ஷில்பாவின் ‘மர்லின்’ போஸ்

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019

மர்­லின் மன்றோ என்­றாலே, காற்­றில் பறக்­கும் குட்­டைப் பாவா­டையை அவர் பிடித்­துக் கொண்­டி­ருக்­கும் கவர்ச்­சிப் படம்­தான் சட்­டென நினை­வுக்கு வரும். 1955ல் வெளி­யான அந்த படம், இன்­ற­ள­வும் பெரி­தா­கப் பேசப்­ப­டு­கி­றது.

மர்­லின் மன்­றோ­வின் பிர­பல போஸ் பாணி­யி­லேயே, கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்­கி­யி­ருக்­கி­றார் ஷில்பா ஷெட்டி.

மர்­லின் போல் குட்­டைப்­பா­வ­ாடையை ஷில்பா அணி­ய­வில்லை. ஆரஞ்சு நிற நீண்ட கவுனை அணிந்­தி­ருக்­கி­றார். ஒரு படத்­தில், இரண்டு கைக­ளை­யும் உயர்த்தி போஸ் கொடுக்­கி­றார். இன்­னொரு படத்­தில், ஒரு கையால் தலை­மு­டியை கோதி­ய­படி போஸ் கொடுக்­கி­றார். அந்த கவுன் காற்­றில் பறப்­ப­தால் வெளிப்­ப­டும் தொடைப்­ப­கு­தியை கையால் மூடு­கி­றார்.

ஏதோ ஒரு கட­லோர ரிசார்ட்­டில் எடுக்­கப்­பட்­டுள்ள இந்த படங்­களை, இன்ஸ்­டா­கி­ரா­மில் ஷில்பா வெளி­யிட்­டுள்­ளார். கூடவே, கவிதை பாணி­யில் அவர் இணைத்­துள்ள தக­வல் :

‘இது என்­னு­டைய மர்­லின் மன்றோ தரு­ணம். இது, தென்­றல் இல்­லாத பய­ணம். தயவு செய்து முடி­வைப் பாருங்­கள். இது ஒரு முந்­தைய தழு­வல், ஒரு தர்­ம­சங்­க­டத் தவறு, வேடிக்­கை­யான நேரம், சிரிப்பு, காவி­யம்!’.        ***