டி.வி. பேட்டி: நான் ஒரு சிவபக்தை! – மதுமிதா

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019

*    ‘ஆச்சி’ மனோ­ர­மா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக கோவை சரளா! அவ­ருக்கு அடுத்­த­ப­டி­யாக லிஸ்ட்­டில் இருப்­ப­வர், மது­மிதா. அதா­வது, ‘ஜாங்­கிரி’ மது­மிதா. முக­பா­வ­னை­க­ளும், உடல்­மொ­ழி­யும், வசன வெளிப்­பா­டும் காமெ­டிக்கு எந்த அள­வுக்கு முக்­கி­யம் என்­பதை நன்­றாக உணர்ந்து நடிக்­கக்­கூ­டிய திற­மை­சாலி!

*    இப்­போது மது­மிதா ‘பிக் பாஸ்’ ஷோவில்! தமிழ் கலா­சா­ரத்தை காப்­பாற்ற வேண்­டும் என்ற கருத்தை அவர் வெளிப்­ப­டுத்தி, தமிழ் கலா­சா­ரம் என்­பது என்ன என்­பதே முற்­றி­லும் தெரி­யாத  நடிகை ஷெரின் உள்­ளிட்ட சில ஹோம் மேட்­டு­க­ளால் கடும் கோபத்­துக்கு ஆளா­ன­வர். அதில் சின்ன சல­ச­லப்பு ஏற்­பட்­டா­லும், பார்வையா­ளர்­க­ளின் முழு ஆத­ரவு வாக்­கு­க­ளால் ‘காப்­பாற்­றப்­பட்­ட­வர்.’

*    ஏப்­ரல் 21, 1983ல் சென்­னை­யில் பிறந்­த­வர்.

*    அப்பா -  வண்ண கோவிந்­தன்.  மது­மிதா  சின்ன பிள்­ளை­யாக இருக்­கும்­போதே அவர் இறந்­து

­விட்­டார். எனவே, அம்­மா­வின் கட்­டுக்­கோப்­பான வளர்ப்­பில் வளர்ந்­த­வர்.

*    மூன்று அக்­காள்­கள் இருக்­கி­றார்­கள்.

*    பட்­ட­தா­ரி­யான அவர், ஒரு தமிழ் கத்­தோ­லிக்.

* 161 செ.மீ., உய­ர­மும், 55 கிலோ எடை­யும் கொண்­ட­வர்.

*    சென்ற பிப்­ர­வ­ரி­யில்­தான் அவ­ருக்கு கல்யா­ணம் நடந்­தது. தனது உற­வினர் மோசஸ் ஜோயல் என்­ப­

வரை மணந்து கொண்டார்.

*    நடி­கர் சந்­தா­னம் மிக­வும் பிர­ப­ல­ம­டைந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூல­

மாக 2004ல் சின்­னத்­தி­ரை­யில் அறி­மு­க­மா­னார் மது­மிதா.

*    அதை தொடர்ந்து “மாமா மாப்ளே,” “பொண்­டாட்டி தேவை,” “அத்­திப்­பூக்­கள்,” “அழகி,” மகேஸ்­வரி நடித்த “மை நேம் இஸ் மங்­கம்மா,” “மடிப்­பாக்­கம் மாத­வன்,” “சின்ன பாப்பா பெரிய பாப்பா,” “காமெடி ஜங்­ஷன்” ஆகிய சீரி­யல்­க­ளில் நடித்­துள்­ளார்.

* இது தவிர, ‘கலக்­கப்­போ­வது  யாரு?’ 5வது சீசன் ஸ்டாண்ட் – அப் காமெடி நிகழ்ச்­சிக்கு அவர் நடு­வ­ரா­க­வும் பொறுப்­பேற்­றி­ருக்­கி­றார்.

* அவர் ஒரு சிவ­பக்தை!

* ‘பிக் பாஸ்’ ஷோவுக்­குள் பிர­வே­சிக்­கும்­போது கூட ‘ஓம்  நம­சி­வாய’ என உச்­ச­ரித்­துக்­கொண்­டே­தான் நுழைந்­தார்.

* “ஒரு கல் ஒரு கண்­ணாடி” படத்­தில் ‘ஜாங்­கிரி’ என்­கிற காமெடி கேரக்­ட­ரில் நடித்து புகழ் பெற்­றார். அதி­லி­ருந்து ‘ஜாங்­கிரி’ மது­மிதா ஆனார்.

* பயங்­கர  அசை­வப்­பி­ரி­யர்.

* “மிரட்­டல்,” “அட்­டக்­கத்தி,” “கண் பேசும் வார்த்­தை­கள்,” “சொன்னா புரி­யாது,” “ராஜா ராணி,” “இதற்­குத்­தானே ஆசைப்­பட்­டாய் பால­கு­மாரா,” “ஜில்லா,”  “நள­னும் நந்­தி­னி­யும்,” “தெனா­லி­ரா­மன்,” “விஸ்­வா­சம்”  உட்­பட பல படங்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றார்.

* ரஜினி, விஜய், ரம்யா ஆகி­யோர் அவ­ருக்கு மிக­வும் பிடித்த நட்­சத்­தி­ரங்­கள்.

* ஷாப்­பிங் பண்­ணு­வது, பிர­யா­ணிப்­பது, சினிமா பார்ப்­பது  இவை­யெல்­லாம் முக்­கிய பொழு­து­போக்­கு­கள்.

– இரு­ளாண்டி