1,000 கி.மீ., பறக்கும் மின் விமானம்!

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019

உல­கி­லேயே வர்த்­தகரீதி­யில் முதல் மின்­சார விமா­னம், சமீ­பத்­தில் விற்­பனை செய்­யப்­பட்­டது. இஸ்­ரே­லைச் சேர்ந்த, 'இவி­யே­ஷன்' என்ற சிறிய நிறு­வ­னம், இந்த சாத­னையை செய்­துள்­ளது. ஒன்­பது பய­ணி­யரை சுமக்­கும் திற­னுள்ள, 'ஆலிஸ்' என்ற மின் விமா­னங்­களை, அமெ­ரிக்­கா­வி­லுள்ள, 'கேப் ஏர்' வாங்­கி­யுள்­ளது.

கடந்த ஆண்டு, புது­மைக்­காக விரு­து­களை வாங்­கிய இவி­யே­ஷன் உரு­வாக்­கி­யுள்ள ஆலிஸ், ஒரு முறை மின்­னேற்­றம் செய்­தால், 1,046 கி.மீ., வரை பறக்­கும்; அதா­வது, லண்­ட­னி­லி­ருந்து ஜூரிச் வரை­யி­லான துாரம். மின் விமா­னம் என்­றா­லும், மணிக்கு, 444 கி.மீ., வேகத்­தில் பறக்­கும் திறன் கொண்­டது ஆலிஸ்.

உலக அள­வில் விமான போக்­கு­வ­ரத்­தால் மட்­டும், 3 சத­வீத காற்று மாசு ஏற்­ப­டு­கி­றது. எனவே, உள்­நாட்­டில் குறு­கிய தொலைவு பறக்­கும் விமா­னங்­களை விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்த, பல நாடு­கள் திட்­ட­மிட்டு வரு­கின்­றன. இந்த நேரத்­தில் ஆலிஸ் வந்­தி­ருப்­பது, விமா­னத் துறையை உற்­சா­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.