மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி: நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2019 14:47

சென்னை,

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பார்முலா 1 கார் ரேஸ், மெக்கானிக், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித்

கோயமுத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் 45வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் 800 பேர் கலந்துகொள்கின்றனர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக அஜித் கலந்துகொண்டிருக்கிறார். 

நேற்று நடைபெற்ற போட்டியில் 5 சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தமிழக சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறியிருக்கிறார் அஜித் குமார்.