பிசினஸ் : தொழில் முனைவோர் கற்றுக்கொள்ள வேண்டியது! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2019

100 ஆண்டு பாரம்­ப­ரி­யம் கொண்ட ரெஸ்­டா­ரண்ட்­கள் மற்­றும் சங்­கி­லித்­தொ­டர் உண­வ­கங்­கள் இந்­தி­யா­வில் அதி­கம் இல்லை. இத்­த­கைய நிறு­வ­னங்­க­ளில் ஒன்­றான, எம்­டி­ஆர் என அழைக்­கப்­ப­டும் ’மாவல்லி டிபன் ரூம்ஸ்’ அரிய உதா­ரா­ண­மா­கும். சுதந்­தி­ரத்­திற்கு முந்­தைய இந்­தி­யா­வில் பெங்­க­ளூ­ரு­வில் சிறிய ரெஸ்­டா­ரண்­டாக துவக்­கப்­பட்ட எம்­டி­ஆர் இன்று நாட்­டில் நன்­க­றி­யப்­பட்ட பிராண்­டாக இருக்­கி­றது. இதன் ரெஸ்­டா­ரண்ட் பெங்­க­ளூ­ரு­வின் அடை­யா­ளச்­சின்­னங்­க­ளில் ஒன்­றாக விளங்­கும் நிலை­யில், அதன் உணவு பதப்­ப­டுத்­தும் பிரிவு நாடு முழு­வ­தும் உள்ள நுகர்­வோ­ருக்கு சேவை அளிக்­கி­றது.நாம் இன்று ஸ்டார்ட் அப் யுகத்­தில் வசித்­தா­லும், காலத்தை வென்று நிற்­கும் எம்­டி­ஆர் போன்ற நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து தொழில்­மு­னை­வோர்­கள் கற்­றுக்­கொள்ள நிறைய இருக்­கின்­றன. இதன் வாடிக்­கை­யா­ளர்­களை மீண்­டும் மீண்­டும் வரத்­தூண்­டு­பவை எவை? இதன் மீதான நம்­பிக்கை மற்­றும் விசு­வா­சத்­திற்­கான அடிப்­படை என்ன?எம்­டி­ஆர் வளர்ச்­சி­யில் நிறு­வன சி.இ.ஓ சஞ்­சய் சர்மா முக்­கிய பங்­காற்­றி­யி­ருக்­கி­றார்.

1. சரி­யான நேரத்­தில் மாற்­றம்

எம்­டி­ஆர் ரெஸ்­டா­ரண்ட்­கள், அவ­சர நிலை காலத்­தில், விலைக்­கு­றைப்­பால் நஷ்­டம் ஈட்­டி­ய­தால், 1976 ல் மூடப்­பட்­டன. அதன் ஏழைத்­தொ­ழி­லா­ளர்­கள் நிலையை மன­தில் கொண்டு எம்­டி­ஆர் நிறு­வ­னம், தனது பிராண்ட் பெய­ரில் பெங்­க­ளூரு மளி­கைக்­க­டை­க­ளுக்கு பேக் செய்த பொருட்­களை விற்­பனை செய்­யத்­து­வங்­கி­யது. அவ­சர நிலைக்­குப்­பி­றகு ரெஸ்­டா­ரண்ட்­கள் மீண்­டும் செயல்­ப­டத்­து­வங்­கிய போது, எம்­டி­ஆர் தனது பொருட்­களை மேலும் விரி­வாக்கி விற்­ப­னையை விரி­வாக்­கி­யது. இதன் கார­ண­மாக பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு தொழில் ரெஸ்­டா­ரண்ட் தொழிலை விட பெரி­தாக வளர்ந்­தது.

