21 ஆண்டுகளாக... புதுப்புடவை வாங்காத கோடீஸ்வரி! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 08 ஆகஸ்ட் 2019

வச­தி­யா­ன­வ­ராக இருந்­தால் ஆடம்­ப­ரத்­திற்கு குறை­வி­ருக்­காது. ஆனால் டாப் ஐடி நிறு­வன இன்­போ­சிஸ் சுதா மூர்த்­தி­யின் எளிமை, வாழ்­வில் எது முக்­கி­யம் என்­பதை வெளிச்­சம் போட்டு காட்­டு­கி­றது.ஆடித்­தள்­ளு­படி ஆபர், அள்­ளிக்கோ ஷாப்­பிங் என சென்னை உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­க­ளில் துணிக்­க­டை­களை மொய்க்­கத் தொடங்­கி­யுள்­ளன மக்­கள் கூட்­டம். தேவைக்­காக ஷாப்­பிங் செய்­தது மாறி இப்­போது போர் அடித்­தால் ஷாப்­பிங் என்ற அள­விற்கு மக்­கள் ஆடம்­ப­ரத்­திற்கு அடி­மை­யா­கி­விட்­டார்­கள். பொரு­ளா­தார சூழ்­நிலை கார­ண­மாக எளி­மை­யாக இருப்­ப­வர்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றோம். ஆனால் வசதி படைத்­த­வர்­கள் ஆடம்­ப­ர­மில்­லா­மல் இருப்­பதை கேட்­டால் இன்­றைய நவீன உல­கில் ஆச்­ச­ரி­யப்­ப­டா­மல் இருக்க முடி­யுமா...

பணம் கொட்­டிக் கிடந்­தால் கட்­டித்­தங்­கத்­தில் பிள­வுஸ், வைரத்­தில் செல்­போன், ஹேண்ட் பேக் என்று பேஷன் பீரிக்­கு­க­ளாக வலம் வரு­ப­வர்­கள் மத்­தி­யில் அமைதி, எளி­மையே உரு­வான சுதா மூர்த்தி நம் மனதை ஆட்­கொள்­கி­றார். இந்­தி­யா­வின் டாப் ஐடி நிறு­வ­னங்­க­ளில் ஒன்­றான இன்­போ­சிஸ் நிறு­வ­னர் நாரா­ய­ண­மூர்த்­தி­யின் மனை­வி­யும், இன்­போ­சிஸ் பவுண்­டே­ஷ­னின் தலை­வ­ரு­மான சுதா மூர்த்தி தனித்து அடை­யா­ளம் காணப்­ப­டு­வ­தற்­கும் அவர் மீது தனி மரி­யாதை ஏற்­ப­டு­வ­தற்­கும் அவ­ரு­டைய சாத­னை­கள் மட்­டும் கார­ண­மல்ல.

வாழ்க்­கையை முற்­றி­லும் வேறு கோணத்­தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் சுதாவை யாருமே ஆடம்­ப­ர­மான உடை­யிலோ அல்­லது நகை­கள் அணிந்தோ பார்த்­த­தே­யில்லை. சாதா­ரண காட்­டன் புட­வையை அணிந்து கொண்­டி­ருக்­கும் இவரை பார்த்­தால் பல­ருக்கு ஆச்­ச­ரி­யம் ஏற்­ப­டும். இதில் பெண்­க­ளுக்கு ஷாக் அடிக்­கும் மற்­றொரு விஷ­யம் என்ன தெரி­யுமா சுதா மூர்த்தி 21 ஆண்­டு­க­ளாக ஒரே ஒரு புதுப் புடவை கூட வாங்­கி­ய­தில்­லை­யாம். இதற்கு அவர் கூறும் கார­ணம் அனை­வ­ருக்­கும் ஒரு சிறந்த முன்­மா­தி­ரி­யாக இருக்­கும்.

“நான் காசிக்கு சென்­றி­ருந்த போது புனித நதி­யில் நீரா­டும் போது நமக்­குப் பிடித்த எதை­யா­வது விட வேண்­டும் என்று சொன்­னார்­கள். நான் ஷாப்­பிங் செய்­வதை விட்­டு­வி­டு­வ­தாக, குறிப்­பாக சேலை­கள் வாங்­கு­வதை விட்­டு­வி­டு­வ­தாக உறு­தி­யெ­டுத்­தேன். அப்­போது முதல் தேவை­யா­ன­வற்­றைத் தவிர வேறு எதை­யுமே ஷாப்­பிங் செய்­வ­தில்லை,” என்­கி­றார் சுதா மூர்த்தி.

