டீன் ஏஜ் காதல் வசப்படும் பருவம்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2019

‘டீன் ஏஜ்’ பெண்­கள் காதல் வசப்­ப­டு­வது அதி­க­ரித்து வரு­கி­றது. உங்­கள் மகள் காதல்­வ­சப்­பட என்ன கார­ணம் என்­ப­தை­யும், மகள் காதல்­வ­சப்­பட்­டி­ருந்­தால் அடுத்து என்ன செய்­ய­வேண்­டும் என்­ப­தை­யும் தெரிந்­து­கொள்­ள­வோம். டீனே­ஏஜ் பரு­வ­மும் காதல் வயப்­ப­டும்.

நீங்­கள் ஒரு தாய் என்­றால் அன்பு, அனு­ச­ரணை, பாது­காப்பு அனைத்­தை­யும் உணர்­வு­ரீ­தி­யாக சிறு­வ­ய­தில் இருந்தே உங்­கள் மக­ளுக்கு கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். மக­ளும், உங்­கள்  அன்­பிற்­குள் சிக்­குண்டு கிடப்­பாள். குழந்தை வளர்ந்து பெரி­ய­வள் ஆகி­விட்­டா­லும் அன்­பும், அனு­ச­ர­ணை­யும் பரு­வத்­திற்கு ஏற்­ற­படி அவ­ளுக்கு கிடைத்­துக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். ஆனால் பெரும்­பா­லும் கிடைப்­ப­தில்லை.

அன்பு கிடைக்­கா­த­போது அவள் அதனை வெளியே தேட தொடங்­கி­வி­டு­கி­றாள். அந்த தேட­லில் உரு­வா­கும் நட்பே, எதிர்­பால் ஈர்ப்பு மூலம் காத­லாக வலுப்­பெ­று­கி­றது. சிறு­வ­ய­தில் கிடைத்­தது போன்ற அன்­பும், பாச­மும் யாருக்­கெல்­லாம் அவர்­க­ளது வீட்­டிலே டீன் ­ஏ­ஜி­லும் கிடைக்­கி­றதோ அவர்­க­ளெல்­லாம் பெரும்­பா­லும் காதல் வலை­யில் விழு­வ­தில்லை.

பரு­வ­ம­டைந்து விட்­ட­தும் ஒவ்­வொரு பெண்­ணும் ‘தானும் பெரிய மனு­ஷி­தான்’ என்று தனித்­து­வம் பெற விரும்­பு­கி­றாள். உடல்­ரீ­தி­யா­க­வும் அந்த தனித்­து­வத்தை தக்­க­வைக்க விரும்­பு­வாள். அப்­போது தன் மக­ளி­டம் என்ன மாற்­றங்­கள் ஏற்­ப­டு­கி­றதோ, அதற்கு தக்­க­படி பெற்­றோர் மாறி அவளை நேசிக்க வேண்­டும். நேசித்­தால், அவர்­க­ளது உணர்­வுக்கு தகுந்த மதிப்பு உள்­ளேயே (வீட்­டி­லேயே) கிடைக்­கும். வெளியே தேட­மாட்­டார்­கள். எளி­தாக காதல் வலை­யில் விழ­மாட்­டார்­கள். எல்­லா­வற்­றை­யும் தாயா­ரி­டம் மனம்­தி­றந்து பேச­வும் தயா­ராக இருப்­பார்­கள்.

மகள் காத­லில் விழுந்­தி­ருப்­ப­தாக தெரிந்­து­விட்­டால் உடனே நொறுங்­கிப்­போ­கா­தீர்­கள். அவளை குற்­ற­வா­ளி­யாக்கி, தனி­மைப்­ப­டுத்தி தண்­டிக்க முயற்­சிக்­கா­தீர்­கள். ‘சரி.. இந்த வய­தில் எல்­லோ­ருக்­கும் வரு­வ­து­தான். உனக்­கும் வந்­தி­ருக்­கி­றது’ என்று முத­லில் அமை­திப்­ப­டுத்தி, உட்­கா­ர­வைத்து பொறு­மை­யாக பேசுங்­கள். நிதா­னத்­தை­யும், நம்­பிக்­கை­யை­யும் கொடுங்­கள்.

‘உனது அம்­மா­வா­கிய நான் உன்னை நம்­பு­கி­றேன். உன்னை புரிந்­து­கொள்­கி­றேன். உனக்கு எதி­ராக எந்த முடி­வும் எடுக்­க­மாட்­டேன். அதே நேரத்­தில் நான் சில உண்­மை­களை உனக்கு புரி­ய­வைக்க வேண்­டும். அதை நீ அமை­தி­யாக கவனி’ என்று கூறி, அவ­ளுக்கு ஏற்­பட்­டி­ருப்­பது காதல் அல்ல, இனக்­க­வர்ச்சி என்­பதை உணர்த்­துங்­கள். படிக்­கிற பரு­வத்­தில் படித்­தால்­தான், சரி­யான வேலை­யில் சேர்ந்து, காதலை உன்­னால் கொண்­டாட முடி­யும். இல்­லா­விட்­டால் திண்­டாட வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை எடுத்­து­ரை­யுங்­கள். ஆத்­தி­ரம், அவ­ச­ரம் இல்­லா­மல் பக்­கு­வ­மாக இதை எடுத்­து­ரைக்­க­வேண்­டும்.

