பாட்டிமார் சொன்ன கதைகள் – 227 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 02 ஆகஸ்ட் 2019


அகக்­கண்!

அறி­ஞர்­க­ளும், வீரர்­க­ளும் சாதுக்க ளும் சௌக­மாக வாழ்க்கை நடத்­துகி றார்­கள். ஜனங்­கள், திரு­டர்­கள் பய மில்­லா­மல், சத்­தி­யத்தை விர­த­மா­கக் கடைப்­பி­டித்­த­வர்­க­ளாய் ஒரு­வ­ருக்கொ ருவர் நேச­முள்­ள­வர்­க­ளாய், மேன்­மை­யுற்று இருக்­கி­றார்­கள். பொரு­ளி­லும் ஏழை யில்லை. அறி­வி­லும் ஏழை­யில்லை என்று அந்த ராஜ்­யத்தை பார்த்­த­வர்­க­ளெல்­லாம் ஆச்­ச­ரி­ய­ம­டைந்­தார்­கள். ஆனால் அந்த அஸ்­தி­னா­பு­ரத்­தி­லி­ருது பீஷ்­மர், தர்ம சக்­க­ரத்தை நாடெங்­கும் சுழன்று கொண்­டி­ருக்­கும்­படி செய்து வரு­கி­றார் என்று தெரிந்து கொண்­ட­தும், அவர்­கள் இந்த ராஜ்­யம் இப்­படி இருப்­ப­தில் ஆச்­ச­ரி­ய­மில்லை ‘ என்று தெளிந்­தார்க ளாம்.

பீஷ்­மர் விசித்­தி­ர­வீ­ரி­ய­னுக்கு மணம் செய்­வித்த மனை­வி­ய­ரில், அம்­பிகை என்­ப­வ­ளுக்­குத் திரு­தி­ராஷ்­டன் என்ற புதல்­வ­னும் இளைய மனை­வி­யான அம்­பா­லி­கைக்­குப் பாண்டு என்ற புதல்வ னும் பிறந்­தார்­கள். திரு­தி­ராஷ்ட்­ரன், சிறந்த பராக்­கி­ரம் உள்­ள­வன். புத்­திக்­கும் குறை­வில்லை. ஆனால் பிற­விக் குரு­டன். பாண்­டும் நிறம் மாறி வெண்­மை­யாக இருந்­த­தால், அந்­தப் பெயர் பெற்­றான். அம்­பி­கைக்­குப் பிரி­ய­மான வேலைக்­காரி ஒருத்­தி­யுண்டு. அவ­ளு­டைய புதல்­வ­னான விது­ரனை திரு­தி­ராஷ்­ட­ர­னும், பாண்­டு­வும் தங்­கள் சகோ­த­ர­னா­கவே மதித்­தார்­கள். அம்­பி­கை­யும், அம்­பா­லி­கை­யும் கூட விது­ரனை தங்­கள் குழந்­தை­யா­கவே மதித்து நடத்தி வந்­தார்­கள்.

பீஷ்­ம­ரும், திரு­தி­ராஷ்ட்­ர­னை­யும், பாண்­டு­வை­யும், விது­ர­னை­யும் பிறந்­தது முதல் தமது புதல்­வர்க ளாகவே பரி­பா­லித்து வந்­தார். விது­ரன் இளமை தொடங்கி, எவ­ரும் தர்­மாத்மா என்று புக­ழும்­படி விளங்­கி­னான்.

