பிசினஸ் : தொழிலில் வெற்றி பெற ரிஸ்க் எடுங்கள்!

பதிவு செய்த நாள் : 08 ஆகஸ்ட் 2019

தொழிலில் சில நேரங்களில் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அதுபோன்ற நேரங்களில் சோதனை முயற்சிகளை செய்யத் தயங்க கூடாது. இதனைச் செய்தால் நஷ்டம் ஏற்படுமா, ஏற்படாதா என்கிற கேள்விகளுக்கு இடம் தராமல் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். தயங்காமல் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது தொழில்முனைவோருக்கு முடிவெடுக்கும் திறனையும், தொழில் மீது அவருக்குத் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

தொடங்­கு­வ­தில் தாம­தம் வேண்­டாம்!

ஒரு தொழிலை தொடங்க நினைத்­தாலோ அல்­லது விரி­வாக்க நினைத்­தாலோ தொழில்­மு­னை­வோ­ரது மன­துக்­குச் சரி­யென்று தோன்­றி­னால் உடனே அத­னைச் செய்­து­விட வேண்­டும். தாம­தப்­ப­டுத்தி இதனை இன்­ன­மும் கொஞ்ச நாள் கழித்­துச் செய்­ய­லாமே அல்­லது இன்­னும் இதற்­கான நேரம் வர­வில்லை என்று சொல்லி கொண்­டி­ருக்­கா­மல், சரி­யென்று நினைத்த செயலை உட­ன­டி­யா­கச் செய்து முடிக்க வேண்­டும். அத­னைத் துவங்­கு­வ­தில் தாம­தம் காட்­டி­னால், நிச்­ச­யம் அதன் செயல்­தி­றன் குறைய வாய்ப்­புள்­ளது.

அதி­க­மான மதிப்­பீடு தேவை­யில்லை!

வங்­கி­யில் தொழில் கடன் பெறு­வ­தற்­காக தனது நிறு­வ­னத்­தின் மதிப்பை அதி­க­மா­கக் கூறு­வ­தும், தன் நிறு­வ­னத்­தின் மதிப்­பீட்டை மிகைப்­ப­டுத்­திக் கூறு­வ­தும் தேவை­யில்லை. ஏனெ­னில், உங்­கள் அதிக மதிப்­பீட்­டுக்கு கடன் கிடைத்­தால், உங்­க­ளால் அத­னைச் சரி­யான முறை­யில் திருப்­பித் தர­மு­டி­யுமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும். தன் தொழில் பற்றி உள்­ளதை உள்­ள­படி சொல்­லும் தொழில்­மு­னை­வோரே என்­றும் நிலைத்து நிற்­பார்.

போட்­டி­களை அணு­குங்­கள்!

தொழி­லில் போட்டி என்­பது தவிர்க்க முடி­யாத ஒன்று. உங்­க­ளுக்­குப் போட்­டி­யாக ஒரு சிறிய அல்­லது பெரிய நிறு­வ­னம் வந்­தால், அத­னைக் கண்டு ஒதுங்­கா­தீர்­கள். அவற்­றால் உங்­கள் தொழி­லில் தொய்வு ஏற்­ப­டுமோ என்ற பயத்­தைப் போக்கி அவற்றை வித்­தி­யா­ச­மான முறை­யில் அணு­கும் மன­நி­லையை உரு­வாக்­கிக் கொள்­ளுங்­கள். போட்டி நிறு­வ­னம் வள­ரும்­போது வணிக வாய்ப்­பு­க­ளும் அதி­க­ரிக்­கும். அப்­போது அந்த வாய்ப்­பு­களை எப்­படி பயன்­ப­டுத்­திக்­கொள்­வது என்ற நிலை­யைத் தெரிந்து, அதற்கு ஏற்­ற­வாறு உங்­கள் உத்­தி­களை வகுத்­துக்­கொள்­ளுங்­கள், அது உங்­க­ளைப் போட்­டி­யில் முன்­னி­ருத்­தும்.

ரிஸ்க் எடுங்­கள்!

