வேகப்புயல் ஹீமா தாஸ்! – சுமதி

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2019

அஸ்­ஸாம் மாநி­லத்­தைச் சேர்ந்த ஹீமா தாஸ், தனது ஒரு மாத சம்­ப­ளத்­தின் பாதியை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளார்.ஜூலை 2-ம் தேதி தொடங்­கிய இந்­திய வேகப்­பு­யல் ஹீமா தாஸின் பதக்க வேட்டை நீண்­டு­கொண்டே செல்­கி­றது. 200 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் பங்­கேற்ற அவர், 15 நாள்­க­ளுக்­குள், ஐந்து தங்­கப்­ப­தக்­கங்­கள் வென்று அசத்­தி­யுள்­ளார். 2020 டோக்­கியோ ஒலிம்­பிக் தொட­ருக்­கான தகு­திச்­சுற்­று­கள் தொடங்­கி­யுள்ள நிலை­யில், ஹீமா தாஸின் இந்த

அதி­ரடி பார்ம் அவரை ஒலிம்­பிக் தேர்ச்­சிக்­குப் பக்­கத்­தில் அழைத்­துச் சென்­றுள்­ளது.

இந்த ஆண்­டின் முதல் சர்­வ­தேச தட­கள போட்­டி­யில் பங்­கேற்ற ஹீமா தாஸ், 200 மீட்­டர் ஓட்­டத்­தில் 23.65 விநா­டி­க­ளில் பந்­தய தூரத்­தைக் கடந்து தங்­கப் பதக்­கம் வென்­றார். முதல் போட்­டி­யைத் தொடர்ந்து அடுத்­த­டுத்து நடந்த  போட்­டி­க­ளி­லும் தங்­கம் வென்­றுள்ள அவர், ஒவ்­வொரு முறை­யும் நேர அளவை குறைத்­துக்­கொண்டு ஓடி­னார். கடை­சி­யாக செக் குடி­ய­ர­சில் நடை­பெற்ற தாபோர் தட­க­ளத்­தில் பங்­கேற்ற அவர், 23.25 விநா­டி­க­ளில் பந்­தய தூரத்­தைக் கடந்து அசத்­தி­னார்.

200 மீ ஓட்­டத்­தில் ஹீமா தாஸ் வென்ற நான்கு தங்­கப் பதக்­கங்­கள், ஜூலை 2 ம் தேதி 23.65 விநா­டி­கள் - போலந்து போஸ்­னான் தட­க­ளம், ஜூலை 7ம் தேதி - 23.97 விநா­டி­கள் - போலந்து புத்னோ தட­க­ளம், ஜூலை 13ம் தேதி -23.43 விநா­டி­கள் -செக் குடி­ய­ரசு கிளாண்டோ தட­க­ளம், ஜூலை 17ம் தேதி -23.25 விநா­டி­கள்- தாபோர் தட­க­ளம். 400 மீட்­டர் ஓட்­டம், ஜூலை 20ம் தேதி -52.09 விநா­டி­கள் - நோவ் மெஸ்டோ நாட் மெட்­டுஜி கிராண்டு.

2020 டோக்­கியோ ஒலிம்­பிக் போட்­டி­க­ளுக்­கான தகு­திச்­சுற்று போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. 200 மீட்­டர், 400 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் விளை­யாடி வரும் ஹீமா தாஸ், ஒலிம்­பிக் குவா­லி­பை­ய­ரில் தேர்ச்சி பெற தேவை­யான 'ரெக்­கார்டை' நெருங்­கி­யுள்­ளார். ஒலிம்­பிக் போட்­டிக்­குத் தேர்ச்சி பெற, 200 மீட்­டர் ஓட்­டத்தை 23.02 விநா­டி­க­ளி­லும், 400 மீட்­டர் ஓட்­டத்தை 51.80 விநா­டி­க­ளி­லும் கடக்க வேண்­டும். 200 மீட்­டர் ஓட்­டத்­தில் ஹீமா தாஸின் சிறந்த ரெக்­கார்டு டைமிங் - 23.10. கடந்த 2018-ம் ஆண்டு இந்த டைமிங்கை அவர் எட்­டி­னார்.

இந்த ஆண்டு பங்­கேற்ற போட்­டி­க­ளில் 23.25 எட்­டி­யுள்ள அவர், ஒலிம்­பிக் போட்­டிக்­கான தேர்ச்­சிக்கு முன், குறைந்த நேரத்­தில் 200 மீட்­டர் தூரத்தை கடப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

200 மீட்­ட­ரில் கலக்கி வரும் ஹீமா தாஸ், 400 மீட்­டர் ஓட்­டத்­தி­லும் ஆரம்­பத்­தில் முத்­திரை பதித்­தி­ருந்­தார். அஸ்­ஸாம் மாநி­லத்­தைச் சேர்ந்த அவர், 2018 ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் 400 மீட்­டர் ஓட்­டத்­தில் வெள்ளி வென்­ற­போது இந்­திய தட­க­ளத்­தில் பரிச்­ச­ய­மான முக­மா­னார். ஹி20 உலக தட­கள சாம்­பி­யன்­ஷிப் தொட­ரில், 400 மீட்­டர் ஓட்­டத்­தில் பதக்­கம் வென்ற முதல் இந்­தி­யர் என்ற பெரு­மை­யும் பெற்­றார். இரண்டு பிரி­வு­க­ளி­லும் பதக்­கங்­க­ளைக் குவித்து வரும் ஹீமா, இந்­தி­யா­வின் ஒலிம்­பிக் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக வளர்ந்து வரு­கி­றார்.

அஸ்­ஸாம் மாநி­லத்­தில் இருந்து சர்­வ­தேச ஓட்­டப்­பந்­தய போட்­டி­க­ளில் தங்­கம் வென்ற முதல் பெண் என்ற பெரு­மை­யை­யும் ஹீமா தாஸு­டை­யது. கடந்த 15 நாள்­க­ளாக தங்­கப்­ப­தக்க மழை பொழிந்து வரும் ஹீமா­வுக்கு அந்த வெற்­றி­க­ளைக் கொண்­டாட மன­மில்லை. கார­ணம், 15 நாள்­க­ளாக அஸ்­ஸா­மில் கன­ம­ழை­யால் வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. அஸ்­ஸா­மில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் வெள்­ளப்­பா­திப்பு ஏற்­பட்­டுள்­ள­தால், லட்­சக்­க­ணக்­கான மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அஸ்­ஸாம் மக்­க­ளுக்கு உதவ முன்­வந்­துள்ள ஹீமா, தனது ஒரு மாத சம்­ப­ளத்­தில் பாதியை அஸ்­ஸாம் வெள்ள நிவா­ர­ணத்­துக்­காக அளித்­துள்­ளார். இந்த இக்­கட்­டான நேரத்­தில், வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட அஸ்­ஸாம் மக்­க­ளுக்கு உத­வு­மாறு அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.