செப். 28ல் சின்­னத்­திரை நட்­சத்­திர கலை விழா!

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2019

மலே­சி­யா­வில், இம்­மா­தம் 17ம் தேதி சின்­னத்­திரை நடி­கர் சங்­கம் சார்­பில் நடக்­க­வி­ருந்த சின்­னத்­திரை நட்­சத்­திர கலை­விழா, இன்­னும் சிறப்­பாக நடை­பெ­று­வ­தற்­கான விசேஷ ஏற்­பா­டு­கள் நடை­பெற்­றுக் கொண்டி­ ருப்­ப­தால், அடுத்த மாதம் 28ம் தேதிக்கு தள்ளி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ்­வ­கை­யில், கோலா­லம்­பூ­ரி­லுள்ள பிஜி­ஆர்­எம் தேவான் வாவ­சான் – சேராஸ் அரங்­கத்­தில் மாலை 5 மணிக்கு நடக்­க­வுள்­ளது.

அதில் சின்­னத்­திரை நட்­சத்­தி­ரங்­கள் மட்­டு­மல்­லா­மல், சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளும் பங்­கேற்று சிறப்­பிக்­க­வுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­கூ­றிய தக­வலை சின்­னத்­திரை நடி­கர் சங்க தலை­வர் அ. ரவி­வர்மா தெரி­வித்­துள்­ளார்.