தொழி­லில் முடி­வெ­டுக்­கும்­போது நீங்­கள் ஒரு சில முடி­வு­க­ளுக்­குப் புள்ளி விவ­ரங்­க­ளை­யும், மற்­ற­வர்­க­ளது கருத்­தை­யும் கேட்க நேரி­டும். அப்­போது வெவ்­வேறு தக­வல்­கள் உங்­க­ளுக்­குப் பதி­லா­கக் கிடைக்­கும். அதில் எத­னைத்  தேர்ந்­தெ­டுப்­பது என்ற நிலை உரு­வா­க­லாம். அது­போன்ற நேரங்­க­ளில் நீங்­கள் எடுத்த முடிவை கைவி­டக்­கூட நினைப்­பீர்­கள். ஆனால், உங்­க­ளுக்­குள் ஒரு குழப்­பம் இருந்தே வரும். அது­போன்ற நேரங்­க­ளில் உங்­க­ளால் சமா­ளிக்க முடிந்த ரிஸ்க்கை எடுங்­கள். அத­னைப் பொறுத்து உங்­கள் தொழிலை அமை­யுங்­கள். ஏனெ­னில், அனைத்து நேரங்­க­ளி­லும் புள்­ளி­வி­வ­ரங்­கள் சரி­யா­ன­தாக அமை­வ­தில்லை. அத­னால் தொழில்­முனை வோர்­கள் ரிஸ்க் எடுக்­கும் மன­நி­லையை வளர்த்­துக்­கொள்­வது அவ­சி­யம்.

பர்ஸ்ட் மூவர் வாய்ப்­பைப்

பயன்­ப­டுத்த தயங்­கா­தீர்!

ஒரு பொருள் அல்­லது சேவையை பர்ஸ்ட் மூவர் எனும், முத­லில் அறி­மு­கம் செய்­ப­வ­ராக நீங்­கள் இருந்­தால், அதனை உட­ன­டி­யா­கத் துவங்க தயங்­கா­தீர்­கள். யாரா­வது ஒரு­வர் இத­னைத் தொடங்­கட்­டும்.  அதில் அவ­ருக்கு உண்­டா­கும் அனு­ப­வத்­தைப் பார்த்து அதன்­பின் நான் தொடங்குகி­றேன் என்று நினைக்­கா­தீர்­கள். எப்­போ­தும் முத­லில் ஒரு விஷ­யத்தை ஆரம்­பிப்­ப­வர்­தான் நீண்ட நாட்­கள் வாடிக்­கை­யா­ளர்­கள் மன­தில் இடம் பெறு­வார். நீங்­கள் முத­லில் அறி­மு­கப்­ப­டுத்­தும் பொரு­ளுக்­குப் பின்­னர் போட்டி நிறு­வ­னங்­கள் வந்­தா­லும் அது உங்­கள் பொருளை போன்ற பொருள் என்றே மக்­கள் நினைக்­கக்­கூ­டும் என்­ப­தால், கூடு­தல் பிராண்­டிங் கிடைக்­கும். அத­னால் பர்ஸ்ட் மூவ­ராக இருந்­தால் அந்த வாய்ப்­பைத் தள்­ளிப்­போ­டா­தீர்­கள்.

உங்­களை நம்­புங்­கள்!

தொழில்­மு­னை­வோ­ருக்கு அவ­சி­யம் இருக்க வேண்­டி­யது, அவர் அவரை நம்ப வேண்­டும். என்­ன­தான் உத்­தி­கள், அத­னைச் செயல்­ப­டுத்­தும் குழு, சிறப்­பான தயா­ரிப்பு, விற்­பனை ஆகி­யவை இருந்­தா­லும் ஒரு தொழில்­மு­னை­வோர் அவ­ரால் இந்த தொழிலை அடுத்­தக் கட்­டத்­துக்கு எடுத்­துச் செல்ல முடி­யும் என்ற மன­நி­லையை பெற்­றி­ருத்­தல் அவ­சி­யம். அப்­படி இருக்­கும்­போது அவ­ரது செயல்­மு­றை­யில் எந்த இடத்­தில் தொய்வு ஏற்­பட்­டா­லும் அவர் முடங்­கி­வி­டா­மல், அந்த தொழிலை அடுத்­தக் கட்­டத்­துக்கு எடுத்­துச் செல்ல அவர்­மேல் அவ­ருக்கு இருக்­கும் நம்­பிக்கை உத­வும்.

