வாகன விற்­பனை சரிவு: தொழி­லா­ளர்­கள் வேலை­யி­ழப்பு

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019

ஜார்­கண்ட் மாநி­லத்­தில் ஜாம்­ஷெட்­பூர் அரு­கில் அதி­யா­பூர் தொழிற்­பேட்டை உள்­ளது. இந்த தொழிற்­பேட்­டை­யில் 700க்கும் மேற்­பட்ட சிறு, குறு, நடுத்­தர தொழிற்­சா­லை­கள் உள்­ளன. இவற்­றில் 30 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மான தொழி­லா­ளர்­கள் வேலை செய்­கின்­ற­னர். இந்த தொழிற்­சா­லை­க­ளில் வாக­னங்­க­ளுக்கு தேவை­யான உதி­ரி­பா­கங்­களை தயா­ரித்து கொடுக்­கின்­ற­னர்.

தற்­போது கார் போன்ற வாக­னங்­க­ளின் விற்­பனை கடு­மை­யாக சரிந்­துள்­ளது. இத­னால் வாக­னங்­களை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள், உற்­பத்­தியை குறைத்­துள்­ளன. இதன் எதி­ரொ­லி­யாக உதிரி பாகங்­களை தயா­ரித்து கொடுத்த குறு, சிறு, நடுத்­தர தொழிற்­சா­லை­கள் வேலை இல்­லா­மல் மூடப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இத­னால் வேலை இழந்த முப்­ப­தா­யி­ரம் தொழி­லா­ளர்­க­ளுக்கு, மாநில அரசு உதவி செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

ஜார்­கண்ட் மாநி­லத்­தில் உள்ள தொழிற்­பேட்­டை­க­ளில், வாக­னங்­களை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு உதிரி பாகங்­களை தயா­ரித்து கொடுக்­கும் தொழிற்­சா­லை­க­ளின் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி போல், இந்­தியா முழு­வ­தும் உள்ள குறு, சிறு, நடுத்­தர தொழிற்­சா­லை­க­ளும் நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்­ளன.

கடந்த ஒரு வரு­ட­மாக கார் போன்ற வாக­னங்­க­ளின் விற்­பனை கடு­மை­யாக சரிந்­துள்­ளது. சென்ற வரு­டம் செப்­டம்­பர் மாதம் ஐ.எல்.எப். அண்ட் எஸ் என்ற நுகர்­வோர் கடன் வழங்­கும் நிறு­வ­னம் நெருக்­க­டி­யில் சிக்­கி­யது. அதன் பிறகு கார் போன்ற வாக­னங்­கள் உட்­பட நுகர்­வோர் பொருட்­க­ளின் விற்­பனை கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது.

பெட­ரே­ஷன் ஆப் ஆட்­டோ­மொ­பைல் டீலர் அசோ­சி­ஷன் தக­வல்­படி, கடந்த ஒரு வரு­டத்­தில் கார்­களை விற்­பனை செய்­யும் 200 டீலர் ஷோரூம்­கள் மூடப்­பட்­டுள்­ளன. இவற்­றில் வேலை செய்த 25 ஆயி­ரம் பேர் வேலை இழந்­துள்­ள­னர்.

வாகன உதி­ரி­பா­கங்­களை தயா­ரித்து வழங்­கும் நிறு­வ­னங்­க­ளின் அமைப்­பான ‘ஆட்­டோ­மோ­டிவ் காம்­ப­ணன்ட் மெனு­பேக்­சர் அசோ­சி­ஷன் ஆப் இந்­தி­யா’­வின் தலை­வர் ராம் வெங்­கட்ட ரமணி,  “இதே நிலை நீடித்­தால் 10 லட்­சம் பேர் வேலை இழப்­பார்­கள் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது” என்று தெரி­வித்­தார்.  

இந்­தி­யா­வில் அதிக அளவு கார் விற்­பனை செய்­யும் நிறு­வ­னம் மாருதி சுஜிகி. இந்த நிறு­வ­னத்­தின் கார் விற்­பனை இந்த ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில் 19 சத­வி­கி­தத்­திற்­கும் அதி­க­மாக குறைந்­துள்­ளது. மாருதி சுஜிகி 3,74,481 கார்­களை மட்­டுமே விற்­பனை செய்­துள்­ளது. இந்த  நிறு­வ­னத்­தின் லாபம் காலாண்­டில், கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் இல்­லாத அளவு 27 சத­வி­கி­தம் குறைந்­துள்­ளது. கடந்த வரு­டம் மாருதி சுஜிகி நிறு­வ­னத்­தின் நிகர லாபம் ரூ. 1,435 கோடியே 50 லட்­ச­மாக இருந்­தது.