அத்திவரதர் ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில் காட்சி

பதிவு செய்த நாள் : 05 ஆகஸ்ட் 2019 16:54

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவின் 36 வது நாளான இன்று, ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில், மல்லிகை, தாமரை, செண்பகப்பூ மலர் அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகிறார்கள்.

அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் தரிசனம் தொடங்கியது. நின்ற நிலையில் அத்திவரதரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வாகன நெரிசலை தவிர்க்க, இன்று முதல் வெளியூர் வாகனங்கள் நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு எல்லையுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
எல்லையிலிருந்து பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அத்திவரதரரை தரித்து வருகிறார்கள்.
ஆங்காங்கே பக்தர்களுக்கு உணவு, குடிநீரும், குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
பக்தர்கள் வருகையைப்பொறுத்து இன்றிலிருந்து நள்ளிரவு வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.