­னது. இத­னால் ஒவ்­வொ­ரு­வ­ரும் நேர­டி­யாக தலை­வரை தொடர்பு கொண்டு, அவர்­க­ளின் கருத்­துக்­களை தெரி­விக்­க­லாம்” என்று தெரி­வித்­தார்.

தற்­போது மம்தா பானர்ஜி மக்­களை நேரில் சந்­திக்­கும் திட்­டத்­தில் உள்­ளார். சமீ­பத்­தில் சுற்­றுச் சூழல் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த நடை பய­ணத்தை மேற்­கொண்­டார். அத்­து­டன் பாம்பு கடித்­தால் உட­ன­டி­யாக என்ன செய்ய வேண்­டும் என்­பதை விளக்­கும் மொபைல் ஆப், இணை­ய­த­ளத்­தை­யும் தொடங்கி வைத்­தார்.

நாங்­கள் கிரா­மங்­க­ளில் பாம்பு கடித்து இறந்­த­வர்­கள் குறித்த விப­ரங்­களை சேக­ரித்­தோம். கிரா­மப்­பு­றங்­க­ளில் மக்­கள் பாம்பு கடித்­தால் என்ன செய்ய வேண்­டும் என்று தெரி­யாத கார­ணத்­தால் இறக்­கின்­ற­னர். இந்த மொபைல் செய­லி­யில், இணை­ய­த­ளத்­தில் பாம்பு கடித்­தால் உட­ன­டி­யாக என்ன செய்ய வேண்­டும் என்று விளக்­கப்­பட்­டுள்­ளது. இது வங்­காள மொழி­யில் இருப்­ப­தால் படித்து புரிந்து கொள்ள வச­தி­யாக இருக்­கும். இது போன்ற செயல்­க­ளால் நாங்­கள் மக்­கள்  வாழ்க்­கை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, அவர்­க­ளின் அன்பை திரும்ப பெற முயற்­சிக்­கின்­றோம்” என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.