மூன்று புதல்­வர்­க­ளும் வேத சாஸ்தி ரங்­க­ளில் பயிற்சி பெற்­றது போல், தனுர் வேதத்­தி­லும் தேர்ச்சி பெற்­றார்­கள். இராஜ நீதி சாஸ்­தி­ரங்­க­ளி­லும் கரை கண்­டார்­கள். வீர புத்­தி­ரர்­க­ளில் சிறந்­த­வர்­கள் இந்த புத்­தி­ரர்­க­ளே ­யென்று, வீர புத்­தி­ரர்­களை பெறெ­டுத்த தாய்­மார்­க­ளில் சிறந்­த­வர்­கள் காசி­ரா­ஜன் பெண்­க­ளே­யென்­றும், தர்ம் நிஷ்­டர்­க­ளில் சிறந்­த­வர் பீஷ்­ம­ரே­யென்­றும், நக­ரங்­க­ளில் சிறந்­தது அஸ்­தினா நக ராந்­தா­னென்­றும் உலக மெங்­கும் ஒரே பிரஸ்­தா­ப­மா­யி­ருந்­தது.

யெள­வன பிரா­யத்­தி­லேயே ஷய ரோகத்­தால் இறந்து போன விசித்­திர வீரி­யனை திரு­தி­ராஷ்ட ரனும், பாண்­டு­வும் மறந்து, பீஷ்­ம­ரையே தங்­க­ளுக்கு தந்தை யென்று எண்ணி னார்­கள். விது­ர­னும் அப்­ப­டியே எண்ணி னான். இவர்­கள் மூவ­ரும் உயி­ரோடி ருக்­கும் தாய்­மார்க ளைக் கூட மறந்து பீஷ்­ம­ரையே தாயா­க­வும் கரு­துவ தென்­றால், எவ்­வ­ளவு பேரன் போடு பீஷ்­மர் இவர்­களை வளர்த்தி ருக்க வேண்­டும். இப்­படி தந்­தை­யும் தாயு­மாக விளங்­கிய பீஷ்­மர், அவர்­க­ளுக்கு முக்­கிய மான ஆசி­ரி­ய­ரா­க­வும் அமைந்து, எது  நன்­மையோ அதை ஆராய்ந்து வந்­தார்.பீஷ்­மர், காந்­தார தேசத்து அர­சன் மக­ளான காந்­தா­ரியை திரு­தி­ராஷ்ட்ர னுக்கு மணம் செய்­வித்­தார். கண­வ­னுக்கு கண்­ணில்லை என்று தெரிந்து கொண்­ட­தும் அந்த பதி­வி­ரதை அகக்­கண்ணே தனக்­கும் போது­மென்று நிச்­ச­யித்து,  ஒரு வஸ்­தி­ரத்தை பல மடிப்­பாக மடித்­துத் தன் கண்­கள் இரண்­டை­யும் கட்­டிக் கொண்டா ளாம். ` என் புரு­ஷ­னுக்கு அறிவே கண்’  என்று எண்­ணி­யெண்ணி உள்­ளத்தை பண்­ப­டுத்­திக் கொண்­ட­தால், அவள் அவனை  ஒரு போதும் இகழ்ந்­த­தில்லை. இத்­த­கைய பதி­வி­ரதா தர்­மம் அதி­சமா யிருந்­தது. பிறகு பீஷ்­மர், குந்தி, மாத்ரி, என்ற பெண்­ம­ணி­கள் இரு­வ­ரை­யும் பாண்­டு­வுக்கு மணம் செய்­வித்­தார். அப்­பால் விது­ர­னுக்­கும் விவா­கம் நடந்­தது.

மூத்­த­வ­னான திரு­த­ராஷ்ட்­ரன் குருட னாயி­ருந்­த­தால், பாண்­டுவே ராஜா­வாயி ருந்து ராஜ்ய காரி­யங்­க­ளைக் கவ­னித்­துக் கொண்­டி­ருந்­தான். அவன் திக்­வி­ஜ­யம் செய்து பகை­வர்­களை வென்­ற­பின், தன் மனை­வி­யர் இரு­வ­ரோ­டும் காடு பார்க்க வேண்­டு­மென்று போய், இம­ய­ம­லை­யின் தென்­பக்­கத்­தில் பெரு மரங்­கள் அடர்ந்த காட்­டுப் பிர­தே­சங்­க­ளி­லும் குன்­று­க­ளின் சிக­ரங்­க­ளி­லும் சஞ்­ச­ரித்­துக் கொண்டி ருந்­தான். அப்­ப­டித் திரிந்த பொழுது போக்­கு­வ­தும், வேட்­டை­யா­டு­வ­தும், அரண்­மனை வாசத்­தைக் காட்­டி­லும் அவ­னுக்கு பிரி­ய­மா­யி­ருந்­தன. வேட்­டை­யா­டிக் களைத்த பின், பாறை யிலும், புல்­லுத் தரை­க­ளி­லும் படுத்து றங்­கு­வது , அரண்­ம­னை­யின் சுக­மான படுக்­கை­க­ளில் படுத்­து­றங்­கு­வதை விட, இனி­மை­யா­கத் தோன்­றி­யது. நாள­டை­வில் அவன் இராஜ்ய காரி யங்­களை கூட மறக்­கத் தொடங்கி விட்­டான்.