2. கைய­கப்­ப­டுத்­தல்

வளர்ச்­சியை மன­தில் கொண்டு, 2000 மற்­றும் 2003 ல் எம்­டி­ஆ­ருக்கு தனி­யார் சம­பங்கு நிதி தேவை­பப்ட்­டது. வர்த்­த­கம் வளர்ந்­த­தும் முத­லீட்­டா­ளர்­கள் வெளி­யே­ற­லாம். 2007 ல் நார்வே நிறு­வ­னம் ஆர்க்லா 100 மில்­லி­யன் டால­ருக்கு எம்­டி­ஆர் நிறு­வ­னத்தை வாங்­கி­யது. இந்த கைய­கப்­ப­டுத்­தல் அப்­போது பெரி­தாக பேசப்ப்­பட்­டது. அமைப்பு நோக்­கி­லான மாற்­றங்­கள் வந்­தன. “ஒரு குறிப்­பிட்ட அளவை அடைந்­தது, ஒரு­வர் அல்­லது ஒரு சிலர் நிறு­வ­னத்தை நடத்த முடி­யாது. வளர்ச்சி பெரு­கும் போது, அதிக நபர்­களை நிய­மித்து முடிவு எடுப்­பதை பர­வ­லாக்க வேண்­டும். 2009 ல் பொறுப்­பேற்ற போது நிறு­வ­னத்தை மாற்றி அமைப்­பதே என் வேலை­யாக இருந்­தது,” என்­கி­றார் சஞ்­சய்.

3. பெரும் மாற்­றம் 101

இதே துறை­யில் உள்ள எவ­ரெஸ்ட், ஆச்சி, சக்தி மற்­றும் ஈஸ்­டர்ன் போன்ற நிறு­வ­னங்­கள் ஒற்றை பிரி­வில் செயல்­ப­டு­கின்­றன. எம்­டி­ஆர் பல பிரிவு நிறு­வ­ன­மாக இருப்­ப­தால் அதை நிர்­வ­கிப்­பது சிக்­க­லா­ன­தா­கி­றது. எம்­டி­ஆர் இன்று காலை உணவு முதல் இரவு டெஸர்ட் வரை லட்­சக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தோடு, ஒவ்­வொரு தயா­ரிப்­பும் நிறு­வ­னம் அளிக்க விரும்­பும் தரத்­து­டன் இருக்­கி­றது. உண­வுக்கு மைய­மாக இல்­லாத ஐஸ்­கீ­ரிம் மற்­றும் அப்­ப­ளம் பிரி­வு­களை நிறுத்­தி­விட்டு மற்ற பிரி­வு­க­ளில் கவ­னம் செலுத்­து­கி­றது.

4. வாடிக்­கை­யா­ள­ரு­டன் தொடர்பு

வாடிக்­கை­யா­ள­ரு­ட­னான ஒரு பிராண்­டின் உறவு தொடர்ந்து பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டும். முந்­தைய தலை­முறை வாடிக்­கை­யா­ள­ரு­டன் தொடர்பு கொள்ள பயன்­பட்ட உத்தி இப்­போது பயன் தராது. அதற்­கேற்ப எம்­டி­ஆர் பெரிய அள­வில் விளம்­ப­ரத்­தில் முத­லீடு செய்து, பேக்­கே­ஜிங்­கை­யும் மாற்றி அமைத்­தது. கையக்­கப்­ப­டுத்­த­லுக்­குப்­பி­றகு 3 முதல் 4 சத­வீத செலவு விளம்­ப­ரத்­திற்­காக அமைந்­தது. 2009 ல் சஞ்­சய் பொறுப்­பேற்ற பிறகு நிறு­வன செயல்­பாட்டை மாற்­றி­னார். 2011ல் நிறு­வ­னம் விளம்­ப­ரத்­திற்­காக 11 முதல் 16 சத­வீ­தம் செல­வி­டத்­து­வங்­கி­யது.

