நெருப்­பில் தத்­த­ளிக்­கும் பூக்­கள்!

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2019

கலை­ஞர் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ‘டும் டும் டும்’ மெகா சீரி­யல் ஒளி­ப­ரப்­பில் உள்­ளது.

வாட் இப் புரொ­டக்­க்ஷன்ஸ் தயா­ரிக்க, ‘நட்­புன்னா என்­னான்னு தெரி­யுமா?’ படத்­தின் டைரக்­டர் சிவா அர­விந்த் டைரக்­க்ஷன் பொறுப்பை ஏற்­றுள்­ளார்.

நெல்லை மாவட்ட கிரா­மப் பின்­ன­ணி­யில் உரு­வா­கும் இந்த சீரி­யல், சமு­தா­யத்­தில் சம­மான அந்­தஸ்­துள்ள இரு வள­மான குடும்­பங்­களை மையப்­ப­டுத்தி நகர்­கி­றது. நட்­பாக பழகி வந்த இரு குடும்­பங்­கள் முந்­தைய தலை­முறை காதல் திரு­ம­ணத்­தால் பிரி­வ­து­டன், அந்த ஊரை­யும் இரண்­டாக பிளக்­கி­றது. அடிக்­கடி இவர்­க­ளி­டையே நடக்­கும் பிரச்­னை­க­ளால் உயி­ரி­ழப்­பு­க­ளும் நிகழ்ந்து அந்த ஊர் மக்­களை சோகத்­தில் ஆழ்த்­து­கி­றது.

 இது­போன்ற அசம்பா விதங்­களை விரும்­பாத அந்த  குடும்­பத்­தின் மூத்­த­வர்­கள் தங்­கள் குடும்­பங்­கள் மற்­றும் ஊர் மக்­க­ளின் நலன் கருதி இந்த பிரச்­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடிவு செய்­கின்­ற­னர். இதை­ய­டுத்து பிரச்­னைக்­கு­ரிய இரு குடும்­பத்­தி­னர் ஒரு இளம் ஜோடிக்கு திரு­ம­ணம் செய்து வைக்க முடிவு செய்­கி­றார்­கள். ஆனால் அதற்­கான வாய்ப்பு அமை­யா­மல் தடை­பட, பல்­வேறு பிரச்­னை­க­ளால் திரு­ம­ணம் தள்­ளிப்­போக, ஊர் பகை கொழுந்­து­விட்டு எரி­கி­றது. கடை­சி­யில், அந்த இளம் ஜோடிக்கு ‘டும் டும் டும்’ நடந்­ததா? பிரிந்த குடும்­பங்­கள் ஒன்­றாக இணைந்தனவா? அந்த ஊரும், ஊர் மக்­க­ளின் கதி­யும் என்­ன­வா­யிற்று?

‘மிஸ்­டர் சென்னை’ மைக்­கேல் நாய­க­னா­க­வும், விஜ­ய­லட்­சுமி அகத்­தி­யன் கதை­யின் நாய­கி­யா­க­வும் நடிக்­கி­றார்­கள்.