நாம் எப்­போ­துமே பிற­ருக்­காக வாழ்­கி­றோம். அவர்­கள் என்ன நினைப்­பார்­களோ என்றே பல­வற்றை செய்­கி­றோம். என்­னைப் பொருத்­த­வ­ரை­யில் அது தேவை­யில்லை, நாம் நமக்­காக வாழ வேண்­டும்.

“எப்­போ­துமே நான் பிற­ருக்கு சொல்­லும் அறி­வுரை எளி­மை­யான வாழ்க்­கையை வாழுங்­கள் உங்­கள் மன­சாட்சி என்ன சொல்­கி­றதோ அதைச் செய்­யுங்­கள். மனி­தத்­தின் அழகு எளி­மை­யான வாழ்க்­கை­யி­லும், நம்­பிக்­கை­யி­லுமே இருக்­கி­றது. எனவே உங்­க­ளுக்­காக வாழுங்­கள். என் கண­வர் நாரா­ய­ண­மூர்த்­தி­யின் எளிமை என்­னை­யும் தொற்­றிக்­கொண்­டது என நினைக்­கி­றேன். அவர் மிக­வும் எளி­மை­யா­ன­வர், நேர்­மை­யா­ன­வர், எப்­போ­தும் என்­னு­டைய ஆடை பற்­றியோ அழகு பற்­றியோ பேசி­யதே இல்லை. ஆனால் நான் ஒரு நல்ல மனுஷி என்ற நம்­பிக்கை அவ­ருக்கு இருந்­தது,” என்­கி­றார் சுதா.

மிக­வும் சாதா­ர­ண­மான புடவை உடுத்தி இருப்­ப­தால் பல நேரங்­க­ளில் சுதாவை பலர் குறைத்து மதிப்­பிட்­டி­ருக்­கி­றார்­கள். தர்­ம­சங்­க­ட­மான சூழ்­நி­லை­களை சந்­தித்த போதும் சுதா­வின் உறு­தியை அசைக்க முடி­ய­வில்லை. சங்­க­டப்­பட்­டுக் கொண்டு தனது வாழ்க்­கைப் பாதையை மாற்­றிக் கொள்­ளா­மல் தனக்கு பிடித்­தது போலவே எளி­மை­யா­கவே இன்­ற­ள­வும் வாழ்ந்து வரு­கி­றார் 68 வய­தான சுதா.

ஒரு முறை விமான பய­ணத்­திற்­காக பிசி­னஸ் கிளாஸ் வகுப்­பி­ன­ருக்­கான வரி­சை­யில் சுதா காத்­தி­ருந்த போது அந்த வரி­சை­யில் நின்­றி­ருந்த பணக்­கார பெண்­மணி ஒரு­வர் இது வசதி படைத்­த­வர்­கள் செல்­லும் வரிசை நீங்­கள் ’கேட்­டில் கிளாஸ்’ வரி­சைக்­குச் செல்­லுங்­கள் என்று ஏள­னம் செய்­துள்­ளார். தனது எளி­மை­யான ஆடையை பார்த்து அவர் இவ்­வாறு இகழ்­வதை புரிந்து கொண்ட சுதா, அமை­தியை மட்­டுமே அந்த பணக்­கார பெண்­ம­ணிக்கு பதி­லாக தந்­துள்­ளார்.

“வகுப்பு என்­பது அதிக பணம் சம்­பா­தித்­தால் மட்­டும் வந்­து­வி­டாது. இந்த உல­கில் பல குறுக்கு வழி­க­ளில் கூட தான் பணத்தை சம்­பா­தித்து விட முடி­யும். ஆடம்­ப­ரத்­திற்­கும், வச­தி­யாக வாழ்­வ­தற்­கும் மட்­டும் வேண்­டு­மா­னால் பணம் உத­வும். ஆனால் அதே பணம் உங்­கள் வாழ்க்­கை­யின் உன்­ன­தம் என்ன என்­பதை புரிய வைக்­காது, ஏனெ­னில் அவை விலை கொடுத்து வாங்க முடி­யாத மனித மனங்­கள்,” என்­கி­றார் சுதா மூர்த்தி.

ஆடம்­ப­ரத்­தின் பின்­னால் இந்த உல­கில் உள்ள மக்­கள் ஓடிக்­கொண்­டி­ருக்­கும் நிலை­யில் வாழும் உதா­ர­ண­மாக இருக்­கும் சுதா மூர்த்­தி­யின் எளிமை மக்­க­ளுக்கு வாழ்க்­கை­யில் எது முக்­கி­யம் என்­பதை யோசிக்க வைத்­தி­ருக்­கி­றது.