5. தெளி­வான கவ­னம்

1924 ல் எம்­டி­ஆர் துவங்­கிய போது, அதன் கவ­னம் கர்­நா­டக மக்­க­ளின் சுவை­யில் தான் இருந்­தது. அதன் வர்த்­தக நோக்­கம், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பாரம்­ப­ரிய இந்­திய சுவையை அளிப்­ப­தா­கவே இருந்­தது. மேலும் உணவு சுவைக்கு பொருத்­த­மா­க­வும் இருக்க முற்­பட்­டது. இதற்­காக காலத்­திற்கு ஏற்ப மாறி வரு­கி­றது. கூடு­தல் திற­னுக்­காக, உற்­பத்­தி­யில் ரூ.250 கோடி முத­லீடு செய்­யப்­பட்­டது. உணவு தர கட்­டுப்­பா­டு­க­ளி­டம் உயர்த்­தப்­பட்­டன. பெரும்­பா­லான இந்­திய நிறு­வ­னங்­கள் இதில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தில்லை.

6. இந்­திய தன்மை

பல இந்­திய உணவு நிறு­வ­னங்­கள் மேற்­கத்­திய மற்­றும் சீன உண­வு­களை மைய­மாக கொண்டு அமைந்­துள்­ளன. உணவு பதப்­ப­டுத்­தல் துறை­யில் பாஸ்டா மற்­றும் நூடுல் பற்றி தான் அதி­கம் பேசு­கின்­ற­னர். காலை உணவு பிரி­வில் கெல்­லாக்ஸ் மற்­றும் ஓட்ஸ் இருக்­கின்­ற­னர். ஆனால் எம்­டி­ஆர் இட்லி, உப்­புமா போன்ற இந்­திய உண­வு­க­ளில் கவ­னம் செலுத்­து­கி­றது. வட இந்­திய உணவு பிரி­வில் ஹால்­டி­ராம்ஸ் பிர­ப­ல­மாக இருந்­தா­லும் தென்­னிந்­திய உண­வு­க­ளில் அதிக பிராண்ட்­கள் இல்லை. எம்­டி­ஆர் இந்த பிரி­வில் சிறந்து விளங்­கு­கி­றது. நேந்­தி­ராங்­காய் வறு­வல் முதல் கான்­பி­ளேக்ஸ் வரை வழங்­கு­கி­றது.

7. அதி­கார பர­வ­லாக்­கம்

ஒரு தொழில்­மு­னை­வோர் நிறு­வ­னத்தை நடத்­தும் போது அவரே எல்­லா­வி­த­மான முடி­வு­க­ளை­யும் மேற்­கொள்­வார். ஆனால் வளர்ச்­சிக்கு ஏற்ப எம்­டி­ஆர் முடிவு எடுப்­பதை பர­வ­லாக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. பலரை முடி­வெ­டுக்க ஊக்­கு­விப்­ப­தோடு, பணி­யா­ளர்­க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கி­றது.

“அணு­கு­முறை, மன­நிலை மற்­றும் பழக்க வழக்­கங்­கள் தான் வெற்­றிக்கு தேவை. இன்று எங்­க­ளி­டம் 70 சத­வீத தக்­க­வைக்­கும் தன்மை இருக்­கி­றது. ஒவ்­வொரு ஊழி­யர்­க­ளுக்­கும் ஆண்­டு­தோ­றும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு 10 நாள் பயிற்சி பெறு­கின்­ற­னர்,’’ என்­கி­றார் சஞ்­சய்.

8. வாடிக்­கை­யா­ளர் திருப்தி

இன்­றைய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நேரம் மட்­டும் தான் குறை­வாக இருக்­கி­றது. மெட்ரோ நக­ரங்­க­ளில் பணி­பு­ரி­ப­வர்­கள் பெரும்­பா­லும் அலு­வ­ல­கம் செல்­லும் வழி­யில் காலை உணவை உட்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. இதை தான் எம்­டி­ஆர் வாய்ப்­பாக கரு­து­கி­றது. “தங்­கள் தேவைக்கு ஏற்ப மாறா­விட்­டால் இக்­கால வாடிக்­கை­யா­ளர்­கள் இந்­திய உணவு இல்­லா­மல் இருக்­க­வும் தயா­ராக உள்­ள­னர். எனவே சுவை­யான இந்­திய உணவை ஏற்ற முறை­யில் வழங்­கு­வ­தற்­காக எங்­கள் தயா­ரிப்­பு­களை மாற்றி அமைத்­தி­ருக்­கி­றோம்,” என்­கி­றார் சஞ்­சய். இரு­வ­ருக்­கான உணவை 20 நிமி­டத்­தில் தயார் செய்­து­வி­ட­லாம். காலை உணவை 3 நிமி­டத்­தில் தயா­ரித்­து­வி­ட­லாம். ஒரு பேக்­கில் இனிப்­பு­களை தயார் செய்­ய­லாம்.