இப்­ப­டி­யி­ருக்க ஒரு நாள், ஒரு பெருங் காட்­டிலே மான் கூட்­ட­மொன்­றைக் கண்­டான். அந்த கூட்­டத்­திலே கொஞ்­சம் விலகி ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் இன்­புற்று விளை­யா­டிக் கொண்டி ருந்­தன. இரண்டு பெண் யானை­க­ளுக்கு நடு­வில்  வரும் ஐரா­வத யானை­யைப் போல் குந்­தி­யோ­டும், மாத்­ரி­யோ­டும் வந்த அர­சன், அந்த ஆண் மானை­யும், பெண் மானை­யும், மனை­வி­மா­ருக்­குச் சுட்­டிக் காட்­டி­னான். ` இனி இதோ பாருங்­கள். இந்த தங்­கப் பிடி­யோ­டும் அழ­கான சிறகு களோ­டும் கூடிய அஸ்­தி­ரங்­களை’ என்று சொல்லி அவற்­றை­யும் காட்­டி­னான். உடன் ஐந்து கூர்­மை­யான அம்­பு­கள் பறந்­தன. ஆண் மான் அடி­பட்டு விழுந்­தது. ஆனால் அது என்ன விப­ரீ­தம் ? மனி­தக் குரல் போலி­ருக்­கி­றதே ! யார் இந்த இளை ஞரான ரிஷி? தரை­யில் விழுந்து துடிக்­கி­றாரே?

ஆம்! ஒர் அழ­கான ரிஷி புத்­தி­ரர்­தாம் அநி­யா­ய­மாய் கொலை செய்­யப்­பட்­டார். தவத்­தின் மகி­மை­யால் அவ­ரும் அவரு டைய பத்­தி­னி­யும், மான் வடி­வத்­தோடு விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தார்­க­ளாம். இப்­போது பாண்டு நடுங்­கிப் போனான். எனி­னும், ` மானே வேட்­டை­யா­டு­வது அர­சர்­க­ளுக்கு தர்­மம் தானே ? என்­றெல்­லாம் சொல்­லிப் பார்த்­தான்.  ` நீர் ரிஷி அந்த வடி­வத்­திலே எனக்கு எப்­ப­டித் தெரி­யும் ‘ என்று வாதித்­தான். ஆனால் முனிவ  அந்த ` தர்­மத்­தை­யும்’ வாதத்­தை­யும் ஒப்­புக்­கொள்­ள­வில்லை. மான்­க­ளு­டைய வாழ்வை கெடுப்­ப­தற்­குத்­தான் என்ன பாத்­தி­யதை இருக்­கி­றது மனி­த­னுக்கு ? ` அர­சனே, உன்­னைப் போல் மனை­வி­யோடு ஆனந்­த­மா­யி­ருந்த மானைத்­தான் ஏன் இம்­ஸித்­துக் கொல்ல வேணும்? என்று கோபித்து ` நீயும்  மனை­வி­யோடு சுக­ம­டைய முய­லும்­போது என்­னைப் போல் உயிர் வாழ்வை இழுந்த விடு­வாய் ‘ என்று சாபம் கொடுத்­தார்.

 (தொட­ரும்)