காமெடி கலாட்­டா­!

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2019

என்.டி.வி. என்­டர்­டெ­யின் மென்ட்ஸ் நிறு­வ­னம் சார்­பாக பிரி­யங்கா தயா­ரிக்க, ‘மங்கை’ புகழ் பி. ஹரி­ரா­ஜன் டைரக்ட் செய்­யும் காமெடி சீரி­யல் ‘சூப்­பர் சுப்­பி­ர­மணி.’

இது ராஜ் டி.வி.யில் ஞாயி­று­தோ­றும் காலை 9 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

ஒரே தெரு­வில் சுப்­பி­ர­மணி என்ற பெய­ரில் நான்கு பேர் வசிக்­கின்­ற­னர். ஒரே பெய­ரில் 4 பேர் இருப்­ப­தால், பெரும் பெயர் குழப்­பம் உண்­டா­கி­றது.

ஒரு சுப்­பி­ர­மணி வீட்­டிற்கு பெண் பார்க்க வரு­ப­வர்­கள் அடுத்த சுப்­பி­ர­மணி வீட்­டிற்­குச் சென்று பெண் பார்த்து நிச்­ச­யம் செய்­து­வி­டு­கின்­ற­னர்.

இத­னால் பெரும் கலாட்டா உரு­வா­கி­றது. இதே­போல் ஒரு சுப்­பி­ர­மணி திருட்டு நகையை வாங்க, அந்த பிரச்­­னை­யில் அடுத்த சுப்­பி­ர­ம­ணியை போலீஸ் கைது­ செய்­கி­றது.

இப்­படி சுப்­பி­ர­மணி பெயர் குழப்­பத்­தால் நடக்­கும் காமெடி கலாட்­டா­தான் இது.

டி.பி.கஜேந்­தி­ரன், போண்­டா­ மணி, வாசு விக்­ரம், ஜெய­மணி, மீனாட்சி, அகிலா கிருஷ்­ணன், பயில்­வான் ரங்­க­நா­தன், கீதா நாரா­ய­ணன், ஜே.லலிதா உட்பட பல நகைச்­சுவை நடி­கர்­கள் நடிக்­கின்­ற­னர்.