9. உணவு சிந்­தனை

ஆழ­மான ஆய்வு மூலம் நம்­பிக்­கையை உரு­வாக்­க­லாம். எம்­டி­ஆர் சமை­யல் கலை­ஞர்­கள் வாடிக்­கை­யா­ளர்­கள் இல்­லங்­க­ளுக்­குச் சென்று அவர்­க­ளு­டன் சமைத்து அவர்­கள் தேவை­களை அறிந்து கொள்­கின்­ற­னர்.

“எங்­க­ளுக்கு 100 வருட பாரம்­ப­ரி­யம் இருக்­கி­றது. உணவை அறிந்­த­வர்­க­ளாக அறி­யப்­ப­டு­கி­றோம். ஆனால் இந்த பெரு­மை­யில் திளைத்­தி­ருக்க விரும்­ப­வில்லை. ஐந்து அல்­லது ஆறு சமை­யல் கலை­ஞர்­கள் உணவு பொருட்­களை உரு­வாக்­கு­வ­தில் பிரத்­யே­க­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். தமி­ழக சாம்­பா­ருக்கு அனைத்­து­வி­த­மான வீடு­க­ளுக்­கும் ஏற்ற பொருட்­களை கண்­ட­றிய நான்கு ஆண்­டு­கள் ஆனது. இந்த உணவு குறிப்பை உரு­வாக்க 3,500 வாடிக்­கை­யா­ளர் வீடு­க­ளுக்­குச் சென்­றோம்,” என்­கி­றார் சஞ்­சய்.

ரோம் ஒரு நாளில் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எந்த நிறு­வ­ன­மும் ஓரி­ர­வில் உரு­வாகி விட­வில்லை. பெரிய நிதி திரட்­டும் வசதி மற்­றும் தொழில்­நுட்­பப் புதுமை கார­ண­மாக புது­யுக தொழில்­மு­னை­வோ­ருக்கு பல விஷ­யங்­கள் எளி­தாக இருக்­கின்­றன. எனி­னும் உணவு ஸ்டார்ட் அப்­க­ளே­னும் எம்­டி­ஆ­ரி­டம் இருந்து நிறைய கற்­றுக்­கொள்­ள­லாம். பெரும்­பா­லான உணவு ஸ்டார்ட் அப்­கள் ஒரு சில சமை­யல் கலை­ஞர்­களை கொண்டு வேக­மாக இயங்­கு­கின்­றன. ஆனால் நம்­ப­கத்­தனை தொடர்­பான கேள்­வி­கள் இருக்­கின்­றன.  சமை­யல் குறிப்­பு­கள் எங்­கி­ருந்த வரு­கின்­றன போன்ற கேள்­வி­க­ளுக்­கான பதில் மேலும் பல உணவு ஸ்டார்ட் அப்­களை உரு­வாக்­க­லாம். இது­வரை பெரும்­பா­லான உணவு ஸ்டார்ட் அப்­கள், வெளி­நாட்டு உணவு குறிப்­பு­களை இந்­திய உண­வு­க­ளோடு வழங்கு வரு­கின்­றன. (பிரெஷ் மெனு, இன்­னர்­செப், ஹோல­செப்). ஆனால் பரந்து விரிந்த இந்­திய உணவு வகை­க­ளில் வாய்ப்­பு­க­ளும் அதி­க­மா­கவே இருக்­கின்­றன.