ஏற்­றுக்­கொள்­ளும்

மனப்­பான்மை வேண்­டும்!

உங்­கள் தொழி­லில் ஓர் இலக்கை நிர்­ண­யித்­துச் செயல்­ப­டு­கி­றீர்­கள் என்­றால், குறு­கிய கால மதிப்­பீட்­டில் அதன் ரிசல்ட் குறை­வாக இருக்­க­லாம். ஆனால், நீங்­கள் அடைய நினைத்­தது நீண்ட நாள் இலக்கு. அதனை அடைய இந்த குறு­கிய கால இலக்­கில் ஏற்­பட்ட சரிவை மீத­முள்ள நாட்­க­ளில் எப்­படி சரி செய்­வது என்­பதை யோசிக்க வேண்­டும். இந்த மாதம் நாம் இலக்கை அடை­ய­வில்­லையே என்று சோர்ந்­து­வி­டக் கூடாது. குறு­கிய காலச் செயல்­பாட்டை ஏற்­றுக்­கொண்டு அதி­லி­ருந்து அடுத்த இலக்கை நோக்­கிச் செல்ல வேண்­டும்.

தொழி­லில் ஈடு­பாடு அவ­சி­யம்!

உங்­கள் தொழிலை வேலை­யா­கப் பார்க்­கும் மன­நி­லை­யில் நீங்­கள் இருந்­தால், அந்த தொழில் உங்­க­ளுக்கு நீங்­கள் எதிர்­பார்க்­கும் லாபத்­தைத் தரு­வ­தாக இருக்­காது. நீங்­கள் துவங்­கும் அல்­லது நீங்­கள் அறி­மு­கம் செய்­யும் தொழில் உங்­க­ளின் கன­வுத் தொழி­லாக இருந்­தால், அது எதிர்­பார்த்­த­தை­விட அதிக லாபத்­தைத் தரும். உங்­கள் ஈடு­பாடு அது­தான் எனில், அதில் நீங்­கள் சாதா­ர­ண­மா­கச் செயல்­ப­டு­வ­தை­விட இரண்டு மடங்கு அதி­க­மாக செயல்­ப­டு­வீர்­கள். அந்த மன­நிலை உங்­கள் தொழி­லை­யும், அத­னால் உங்­க­ளுக்கு அதிக லாபத்­தை­யும் தரு­வ­தாக இருக்­கும்.

எமோ­ஷ­ன­லாக

இருக்­கா­தீர்­கள்!

நீங்­கள் செய்­யும் தொழி­லில் சில விஷ­யங்­க­ளில் எமோ­ஷ­னா­லாக இருப்­ப­தைத் தவி­ருங்­கள். ஒரு­வேளை நீங்­கள் செய்­யும் தொழி­லில் ஒரு புதிய தொழில் நுட்ப மாறு­தல் வந்­தி­ருக்­க­லாம். ஆனால், அத­னைத் தவிர்த்து எனக்கு இது­தான் சரி­யா­கத் தோன்­று­கி­றது. மேலும், இதனை நான் 20 வரு­டங்­க­ளா­கப் பயன்­ப­டுத்தி வரு­கி­றேன். இந்த முறை­யி­லி­ருந்து மாற­மாட்­டேன் என்று இருக்­கா­தீர்­கள். அத­னால் உங்­க­ளை­விட மற்­ற­வர்­கள் முன்­னேற வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.  அதே­போல், எனக்கு வய­தா­கி­விட்­டது, இளம் போட்­டி­யா­ளர்­களை எப்­ப­டிச் சமா­ளிப்­பது என்றோ அல்­லது நான் இளம் நபர் இதில் அனு­ப­வம் உள்­ள­வரை எப்­படி எதிர்­கொள்­வது என்ற எமோ­ஷ­ன­லான விஷ­யங்­களை உங்­கள் தொழி­லில் அனு­ம­திக்­கா­தீர்­கள்