அன்யோன்யமாக இருப்பதற்கு என்ன பொருத்தம்-? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019

பொது­வாக ஒரு­சில தம்­ப­தி­யர்­கள் மிக­வும் அன்­யோன்ய­மாக இருப்­பதை காண­லாம்.மற்றவர்­கள் இவர்­களை பார்த்து பொறாமை கொள்­ளும் அள­விற்கு இவர்­கள் வாழ்ந்து காட்­டு­வார்­கள். பார்ப்­ப­தற்கு ஜோடிப் பொருத்­தம் சரி­யாக அமை­யா­விட்­டா­லும் அதா­வது ஒரு­வர் குள்­ள­மா­க­வும் ஒரு­வர் மிக உய­ர­மா­க­வும் இருப்­பார்­கள் அல்­லது ஒரு­வர் மிக­வும் கருமை நிற­மா­க­வும் மற்­றொ­ரு­வர் சிவப்­பா­க­வும் இருப்­பார்­கள். அப்­படி இருந்­தும் அவர்­க­ளு­டைய திரு­மண வாழ்க்கை மிக­வும் சிறப்­பாக சென்று கொண்­டி­ருப்­பதை நாம்  காண இய­லும்.

எவ்­வ­ளவு இக்­கட்­டான சூழ்­நி­லை­யி­லும் எந்த பிரச்னை ஏற்­பட்­டா­லும் அதா­வது பணம் இல்­லாத சூழ்­நி­லை­யி­லும் இரு­வ­ரும் பிரி­யா­மல் ஒன்­றாக இருக்­கின்­றார்­கள்.

அதே­போன்று ஒரு சில­ருக்கு திரு­ம­ணம் ஆகி­யும் குழந்­தைப்­பேறு இல்­லா­மல் ஆகி­விட்­டால் மறு திரு­ம­ணத்தை பற்றி யோசிப்­பார்­கள். அல்­லது மறு­ம­ணம் செய்து விடு­வார்­கள் அல்­லது விவா­க­ரத்து செய்து விடு­வார்­கள். அப்­படி ஏது­மின்றி கைப்­பி­டித்த மனை­வியை விட்­டுக்­கொ­டுக்­கா­மல் இருப்­ப­தற்கு என்ன பொருத்­தம் வேண்­டும் என்­பது நீங்­கள் கேட்­கும் ஆவல் எனக்கு புரி­கி­றது.

உங்­க­ளுக்கு இந்த பொருத்­தம் மிக­வும் அவ­சி­யம். அது என்ன அந்த பொருத்­தம்.  அதுதான்  லக்ன பொருத்­தம். இந்த லக்ன பொருத்­தத்தை எப்­படி பார்ப்­பது என்­பதை பற்­றி­த்தான் இந்த ஆய்வு கட்­டு­ரை­யில் நான் வழங்­கப் போகி­றேன்.

லக்­னம் என்­றால் என்ன-?

 ஒரு­வ­ரு­டைய ஜாத­கத்­தில் ஒரே நாளில் பல பேர் பிறந்­தா­லும் அனை­வ­ருக்­கும் ஒரே ராசி இருப்­பது பொது­வா­னது. ஆனால் நட்­சத்­தி­ரப் பாதம் வேண்­டு­மென்­றால் சிறிது மாறு­ப­ட­லாம் அல்­லது ஏதோ ஒரு நாளில் மட்­டும் ஒரே நாளில் இரு ராசி­கள் அல்­லது மூன்று ராசி­கள் கூட வரக்கூடும்.  

ஆனால் லக்­னம் என்­பது அப்­படி அல்ல அது இரண்டு மணி நேரத்­திற்கு ஒரு­முறை மாறிக்­கொண்டே இருக்­கும்.  அந்த லக்­னத்தை வைத்துத் தான் நம்­மு­டைய தோற்­றம், குணம், நலன், மரி­யாதை, அந்­தஸ்து, ஆயுள் போன்­ற­வற்றை நாம் அறி­ய­மு­டி­யும். லக்­னம் என்­பது உயிர் ஆகும். சந்­தி­ரன் என்­பது அதா­வது ராசி என்­பது உட­லா­கும். அதா­வது சிந்­தனை அனைத்­தும் லக்­னத்­தைப் பொறுத்துதான் அமை­கி­றது.

எப்­படி லக்ன பொருத்­தம் பார்க்க வேண்­டும்-?

லக்­னம் என்­பது 12 ராசி களை போன்­று­தான் 12 லக்­னத்­தின் பெய­ரும் அமை­கி­றது. மேஷம் முதல் மீனம் வரை­யி­லான லக்­னங்­கள் உள்­ளன. ஒவ்­வொரு லக்­னத்­திற்­கும்  பொருத்­த­மான லக்­னங்­கள் எவை எவை என்று அறிந்து கொண்­டால் அதன்படி பொருத்­தம் பார்க்­கும் பொழுது பிரிவு என்­பது தவிர்க்­க­லாம். அதா­வது அவர்­கள் அன்­யோன்­ய­மாக வாழ்­வார்­கள்.

தங்­கள் லக்­னத்­திற்கு விதி­யைக் குறிக்­கும் ஸ்தான­மான ஒன்­றாம் லக்­ன­மும், வீரி­யஸ்­தானமான மூன்­றாம் ஸ்தான­மும் பூர்வ புண்­ணிய ஸ்தான­மான ஐந்­தாம் ஸ்தான­மும், களத்­திர ஸ்தான­மான ஏழாம் ஸ்தான­மும் பாக்­கிய ஸ்தானம் என்று சொல்­லக்­கூ­டிய ஒன்­ப­தாம் ஸ்தான­மும், லாபஸ்­தா­னம் என்று சொல்­லக்­கூ­டிய பதி­னொன்­றாம் ஸ்தான­மும், தன்­னு­டைய துணை­யின் லக்­ன­மாக அமைந்­தால் சிறந்த பொருத்­த­மாக அமை­கி­றது.

 ஜாத­கத்­தில் லக்­னம் ரிஷ­பம் என்று எடுத்­துக் கொள்­வோம் இந்த ரிஷப லக்­னத்­திற்கு கடக லக்­னம் பொருத்­தமா என்று பார்க்­கும் போது நல்ல பொருத்­த­மான லக்­ன­மாக கரு­தப்­ப­டு­கி­றது. ஆகவே, இவற்றை இணைக்­க­லாம்.

– தொட­ரும்.