வழி நடத்­தும் வாசிப்பு!

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2019

சிவ­கங்கை மாவட்­டம், சரு­கணி, புனித சின்­னப்­பர் நடு­நி­லைப் பள்­ளி­யில், 1993ல், 8ம் வகுப்பு படித்­தேன்.

சமூக அறி­வி­யல் பாட ஆசி­ரி­யர் ஆரோக்­கி­ய­சாமி, அன்­பு­டன் உரை­யா­டு­வார். ஒரு நாள், 'உங்­கள் திற­மை­களை கூறுங்­கள்...' என்று மாண­வர்­க­ளைக் கேட்­டார். அனை­வ­ரும் கூறி­னர்.

நான், சொல்­வ­த­றி­யாது திண­றி­னேன். மிகுந்த கூச்­சத்­தால் தயங்கி நின்­றேன். திரும்ப திரும்ப கேட்­டும், சொல்ல இய­லா­மல் தவித்­தேன். அரு­கி­லி­ருந்த மாண­வர்­கள், 'நல்லா மனப்­பா­டம் செய்­வான் ஐயா; எத்­தனை பக்­கம் கொடுத்­தா­லும், உடனே ஒப்­பிச்­சு­டு­வான்...' என்­ற­னர்.

வியந்த ஆசி­ரி­யர், ஆங்­கில புத்­த­கத்­தில், ஒரு பக்­கத்தை குறித்து, 'இதை, 10 நிமி­டங்­க­ளில் மனப்­பா­டம் செய்து ஒப்­பித்து காட்டு...' என்­றார்.

உட­ன­டி­யாக ஒப்­பித்­தேன்; மகிழ்ந்து பாராட்­டி­ய­வர், வகுப்பு முடிந்­த­தும், வீட்­டிற்கு அழைத்­துச் சென்­றார்.

அவ­ரது நுால­கத்­தைக் காட்டி, 'நிறைய படிக்க வேண்­டும்; படிப்­ப­தால் தன்­னம்­பிக்கை வள­ரும்; தாழ்வு மனப்­பான்­மை­யும், கூச்ச சுபா­வ­மும் வில­கும்...' என, உணர்த்தி, நுால்­கள் கொடுத்­தார்.

அவ­ரது துாண்­டு­த­லால், 14 வய­தில் பொது நுாலக உறுப்­பி­னர் ஆனேன். அன்று முதல் வாசிப்பே, என்னை வழி நடத்தி வரு­கி­றது.

எத்­த­னையோ இலக்­கி­யக் கூட்­டங்­க­ளில் பேசி­யி­ருக்­கி­றேன்; கவிதை பட்­ட­றை­க­ளில் வகுப்­பெ­டுத்­தி­ருக்­கி­றேன். அனைத்து முன்­னணி தமிழ் இதழ்­க­ளி­லும், என் படைப்­பு­கள் வெளி வந்­தி­ருக்­கின்­றன.

தற்­போது என் வயது, 39. சாதா­ரண கிரா­மத்­தில் பிறந்த என்னை, இந்த நிலைக்கு உயர்த்­தி­யது நுால் வாசிப்பு என்ற ராஜ­பாட்டை தான். அதற்கு துாண்­டிய ஆசி­ரி­யர் இருக்­கும் திசை நோக்கி, விழுந்து வணங்­கு­கி­றேன்!

–- துஷ்­யந்த் சர­வ­ண­ராஜ், சிவ­கங்கை.