தோல் பிரச­னையா? இந்த ஸ்டார்ட் அப் உத­வும்

பதிவு செய்த நாள் : 05 ஆகஸ்ட் 2019


இந்­தி­யா­வில்    70 சத­வீ­தத்­திற்­கும் மேற்­பட்ட மக்­கள் ஏதா­வது ஒரு தோல் பிரச்­ச­னை­யி­னால் அவ­திப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதா­வது முகப்­பரு, முடி கொட்­டு­தல்,  முடி நரைத்­தல் போன்­ற­வை­க­ளும், இது தவிர மற்ற தோல் பிரச்­ச­னை­கள் கவ­லைப் பட்டு கொண்­டி­ருக்­கி­றார்­கள். டாக்­டர்­க­ளி­டம் செல்­வ­தில்லை.  இத­னால் இவர்­கள் பல சம­யங்­க­ளில் டாக்­டர்­கள் யாரை­யும் சந்­திக்­கா­ம­லேயே தாங்­க­ளா­கவே விளம்­ப­ரங்­க­ளில் வரும் மருந்­து­களை வாங்கி அவற்றை உட்­கொண்டு அல்­லது தடவி நிவா­ர­ணம் பெற முயல்­கின்­ற­னர்.

அமே­சான் மற்­றும் கூகு­ளில் நீண்ட காலம் வேலை பார்த்த ஒரு சாப்ட்­வேர் இன்­ஜி­னி­யர் ஆர்ட்­டி­பி­ஷி­யல் இண்­டெ­லி­ஜென்ஸை வைத்து இதற்­காக ஒரு ஆப் உரு­வாக்­கி­யுள்­ளார். இந்த ஆப் மூலம் நோயா­ளி­யின் உட­லில் எந்த பாகத்­தில் பிரச்­சினை இருக்­கி­றதோ அதை பகு­தியை  போட்டோ எடுத்து அனுப்­பி­னால் அதற்கு தகுந்த தீர்வு கிடைக்­கி­றது. ஒரு ஆச்­ச­ரி­ய­மான விஷ­யம் என்­ன­வென்­றால் ஒரு நாளைக்கு கிட்­டத்­தட்ட ஆயி­ரம் பேர் வரை இந்த ஆப் வழி­யாக தங்­கள் பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வு காண முயல்­கின்­ற­னர்

நீங்­கள் ஆப்  மூல­மாக எடுக்­கப்­ப­டும் படத்தை இவர்­க­ளுக்கு அனுப்­பும் போது இவர்­க­ளது சாப்ட்­வேர் ஆர்ட்­டிஃ­பி­ஷி­யல் இன்­டெ­லி­ஜென்ஸ் மூல­மாக அந்த படத்தை ஆராய்ந்து நோயின் தீவி­ரத்தை கூறி­வி­டு­கி­றது. இந்த ஸ்டார்ட் அப்-­பில் உள்ள  தோல் நிபு­ணர்­கள் உங்­க­ளுக்கு நோயின் தீவி­ரத்தை அறிந்து உங்­க­ளுக்கு சரி­யான மருந்­து­களை வீட்­டிற்கு அனுப்­பு­கின்­ற­னர். தொடர்ந்த சிகிக்­சைக்­கும் வழி செய்­கின்­ற­னர்.

குயூர் ஸ்கின் என்ற ஸ்டார்ட் அப் – பின் இணை­ய­த­ளம் www.cureskin.com