மக­ளின் காதல் உங்­கள் கவ­னத்­திற்கு வந்­த­தும், எடுத்த யெடுப்­பிலே அவ­ளது காதலை எதிர்த்­தால் அவள் உங்­களை எதி­ரி­யாக நினைப்­பாள். அத­னால் வீட்­டை­விட்டு வெளி­யேற முயற்­சிக்­க­லாம். அத­னால் அமை­திப்­ப­டுத்தி சிந்­திக்­க­வைத்து, ‘உனக்கு எதி­ரான முடி­வு­களை எடுக்­கப்­போ­வ­தில்லை’ என்று நம்­பிக்கை கொடுங்­கள். காதலை பற்றி யோசித்து முடி­வெ­டுக்க தேவை­யான கால இடை­வெ­ளி­யை­யும் கொடுங்­கள். கால இடை­வெ­ளி­யில் பலர் உண்­மையை உணர்ந்து காதலை கைவிட்­டி­ருக்­கி­றார்­கள். காத­லர் தவ­றா­ன­வர் என்­பதை புரிந்­து­கொண்டு, பெற்­றோர் பக்­கம் சாய்ந்­தி­ருக்­கி­றார்­கள். அத­னால் நிஜத்தை புரி­ய­வைக்க எல்லா மாதி­ரி­யான முயற்­சி­க­ளை­யும் எடுங்­கள்.

காதல் வேறு, காமம் வேறு என்­பதை மக­ளுக்கு புரிய வையுங்­கள். காதல் என்ற பெய­ரில் காமத்­தில் விழுந்­து­வி­டக் கூடாது என்­ப­தில் உறு­தி­காட்­டச்­சொல்­லுங்­கள். ‘அவன் விரல் நுனி­கூட என் மீது பட­வில்லை’ என்­பது போல் பொய் சொல்ல இப்­போது எந்த காத­லர்­க­ளும் தயா­ரில்லை. காதல் இப்­போது காமம் கலந்த கலப்­ப­ட­மாக தான் இருக்­கி­றது.

அவர்­களை சுற்றி நடக்­கும் சம்­ப­வங்­க­ளும், காட்­சி­க­ளும் அதற்கு கார­ண­மாக இருக்­கின்­றன. காத­லில் காமம் கலந்த பின்பு கண்­ட­றிந்து கஷ்­டப்­ப­டு­வ­தை­விட அந்த நிலைக்கு பிள்­ளை­கள் செல்­லாத அள­வுக்கு விழிப்­பு­ணர்வை ஊட்­டு­வ­து­தான் தாயின் பணி­யாக இருக்­க­வேண்­டும். மகள் காத­லில் விழுந்­து­விட்­டால் இலை­ம­றைவு காயாக அல்ல, அப்­பட்­ட­மா­கவே எல்லா உண்­மை­க­ளை­யும் பேசுங்­கள்.

உங்­கள் மகள் ஆறாம் வகுப்­புக்கு செல்­லும்­போதே அவ­ளுக்கு உடல்­ரீ­தி­யான வளர்ச்­சி­யை­யும், மாற்­றங்­க­ளை­யும் எடுத்­துக்­கூறி புரி­ய­வை­யுங்­கள். 15 வய­தில் மனந்­தி­றந்து தாய், மக­ளி­டம் எல்லா விஷ­யங்­க­ளை­யும் பேச­வேண்­டும். இன்­றைய காதல் பற்­றி­யும், அதில் செக்ஸ் கலப்­ப­தால் ஏற்­ப­டும் விப­ரீ­தங்­கள் பற்­றி­யும் பள்­ளிப்­ப­ரு­வம் முடி­யும் முன்பே புரி­ய­வைத்­தி­ட­வேண்­டும். சுற்றி நடக்­கும் சம்­ப­வங்­களை உதா­ர­ண­மாக வைத்து பல்­வேறு உட­லி­யல் சார்ந்த உண்­மை­களை உணர்த்­தி­ட­வேண்­டும். பெண்­க­ளின் உடல் புனி­த­மா­னது. அதில் ஆளுமை செலுத்த யாருக்­கும் அதி­கா­ரம் இல்லை என்­பது சொல்­லிக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்­டும்.

டீன் ஏஜ் காதல் கவ­லைக்­கும், கல­வ­ரத்­திற்­கும் உரி­ய­தல்ல! கவ­னிக்­கத்­த­குந்­தது. சரி­யான முறை­யில் அணு­கி­னால் அதில் இருந்து உங்­கள் மகளை எளி­தாக மீட்­டுக்­கொண்­டு­வந்து விட­லாம்.