ஸ்டார்ட் அப் : ஏர் பியூ­ரி­பை­யர் ஸ்டார்ட் அப்

பதிவு செய்த நாள் : 05 ஆகஸ்ட் 2019

அசுத்­த­மான காற்று தான் பல வியா­தி­க­ளுக்கு கார­ணம். நம்மை சுற்றி நம் வீட்­டி­லேயே அசுத்­த­மான காற்று நமக்கு தெரி­யா­மலே பர­வ­லாக இருக்­கி­றது. இத­னால் சுத்­த­மான காற்று என்­பது நமது சுகா­தா­ரத்­திற்கு மிக­வும் முக்­கி­யம்.

ஏர்­பி­யூ­ரி­பை­யரை ஏ.சி.யுடன் பொறுத்­தும் வசதி இருந்­தால் எப்­படி இருக்­கும்.  டெல்­லி­யில் இருக்­கும் ஐஐடி ஆசி­ரி­யர்­க­ளும், பழைய  மாண­வர்­க­ளும் சேர்ந்து கண்­டு­பி­டித்த இந்த கண்­டு­பி­டிப்பு இந்த கரு­வியை உங்­கள் வீட்­டில் இருக்­கும் ஏசி­யில், அது விண்டோ ஏசி ஆக இருந்­தா­லும் சரி அல்­லது ஸ்பிளிட் ஏ.சி.யாக  இருந்­தா­லும் சரி அதில் பொருத்தி கொள்­ள­லாம்.

சாதா­ர­ண­மாக ஒரு ஏர்­பி­யூ­ரி­பை­யரை உங்­கள் வீட்­டிற்கு வாங்க வேண்­டு­மென்­றால் ஆயி­ரக்­க­ணக்­கில் செல­வ­ழிக்க வேண்­டும். ஆனால் இந்த ஏர் பியூ­ரி­பை­யர் 399 ரூபாய்க்கு உங்­க­ளுக்கு கிடைக்­கி­றது. இந்த ஸ்டார்ட் அப் ஆரம்­பிக்­கப்­பட்டு மார்க்­கெட்­டில் இந்த பியூ­ரி­பை­யரை விற்­ப­னைக்கு கொண்டு வந்­த­வு­டன் கிட்­டத்­தட்ட 20000 ஏர் பியூ­ரி­பை­யர்­கள் விற்­கப்­பட்­டுள்­ளன என்­றால் பாருங்­க­ளேன்

ஐஐடி டெல்லி ஆசி­ரி­யர்­க­ளும், முன்­னாள் மாண­வர்­க­ளும் சேர்ந்து தொடங்­கிய இந்த ஸ்டார்ட் அப்-­பின் தயா­ரிப்பு  மார்க்­கெட்­டில் தற்­போது பர­வ­லாக நன்­றாக விற்­ப­னை­யாகி வரு­கி­றது. உங்­க­ளு­டைய அறையை 90 சத­வீ­தம் ஒரு மணி நேரம் ஏ.சி. ஒடும் போது சுத்­தப்­ப­டுத்தி விடு­கி­றது.

இது தவிர வெளி­யில் செல்­லும் போது, இரு சக்­கர வாக­னங்­க­ளில் செல்­லும் போது மூக்­கில் பொருத்­திக் கொள்­ளும் மெல்­லிய பில்­டர்­க­ளும் இவர்­கள் கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றார்­கள். ஒரு பில்­டர் 12 மணி நேரம் வரை வேலை செய்­கி­றது.

மேலும் விவ­ரங்­க­ளுக்கு இவ­ரு­டைய இணைய தளத்தை அணு­க­வும் www.nasofilters.com (https://nasofilters.com/nf-nanoclean-ac-filter/)